பூஜை உரை, பூஜையின் அர்த்தம், பார்சிலோனா, ஸ்பெயின். மஹாலக்ஷ்மி பூஜை: பூஜையின் முக்கியத்துவம்

Madrid (Spain)

Feedback
Share
Upload transcript or translation for this talk

இன்று நான் உங்களுக்கு பூஜையின் முக்கியத்துவத்தை கூறப்போகிறேன் (ஒரு ஸ்பெயின் நாட்டு யோகி மறுப்பையர்ப்பாளரிடம் ஸ்ரீ மாதாஜி சொல்கிறார் இந்த மிகிரோபோனை எடுத்துக்கொள் ) முந்தைய காலக்கட்டத்தில் கிறிஸ்துவர்கள் கூட அன்னை மேரி மற்றும் ஏசுவின் சிலைகளோ அல்லது புகைப்படங்களோ (வரைபடங்களோ) அல்லது கண்ணாடி வரைபடங்களின் பிரதிகளையோ வைத்து துதித்து பூஜித்து வந்தனர்.

ஆனால் பின்னர், மக்கள் பகுத்தறிவாளர்களாக ஆக தொடங்கினர் மற்றும் அவர்கள் பூஜையின் முக்கியத்துவத்தை பற்றி புரிந்துகொள்ளவும் இல்லை மற்றும் அவர்களுக்கு அதை பற்றி விளக்க முடியாமல் போனதால் அவர்கள் வழக்கமான முறையில் பூஜை செய்வதை கைவிட்டனர் ஏசுவிற்கு முன்புகூட அவர்களிடத்தில் ஒரு விதமான அளவிடப்பட்ட மற்றும் சிறப்பாக செய்யப்பட்ட, மற்றும் வணங்குவதற்கு ஏற்ற பூஜைக்கான இடமாக ஒரு கூடாரம் உருவாக்கப்பட்டது. எவரை வணங்கினார்களோ, அவரை யஹோவா என்று அழைத்தனர். இப்போது இந்த யஹோவா என்பது நமது சஹஜ யோகாவில் சதாஷிவா அவர்களை குறிப்பிடுகின்றது மற்றும் அன்னை மேரி என்பது மஹாலக்ஷ்மியை குறிப்பிடுகின்றது அன்னை மேரி இதற்கு முன்பும் அவதாரம் எடுத்துள்ளார் அவர்கள் அன்னை சீதையாக அவதரித்தார் மற்றும் அதற்குப்பிறகு ராதாவாக அவதரித்தார் மற்றும் அதற்குப்பிறகு அன்னை மேரியாக அவதரித்தார். தேவீமாஹாத்ம்யம் எனும் புத்தகத்தில் ஏசுவின் பிறப்பைப்பற்றி தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இயேசு, அன்னை ராதையின் மகன் ஆவார். அன்னை ராதையே மஹாலக்ஷ்மி நமது கடவுளாகிய இயேசு கிறிஸ்து மற்றொரு நிலையில் முட்டை வடிவில் பிறந்தார். முட்டையில் பாதி ஸ்ரீ கணேசராகவும், அதில் மீதம் உள்ள பாதி மஹாவிஷ்ணுவாகவும் உருவானது. யேசுநாதரைப்பற்றிய அனைத்து விளக்கமும் மஹாவிஷ்ணுவின் விளக்கவுரையில் இதேபோல் கொடுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ மஹாலக்ஷ்மி, மாசற்ற கருவின் மூலம் உருவான தனது குழந்தையுடன் இந்த பூமியில் வந்தார். இதேபோல் ராதையாக அவர் இதற்கு முன்புகூட செய்துள்ளார் எனவே ஏசுநாதர் மஹாப்ரஹ்மாண்ட உருவமான விராட்டாவின் மகனாவார் உண்மையில் (விஷ்ணு,மஹாவிஷ்ணு), விஷ்ணு இந்த விராட்டா ஆவார்.

இப்பொழுது இந்த விஷ்ணு தத்துவம் விராட்டா ஆகிறது. மற்றும் அவர் இராமராகவும் கிருஷ்ணராகவும் ஆவார் மற்றும் விராட் என்றால் அக்பர் (கடவுள் மிகப்பெரியவர்). எனவே கிறிஸ்துதான் ஓம்காரமும் ஆவார், நுண்ணதிர்வுகளும் ஆவார். முற்றிலும் ஓம்காரத்தின் வடிவமான ஏசுநாதரின் உடலைத் தவிர மற்ற எல்லா அவதாரங்களும் பூமித்தாயின் கொள்கையையோ / தத்துவத்தையோ அல்லது சாராம்சத்தையோ கொண்டு அவர்களது உடல்களை உருவாக்கினர். அவர்களது உடல்களில் பூமியின் பகுதி ஸ்ரீ கணேசரை குறிக்கும் இதனால் நாம் ஸ்ரீ கணேஷரின் சக்தியே கிறிஸ்துவாக அவதாரம் எடுத்தது எனக் கூறலாம். எனவே இக்கரணத்தினால்தான் அவரால் தண்ணீரில் நடக்க முடிந்தது. எனவே அவர் தெய்வீகத்தின் தூய்மையான வடிவம் ஆவார். ஏனென்றால் அவர் நுண்ணதிர்வுகள் ஆவார். அதனால் நீங்கள் எனக்கு பூஜை செய்யும்பொழுது ஏனெனில் நான் நேரில் இருக்கிறேன் .உண்மையற்றது என ஒன்றும் இல்லை. அவர்கள் ஏசுநாதருக்கு பூஜை செய்திருந்தால் அவர்கள் நிச்சயமாக, அவர்கள் கிறிஸ்துவை பூஜை செய்திருக்கிறார்கள் மேலும் அவர் வாழ்ந்த போதும் அவருக்கும் மற்றும் அவரது தாயாருக்கும் பூஜை செய்திருக்கிறார்கள்.

பத்து கட்டளைகளில் கூறப்படுவது என்னவென்றால் சொர்க்கத்தில் படைக்கப்பட்டவைகளையும் மற்றும் பூமியினால் படைக்கப்பட்டவைகளையும் மீண்டும் படைத்தோ மற்றும் உருவாக்கியோ வழி படக்கூடாது . எனவே அவதாரங்கள் சொர்க்கத்தினால் படைக்கப்படுகிறது இந்த நவீன காலகட்டத்தில் மட்டும்தான், அவதாரங்களின் புகைப்படத்தை எடுப்பதற்கு சாத்தியப்படுகிறது ஆனால் பழைய காலகட்டத்தில் அதற்கான சாத்தியமே இல்லை இப்பொழுது பூமித்தாயால் படைக்கப்பட்ட எதுவும் பூமித்தாயிலிருந்தே வெளியே வந்தது அதுதான் ஸ்வயம்பு ஆகும் அதுவே பூமித்தாயால் படைக்கப்பட்டதாகும். இப்பொழுது எல்லா இடத்திலும் நாம் ஸ்வயம்புவை காணமுடிகிறது. மற்றொரு விஷயம் என்னவென்றால் ,சில ஆத்ம விழிப்புணர்வடைந்தவர்கள் கூட அழகான சிலைகள் செய்திருக்கிறார்கள். நான் போர்ச்சுகல் நாட்டிற்கு சென்றிருந்தேன் மேலும் “லேடி ஆப் தி ராக்ஸ்” என்கிற திருவிழா / பண்டிகை நடந்துகொண்டிருந்தது. எனவே நான் அந்த இடத்தை பார்க்க சென்றேன், மற்றும் அங்கே மேரியின் ஒரு மிகச்சிறிய சிலை இருந்தது இந்த பரிமாணத்தில், அதிக பட்சம் 5 அங்குல உயரம் என சொல்லலாம். மற்றும் முகம் என்னுடையது போலவே இருந்தது அப்படியே என்னுடையது போலவே. மேலும் இது இரண்டு குழைந்தைகளால் திடீரென கண்டுபிடிக்கப்பட்டது என அவர்கள் கூறினர் மேலும் இரண்டு குழைந்தைகளால் மறைவுக்குள் ஒளிந்திருந்த முயலை பின்தொடர்ந்து சென்றபோது இது திடீரென கண்டுபிடிக்கப்பட்டது என அவர்கள் கூறினர். ஆகவே இந்தக்குழைந்தைகள் அந்த மறைவுக்குள் சிறிது வெளிச்சத்தைக்கண்டனர் மேலும் அவர்கள் ஒரு பாறையின் கீழ்ப்பகுதி வழியாக பின்தொடர்ந்து சென்றனர். மேலும் அவர்கள் அந்த வெளிச்சத்தின் ஆரம்ப இடத்தை சென்று அடைந்தனர், அங்கே அந்த சிலை இருந்தது.

அவர்கள் அதை வெளியே கொண்டுவந்தனர். அந்த வெளிச்சத்தில் அவர்கள் நடந்தார்கள், மேலும் வெளியில் இருந்த மக்கள் ,நிறைய இருந்தனர் ,அந்த மக்கள் எல்லோரும் கூட்டம் கூடியிருந்தபொழுது எங்கோ உள்ளிரிருந்து சிலையைக்கொண்டு வந்ததைப்பார்த்து வியப்படைந்தனர் அதனால் அவர்கள் அந்த இடத்தில அந்த சிலையை வணங்கி வருகின்றனர் இப்பொழுது இந்த சிலைகள் உங்களுக்கு நுண்ணதிர்வுகள் தருகின்றன, நான் உங்களுக்கு நுண்ணதிர்வுகள் தருவது போல், அனால் நான் கொடுக்கும் அளவு போல அல்ல. மற்றும் மற்ற எல்லா சிலைகள் கூட ,அது நிறைய இருக்கலாம் அவைகூட உங்களுக்கு நுண்ணதிர்வுகள் கொடுக்கலாம் இந்தியாவில் கூட, உங்களுக்கு தெரியும், உங்களில் சிலபேர் கணபதிபுலேவிற்கு சென்றீர்கள். எங்கே கணேசர் வந்தாரோ ,அது மஹாகணேசர் ,அதுதான் கிறிஸ்து பூமித்தாயிலிருந்து வெளியே வந்தது .மஹாகணேசர் ஆகவே உடலின் கீழ்ப்பகுதியை நீங்கள் பார்க்கிறீர்கள் மற்றும் தலையானது ஒரு முழு மலையாகும் மேலும் அங்கே கடல்நீர் கூட இனிப்பாக இருக்கும், மற்றும் அங்கு பல இனிப்பு நீர் கிணறுகள் உள்ளன. உங்களுக்கு ஞாபகம் இருந்தால் என்னுடைய ஒரு புகைப்படம் அங்கே எடுக்கப்பட்டது பலர் புகைப்படம் எடுத்தனர் மேலும் சில புகைப்படத்தில் என் இருதயத்திலிருந்து ஒரு ஒளி வருகிறது, மற்றும் சிலர், சில புகைப்படங்களில் ஒளி இல்லை என்று என்னிடம் கூறினார்கள். ஆனால் அவர்கள் மீண்டும் படம்பிடித்தெடுத்தபொழுது, அதாவது நெகட்டீவ்கள் மறுபடியும் புகைப்படமாக எடுக்கப்பட்டது. மேலும், மீண்டும் அதிலிருந்து புகைப்படத்தை எடுத்தனர். பிறகு அதில் ஒளி வந்தது. ஆகவே ஒருவர் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் தெய்வீக சாம்ராஜ்ஜியத்தில், பலவிதமான அற்புத விஷயங்கள் இருக்கின்றன அதேபோல் தான் பூஜையும் இப்பொழுது நாம் பூஜை செய்யும்பொழுது, முதலாவதாக நீங்கள் ஸ்ரீகணேசரைத் துதிப்பீர்கள். அதன் மூலம் உங்களின் உள்ளே ஸ்ரீ கணேசர் விழித்தெழுந்து நிறுவப்படுவார்.

என்னை ஸ்ரீ கணேசராக வணங்குவதால் உங்களுடைய கள்ளம் கபடமற்ற தன்மை நிறுவப்படும். மேலும் நுண்ணதிர்வு வாரியாகவும், உங்களது நுண்ணதிர்வுகள் அதிகரிப்பதை காண்பீர்கள் மற்றும் உங்களுக்குள் நீங்கள் மிகவும் நிலையாக உணர்வீர்கள். இப்பொழுது நீங்கள் ஸ்ரீகணேசரின் பெயர்களை உச்சரிக்கும்பொழுது, அவரிடம் என்ன குணங்கள் உள்ளன, அவர் உங்களுக்கு என்ன சக்திகளை அளிக்கிறார் என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள். நீங்கள் அந்த குணாதிசயங்களைத்துதிக்கும்பொழுது அந்த குணாதிசியங்களின் சக்திகள் உங்கள் வழியாக வெளிப்பட துவங்கும் இப்படித்தான் தெய்வீகம் செயல்படுகிறது. நீங்கள் அந்த குணாதிசயங்களினால் நிரப்பப்பட்டது போல இருக்கும். பின்னர் நீங்கள் தேவியை, ஆதிசக்தியை துதிக்கிறீர்கள். இப்பொழுது ஆதிசக்திக்கு அவளுக்குள் இருக்கின்ற ஏழு சக்கரங்களும் எழுப்பப்பட்டுள்ளன மற்றும் அவள் இந்த ஏழு சக்கரங்களையும் வைத்து பணிபுரியவேண்டும் முதல் முறையாக அத்தகைய அவதாரம் வந்துள்ளது இது எப்படியென்றால் நீங்கள் முதலில் ஒரு அறையைச்செய்வீர்கள் ,பின்னர் இரண்டாவது அறை பின்னர் மூன்றாவது அறை ,ஏழு அறைகள் மேலும் பின்னர் முழு வீடும் முடிக்கப்படுகிறது உங்களுக்கு சாவிகள் கிடைக்கிறது மேலும் நீங்கள் வீட்டைத்திறக்கிறீர்கள் ,வீடு உங்களுடையதாகிறது அப்படித்தான் என்னால் ஒட்டுமொத்தமாக ஆத்ம விழிப்புணர்வு கொடுக்க / சாதிக்க முடிந்தது. இது முன்பு நடக்கவில்லை, ஆனால் இப்பொழுது இந்த ஏழு சக்கரங்களின் இணைதல் காரணமாக, இது சாத்தியம். எனவே இப்பொழுது நீங்கள் ஆதிசக்தியைத்துதிக்கும்பொழுது ,நான் மஹாமாயாவும் கூட நான் உங்களை போலவே இருக்கிறேன், நான் உங்களை போலவே நடந்து கொள்கிறேன், நான் என்னை உங்களைப்போலவே உருவாக்கிக் கொண்டேன் – உருவாக்குவது மிகவும் கடினம் அனால் நான் செய்துள்ளேன் உங்களுக்கு சகஜ யோகம் மற்றும் உங்களின் சொந்த சக்திகளை புரிய வைப்பதற்காக இந்த உடல் நிறைய விஷயங்களை தாங்கிக்கொள்ள வேண்டியுள்ளது. உதாரணத்திற்கு, நீங்கள் என்னிடம் நாகரீகமில்லாமல் நடந்துகொண்டால் நீங்கள் என்னிடம் முரட்டுத்தனமாகவோ, அவமரியாதையாகவோ நடந்துகொண்டால், கிறிஸ்து மிகவும் கோபம் கொள்வார்.

ஏனைன்றால் பரிசுத்த ஆவிக்கு (ஹோலி கோஸ்ட்) எதிராக எதுவும் இருந்தால் அவர் பொறுத்துக்கொள்ளமாட்டார் என்று அவர் கூறியுள்ளார். அதனால் என்னுடைய இந்த சக்கரம், ஆக்ஞா சக்கரம் கோபத்தை வெளியிட துவங்கும், மற்றும் வேகமாக இயங்கும். இப்பொழுது நான் இதை தாங்கிக்கொள்ளவேண்டும். கிறிஸ்து, நான் உங்களிடம் எவ்வாறு சொல்லவேண்டும் என விரும்பினாரோ அதேபோல் என்னால் உங்களிடம் சொல்ல முடியாது. ஏனெனில் அவர் மிகவும் நேரடியானவர் மேலும் நான் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும் நீங்கள் வருத்தப்படாமல் இருப்பதற்காக. அதற்கும் மேலாக பூஜை செய்யும்பொழுது ,ஒருவேளை நீங்கள் சந்தேகப்படக்கூடியவராக இருந்தால் அல்லது நீங்கள் அதை எதிர்க்கிறீர்கள் என்றால், நீங்கள் நுண்ணதிர்வுகளை ஈர்த்துக்கொள்ள மாட்டீர்கள் மற்றும் எனக்கு பிரச்சனைகள் வரும். ஏனென்றால் இந்த நுண்ணதிர்வுகளானது பாய்ந்துகொண்டிருக்கிறது ஆனால் நீங்கள் அதை வாங்கிக்கொள்வதில்லை. ஆகவே நீங்கள் நுண்ணதிர்வுகளை உறிஞ்சிக் கொள்ளவில்லை என்றால், எனக்குள் நான் அதை எப்படி உள்ளடக்கிக்கொள்வது என்று தெரியவில்லை. அதனால் நான் அதை வெளியெடுக்க நேரம் எடுப்பேன். எனவே இந்த விஷயங்கள் அனைத்தும் மிகவும் குறியீட்டு ரீதியானவை.

நாம் என்னவெல்லாம் செயகிறோமோ அது மிகவும் குறியீட்டுமயமானது மற்றும் அந்த குறியீடானது உண்மையில் செயல்படுகிறது. உதாரணமாக, நீங்கள் யாருக்காவது ஒரு பூவைக் கொடுத்தால், அந்த நபர் உணர்கிறார் – அந்த நபர் மிகவும் மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாகவும் உணர்கிறார், மேலும் நன்றியுணர்வு வரும். எனவே நீங்கள் எனக்கு வழங்கும்போது, உதாரணமாக, பூக்களோ அல்லது தண்ணீரைப்போல எதுவாக இருந்தாலும், அப்பொழுது தத்துவங்கள் (பஞ்ச பூதங்கள்) மகிழ்ச்சி அடைகின்றன, மற்றும் சக்கரங்களில் வசிக்கும் தெய்வங்கள் அனைவரும் மகிழ்ச்சியடைகின்றனர். மேலும் பிறகு அவர்கள் அவர்களின் குணங்களின் நுண்ணதிர்வுகளையும் மற்றும் அவர்களின் ஆசிர்வாதங்களையும் உங்கள் மீது வெளிப்படுத்துவார்கள். அவர்கள் உங்களுக்கு அவர்களின் குணங்களையும் மற்றும் ஆசீர்வாதங்களையும் அளிப்பார்கள். அப்படித்தான் தெய்வீகம் செயல்படுகிறது. மேலும் பூஜைக்குப்பின் முழு காரியங்களும் வேலை செயகிறது என்பதை படிப்படியாக நீங்கள் உணர்வீர்கள். இப்பொழுது நாம் இந்த நேரத்தில் பூஜை செய்துகொண்டிருக்கிறோம் மேலும் உலகமெங்கும் இங்கே ஒரு பூஜை நடந்துகொண்டிருக்கிறதென்று மக்களுக்குத்தெரியும், எனவே அவர்களும் தியானத்தில் அமர்ந்து கொண்டிருக்கிறார்கள் மற்றும் அவர்களுக்கும் ஆசிர்வாதங்கள் கிடைக்கிறது. அவர்களும் எப்பொழுது பூஜை தொடங்கும் என்ற இந்த தருணத்திற்காக காத்திருக்கிறன்றனர். எனவே நாம் அவர்களுக்கு பதினொரு மணி அல்லது அதேபோல ஒரு நேரத்தைக்கொடுக்கிறோம்.

பதினொன்று மணிவரை நாம் எல்லோரும் உட்காரவேண்டும் மற்றும் அவர்கள் பதினொன்று மணிக்கு தொடங்குவர் இப்பொழுது அவர்களுக்கு அதே ஆசீர்வாதங்கள் கிடைத்துக்கொண்டிருக்கிறது நீங்கள் பூஜை செய்து கொண்டிருப்பினும் ஆனால் அவர்களுக்கு தியானத்திலும் கூட ஆசீர்வாதங்கள் கிடைக்கிறது. நீங்கள் இன்னும் அவ்வளவு புத்திசாலியாக இல்லாவிட்டால், பூஜையில் முக்கியமான சில விஷயங்கள் எல்லாம் உங்களுக்குத் தெரியாவிட்டால், அது ஒரு பொருட்டல்ல. ஏனென்றால் நீங்கள் அதைப்பற்றி அறியாமையில் இருந்தால், அப்பாவியாக இருந்தால், கடவுளுக்குத்தெரியும் ,அவர் மன்னிப்பார் ,அவர் பொருட்படுத்தமாட்டார் நீங்கள் ஏதேனும் தவறுகள் அல்லது ஏதாவது செய்தால் நீங்கள் கவலைப்படக்கூடாது. அப்படியே பணிவான இதயத்துடன், நீங்கள் விரும்பும் வழியில் செய்யுங்கள். படிப்படியாக, நீங்கள் கற்றுக் கொள்வீர்கள். அனால் உங்களுக்குத்தெரியும் என்ற போதும், நீங்கள் வேண்டுமென்றே தவறுகள் செய்தால், பிறகு அது நல்லதல்ல. நாம் நமது குழந்தைகளை மன்னிப்பதுபோல, கடவுளும் அப்பாவிக் குழந்தைகளை மன்னிக்கிறார். எனவே நீங்கள் அதைப் பற்றி மிகவும் பதற்றம் இல்லாமல் இருக்க வேண்டும். மேலும் உங்கள் இதயத்தின் ஆனந்தத்திற்க்காக மட்டும் அதைச் செய்யுங்கள். கடவுள் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக!

மடியில் உட்காருவது அவனுக்கு கடினமாக இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். அவர் விரும்பினால் அவர் பின்னால் உட்காரலாம். இந்த சிறிய பையனுக்கு அப்படி உட்கார முடியாத அளவுக்கு அதிகமாக இருக்கிறது. நீங்கள் வசதியாக உட்காரலாம், சௌகரியமாக இருங்கள். வருத்தப்படுவதற்கு எதுவும் இல்லை. இப்போது, அவர்கள் பாதங்களைக் கழுவ வேண்டும். குழந்தைகள் பாதங்களைக் கழுவ வேண்டும். மற்றும் அந்த நேரத்தில் நாம் ஸ்ரீ கணேசரின் புகழைப் பாடுவோம்.