Advice for Effortless Meditation

London (England)

1980-01-01 Advice for Effortless Meditation, London, UK, 8' Download subtitles: CS,DE,EN,ES,FA,FI,HU,IT,NL,PL,PT,RU,TA,ZH-HANS,ZH-HANT (15)View subtitles:
Download video - mkv format (standard quality): Watch on Youtube: Listen on Soundcloud: Transcribe/Translate oTranscribeUpload subtitles

Feedback
Share
Upload transcript or translation for this talk

வாழ்க்கையில் … அதுபோலவே நுண்ணதிர்வுகள் பாய்ந்து கதிர்வீச்சாகப் பரவுகின்றன.

நீங்கள் செய்யவேண்டியது, அதன் தாக்கத்திற்கு உங்களை உட்படுத்த வேண்டும். எந்த முயற்சியும் செய்யாமல் இருப்பதே சிறந்தவழி. எங்கு உபாதையெனக் கவலைப்பட வேண்டாம். தியானத்தின் போது , பலரை நான் பார்த்திருக்கிறேன். எங்காவது உபாதையிருந்தால் அதிலேயே கவனம் செலுத்துகின்றனர் நீங்கள் கவலைப்பட வேண்டாம். அதை விட்டு விடுங்கள். அது தானாகவே சரிசெய்யப்படும். இது எளிதானது. ஆக நீங்கள் எந்த முயற்சியும் செய்ய வேண்டியதில்லை. இதுதான் தியானமாகும்.

தியானம் என்பது கடவுளின் அருளுக்கு உங்களை உட்படுத்துவதாகும். அந்தக் கருணைக்கே உங்களை எப்படி குணப்படுத்துவது என்று தெரியும். உங்களை குணப்படுத்தி, உங்களுக்குள் எப்படி தன்னை தக்க வைத்துக் கொள்வது என்று தெரியும். உங்கள் ஆத்மாவைப் பிரகாசிக்கச் செய்யும். அதற்கு அனைத்தும் தெரியும். எனவே நீங்கள் என்ன செய்ய வேண்டும், அல்லது என்ன நாமம் கூற வேண்டும், என்ன மந்திரங்களை உச்சரிக்க வேண்டும் என்று கவலைப்பட வேண்டியதில்லை. தியானத்தில் நீங்கள் முற்றிலும் முயற்சியின்றி இருக்க வேண்டும். நீங்கள் முழுமையாக உங்களை உட்படுத்த வேண்டும். அச்சமயம் நீங்கள் முற்றிலும் எண்ணங்களற்று இருக்க வேண்டும். ஒரு வேளை, உங்களால் எண்ணங்களற்று இருக்க இயலாத நிலையில் அந்த நேரத்தில் நீங்கள் உங்கள் எண்ணங்களைக் கவனியுங்கள்.

ஆனால், அதில் ஈடுபாடு கொள்ள வேண்டாம். சூரியன் மெல்ல உதிக்கும்போது,இருள் நீங்கி சூரியக் கதிர்கள் ஒவ்வொரு மூளை முடுக்குகளில் சென்று அந்த இடத்தை முழுவதுமாக ஒளிபெற செய்வதைக் காண்கிறீர்கள். அது போன்று, உங்கள் தேகம் முற்றிலும் ஒளிபெறும். ஆனால் அச் சமயம் , முயற்சித்தாலோ அல்லது உங்களுக்குள் நடக்கும் ஒன்றை தடுக்க நினைத்தாலோ, அல்லது பந்தன் கொடுக்க முயற்சித்தாலோ அதற்குத் தெரியும். தியானத்திற்கு முயற்சியின்றி இருப்பதுதான் ஒரே வழி. ஆனால், நீங்கள் சோம்பலாக இருத்தல் கூடாது. நீங்கள் உன்னிப்பாக அதைக் கவனிக்க வேண்டும். மற்றொருபுறம், மனிதர்கள் உறங்கி விடுகின்றனர். அப்படியல்ல , நீங்கள் கவனத்துடன் இருக்க வேண்டும். நீங்கள் உறங்கினால் ஒன்றும் நடக்காது.

மறுபுறம் நீங்கள் சோம்பலுடன் இருந்தால் ஒன்றும் நடக்காது. நீங்கள் கவனமாக, ஏற்பதற்குத் தயாராக, முழு விழிப்புடன் இருக்க வேண்டும். முயற்சியே இல்லாது – முற்றிலும் முயற்சியில்லாது. நீங்கள் முற்றிலும் முயற்சியற்று இருந்தால் தியானம் சிறப்பாக அமையும். உங்கள் பிரச்சனைகளைப் பற்றியே சிந்திக்காதீர்கள். எந்த சக்கரம் குறையுடன் இருந்தாலும், எதுவாக இருந்தாலும், உங்களை அதற்கு உட்படுத்தினால் போதும். சூரியன் ஒளி பிரகாசிக்கும் போது, சூரியனுக்கு இயற்கை தன்னை உட்படுத்தி, சூரியனின் அருளை முயற்சியின்றி பெறுகிறது. அது எந்த முயற்சியும் செய்வதில்லை. அது உள் வாங்குகிறது. அது கதிரவனின் கதிர்களை உள்வாங்கும்போது , அக்கதிர்கள் செயலாற்றத் துவங்குவதோடு மட்டுமின்றி,செயலைத் தூண்டவும் செய்கிறது.

ஆக, அதுபோல், எங்கும் பரவியுள்ள இறை சக்தி செயலாற்றத் துவங்குகிறது. நீங்கள் திட்டமிட்டு செயல்பட வேண்டியதில்லை. நீங்கள் அதற்கென ஒன்றும் செய்யவேண்டியதில்லை. முயற்சியின்றி, முற்றிலும் முயற்சியற்று இருங்கள். எந்த நாமத்தையும் கூறாதீர்கள். உங்கள் ஆக்ஞா பாதித்திருக்கிறது என்று கவலை கொள்ள வேண்டாம் . இங்கு உபாதை, அங்கு உபாதையென; அது சரிசெய்யப்படுகின்றது . அது இயன்றவரை செயல்பட்டுக் கொண்டிருக்கும் . அது செய்ய வேண்டிய அற்புதங்களைச் செய்யும். நீங்கள் அது பற்றிக் கவலைப்பட வேண்டியது இல்லை.

அதன் பணி அதற்குத் தெரியும். நீங்கள் முயற்சி செய்யும்போது அதற்குத் தடையுண்டாக்குகிறீர்கள் . ஆக, எந்த முயற்சியும் தேவை இல்லை. எந்த முயற்சியுமற்று இருங்கள் . அதுவும் கடந்து போகட்டும், அதுவும் கடந்து போகட்டும் என்று கூறுங்கள். அவ்வளவுதான். மந்திரங்களை உச்சரிக்க வேண்டியதில்லை. முடியாத நிலையில் என் பெயரைக் கூறுங்கள் ஆனால் அதுவும் தேவையில்லை உங்கள் கைகளை என்னை நோக்கி வைப்பதே மந்திரம்தான். அதுவே போதுமானது. இந்நிலையில் அமர்ந்திருப்பதே மந்திரம்தான் .

இதற்குமேல் எதுவும் கூறத் தேவையில்லை. கைகளை இவ்வாறு நாம் விரித்துவைக்க வேண்டும் என்று மனதில் எண்ணமும், உணர்ச்சியும் கொண்ட மாத்திரத்தில் அது செயல்பட வேண்டும். இந்த உணர்வு பூர்வ நிலை முற்றிலும் முழுமையடையும் போது, மந்திரம் கூறத் தேவையில்லை நீங்கள் அனைத்தையும் கடந்து விடுகிறீர்கள். ஆக, ஒருவர் முற்றும் முயற்சியற்று இருக்க வேண்டும் முற்றும் முயற்சியற்று. அவ்வளுவுதான். தியானம் உங்கள் சொந்த முன்னேற்றதிற்கே. அது நீங்கள் பெறவேண்டிய சொந்த முதலீட்டின் லாபமே. ஆனால் நீங்கள் அந்த நிலைக்கு செல்லும்போது நீங்கள் சக்திகளையும் அடைகிறீர்கள். நீங்கள் கவர்னராகும்போது கவர்னருக்கான அதிகாரத்தைப் பெறுகிறீர்கள். அச்சமயம், நீங்கள் யாரைப்பற்றியும் நினைக்க வேண்டியதில்லை.

நீங்கள் யார்மீதும் கவனம் வைக்க வேண்டியதில்லை. ஆனால் அப்படியே பெற்றுக்கொள்ளுங்கள் . அப்படியே பெற்றுக்கொள்ளுங்கள். மற்ற பிரச்சனைகளைப் பற்றி எண்ணாதீர்கள். நீங்கள் முயற்சியற்று இருக்க வேண்டும்..முற்றிலும் முயற்சியற்று இருக்க வேண்டும். அதனை உள்வாங்குபவர்களிடத்தில் மட்டுமே அது சிறப்பாகச் செயல்படும். உங்களிடம் பிரச்சனைகள் உள்ளன. அதனால்தான் இங்கு இருக்கிறீர்கள். ஆனால், உங்களால் அவற்றைத் தீர்க்க முடியாது. அவை தெய்வ சக்தியால் தீர்க்கப்பட வேண்டியவை.

நம்மால் நமது பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது என்பதை முற்றிலும் புரிந்துக் கொள்ள வேண்டும். நம் பிரச்சனைகளைத் தீர்ப்பதென்பது நமக்கு மீறிய செயல். எனவே தெய்வ சக்தியிடம் விட்டு விடுங்கள். நீங்கள் முயற்சியற்று உங்களை அதற்கு உட்படுத்துங்கள். முற்றிலும் முயற்சியில்லாது. இரண்டு கால்களையும் பூமியின் மீது படும்படியாக வசதியாக உட்காருங்கள். இரண்டு கைகளையும் இதுபோல் தளர்த்தி வையுங்கள். வசதியாக இருங்கள். சிரமமின்றி இருக்க வேண்டும். சிறிது நேரம் உட்கார வேண்டுமாகையால் வசதியாக உட்காருங்கள்.

சரி, நல்லது. கவனத்தை, உங்களுக்குள், என்மீது வைக்க முயற்சி செய்யுங்கள். முடிந்தால் என் குண்டலினி மீது . முடிந்தால், என் குண்டலிணிக்குள் நீங்கள் வர முடிந்தால், அச் செயல் முடிவடையும். நல்லது. கைகள் இதுபோல நேராக இருக்க வேண்டும். ஆக முயற்சியில்லாமை என்ற சொல்லே திறவுகோல். நீங்கள் என் முன் அல்லது என் புகை படத்தின் முன் தியானம் செய்கின்ற போதும்.