Guru Puja: Cosmic Consciousness

Gmunden (ஆஸ்திரியா)

Feedback
Share

உங்கள் அன்பின் இந்த அழகிய வெளிப்பாட்டைக் கண்டு பிரமிக்கிறேன். அத்தகைய கவனமும் படைப்பாற்றலும். வெளிப்புற இயற்கையை இங்கு மிகவும் அழகாக உருவாக்கபட்டதற்கு நான் மிக அதிர்ஷ்டசாலியான குருவாக இருக்க வேண்டும். இதைப் பார்த்த பிறகு, எந்த குருவும் தனது இதயம் முழுமையாக உருகுவதில் இருந்து தப்ப முடியாது. உண்மையில், என் சீடர்கள் மிகவும் புத்திசாலி மக்கள். அவர்களால் எந்த குருவையும் நடுநிலையாக்க முடியும். இதனால், சீடரை ஒழுங்குபடுத்துவதற்கு பயன்படுத்தப்படும் குருவின் கோல், தாமரையாக உரு மாறும். ஒவ்வொரு முறையும் சஹஜ யோகிகள் தெய்வீகத்துடன் ஒன்றாவதைப் பார்ப்பது ஒரு அழகான ஆச்சரியம். அவர்களின் மகிழ்ச்சியின் வெளிப்பாடு மற்றும் தெய்வீகத்தின் கருத்தாக்கத்தை நீங்கள் மிக தெளிவாகக் காணலாம். இன்று நான் அமர்ந்திருப்பது போல தான், நீங்கள் அனைவரும் தேவனுடைய ராஜ்யத்தில் அமர வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நாம் இப்போது பிரம்மா எனும் அந்த அண்ட விழிப்புணர்வின் ஒரு அங்கமாக இருப்பதை உணர வேண்டும் உருவாக்கி, ஒருங்கிணைத்து, அனைத்து விவரங்களையும் திட்டமிட்டு, அதன் வெளிப்பாட்டின் மூலம் அதன் படைப்பை நேசிப்பது அந்த அண்ட விழிப்புணர்வு ஆகும்.

நாம் அதில் இருப்பது மட்டுமின்றி, அதைக் கையாளவும் முடியும். நாம் அதை ஒழுங்குபடுத்தலாம், அதைப் பயன்படுத்தலாம், அதைச் செயல் படுத்தலாம். இந்த நிலையில் நாம் இருந்தால் தான் நாம் குரு ஆவோம். குரு என்றால் பூமியின் ஈர்ப்பு விசையை விட உயர்ந்தது, அல்லது பூமியின் ஈர்ப்பை விட வலிமையானது. பூமியின் ஈர்ப்பு என்றால் என்ன? மேலோட்டமாக பார்த்தால், நம்மை தரையில் வைத்திருக்க நம் உடலில் செயல்படும் ஒரு விஷயமாக புரிந்துகொள்கிறோம் பல யானைகள் நம் தலையில் நிற்ககும் ஒரு பெரிய வளிமண்டலம் உள்ளது மேலும் பூமிஅன்னை நம்மை தன்னை நோக்கி இழுக்கும் ஈர்ப்பு உள்ளது. மேலோட்டத்தில் நாம் ஈர்ப்பு விசையை இவ்வாறுப் புரிந்துகொள்கிறோம் மேலோட்டத்தில் சில சமயங்களில் குரு தத்துவத்தையும் புரிந்துகொள்கிறோம் மேலோட்டமாக பார்த்ததால், ஒரு நல்ல குரு என்பவர், உங்களை அவரை நோக்கி ஈர்க்கும் நபர் என்று நினைக்கிறோம். உடல் ஈர்ப்பு, அல்லது மேலோட்டமான மற்ற ஈர்ப்புகளாக இருக்கலாம். அதனால்தான் மக்கள் எப்போதும் தவறான, மேலோட்டமான குருக்களிடம் செல்கிறார்கள். ஆனால் பூமி அன்னையின் ஈர்ப்புக்கு மேலே இருப்பவர், வெளிப்புற, நுட்பமான, மிக நுட்பமான, மற்றும் மிக மிக நுட்பமானவற்றிக்கும் – இந்த எல்லா ஈர்ப்புகளுக்கும் அப்பால் இருப்பவர் – அவர் தான் குரு.

பொதுவாக மக்கள் உடல் உறுப்பு, உடல் வழியாக செயல்படும் ஈர்ப்பு விசை வழியாக, மற்றவர்களை நோக்கி ஈர்க்கப்படுவதை நாம் காண்கிறோம். ஒரு சினிமா நடிகரைப் போல தோற்றமளிக்கும் ஒரு குரு மிகவும் பாராட்டப்படுகிறார். அழகின் முழுமையை அவர்களால் பார்க்க முடியாது, ஒரு அம்சத்தை மட்டும் காண்கின்றனர்.இந்தியாவில், தவறான குருக்களாக வந்த முந்தைய குருக்கள், தங்கள் முகங்களில் கூட சாயம் போட்டு கொண்டனர். அல்லது அவர்கள் சிறப்பு அலங்காரக்காரர்களிடம் செல்வார்கள், அவர்கள் தலைமுடியை சங்கராவின் ஜடாக்கள் போலவும், கண்கள் பெரிய கருப்பு நிலக்கரியாலும் வரையப்பட்டிருக்கும். மேலும் உடல் முழுவதும் ஒரு வேடிக்கையான வகை பொடியால் மூடப்பட்டிருக்கும். அல்லது அவர்கள் குங்குமப்பூவைப் பயன்படுத்தாமல் குங்குமப்பூ நிறத்தில் ஒரு கஷயா(காவி) என்ற துணியை அணிவார்கள். இரண்டு ரூபாயில் நீங்கள் அதைப் பெறலாம். அத்தகைய நபரை நோக்கி மக்கள் ஈர்க்கப்படுவார்கள். அவர்கள் மேலோட்டமான ஈர்ப்பு விசையை அதிகரிக்க யானை மீது உட்கார்ந்து தெருக்களில் செல்வார்கள். மக்கள் அவர்களுக்கு தலைவணங்குவார்கள்.

அவர்கள் விரும்பியதை அவர்களுக்குக் கொடுப்பார்கள். இது யாரையும் உயர்த்தாது. எந்த உடல் ஈர்ப்பும் உங்களை அடிமைப்படுத்தும், உங்களுக்கு சுதந்திரம் கொடுக்காது. இது உடல்சார்ந்த அடிமைத்தன பழக்கங்களை கொடுக்கும், மேலும் அது உங்கள் குருவுக்கு உங்களை அடிமைப்படுத்தும். பல்வேறு வகைகளில் கவர்ச்சியாக இருக்க அவருக்குத் தெரிந்தால். பிரபஞ்ச விழிப்புணர்வின் முழு புரிதலையும் ஒரு சிறிய வாக்கியத்தில் வைக்கலாம்: அதாவது, நட்சத்திரங்கள், பூமி, சந்திரன் அல்லது சூரியனின் ஈர்ப்பு விசையால் அதை ஈர்க்க முடியாது பூமி தாயிடமிருந்து வரும் மற்ற ஈர்ப்புகள் எல்லாம் உணவு, பேராசை, காமம் போன்றவைக்காக. பொருள்முதல்வாதத்தின் மிக மோசமான நிலையில். இது பொருட்களில் இருந்து வருகிறது. நீங்கள் ஆரம்பித்தவுடன், பொருட்களில் இருந்து வரும் அனைத்திற்கும் நீங்கள் பழகிவிட்டால், அதற்கு அடிமையாகி விடுவீர்கள்.ஒரு குருவாக அல்ல. எனவே, பொருள் ஈர்ப்பிற்கு அப்பால் சென்று ஒரு நல்ல குருவாக இருக்க வேண்டுமென்பதே ஒருவருக்கு முதல் முயற்சியாக இருக்க வேண்டும்.

ஒரு நுட்பமான வழியில் இவ்வாறு நடப்பதைக் காணலாம் : ஒரு பெண் அல்லது ஒரு மனிதர் சஹஜ யோகத்தில் ஒரு ஆசிரமத்தை வாங்குகிறார். ஒரு சஹஜ யோகி அந்த ஆசிரமத்தில் வாழத் தொடங்குகிறார். அந்த வீட்டின் உரிமையாளர், அந்த வீடு மற்றும் பொருட்களை பற்றி கவலைப்பட தொடங்குகிறார். அந்த வீட்டில் உள்ள சீடர்கள் அல்லது சஹஜ யோகிகளின் ஆன்மிக வளர்ச்சியை பற்றி கவலைப்படாமல். முழு கவனமும் வீட்டில் இருக்கும் பொருட்களைப் பராமரிப்பதை நோக்கி இருக்கிறதே தவிர, அண்ட விழிப்புணர்வில் உயர வேண்டிய சஹஜ யோகிகளின் ஆன்மீக விடுதலையில் இல்லை. அத்தகைய ஒருவர், தான் ஒரு குரு அல்லது ஒரு சஹஜ யோகி என்று நம்ப ஆரம்பித்தால், அவர் மிக தவறாக நினைக்கிறார். உங்கள் கவனம் எங்கே இருக்கிறது என்பதுதான் முக்கியம். நீங்கள் குரு என்றால், உங்கள் கவனம் எங்கே இருக்கிறது? உங்கள் கவனம் உங்களின் நலன் மற்றும் பிறரின் நலனை திருத்தம் செய்வதில் இருந்தால், நீங்கள் முதலில் சஹஜ யோகி ஆவீர்கள். மற்றும் நீங்கள் பொருள்முதல்வாதத்தின் ஈர்ப்பு விசைக்கு மேலே உயர்ந்தவுடன், நீங்கள் குரு என்று அழைக்கப்படலாம்.

வாழும் எதற்கும், ஒரு கட்டம் வரை ஈர்ப்புக்கு எதிராக உயரும் திறன் உள்ளது அது வரையறுக்கப்பட்டது. உதாரணமாக, பூமி அன்னையிலிருந்து வெளியே வந்து மேல்நோக்கி மரங்கள் வளருவதைப்போல, ஒரு குறிப்பிட்ட அளவு வரை. ஒவ்வொரு வகை மரத்திற்கும் அதன் சொந்த வரம்புகள் உண்டு கேதுரு மரம் கேதுரு மரமாக இருக்கும். ரோஜா ரோஜாவாகவும் இருக்கும். அனைத்தும் ஈர்ப்பு விசையால் கட்டுப்படுத்தப்படுகிறது ஆனால் ஒரு விஷயம் மட்டும் வரம்புகள் இன்றி ஈர்ப்பு விசைக்கு எதிராக உயர்கிறது அது உங்கள் குண்டலினி. அதைக் கட்டுப்படுத்த விரும்பாத வரை அதை ஈர்ப்பு விசையால் கட்டுப்படுத்த முடியாது நீங்களும் உங்கள் சுயமும் தவிர வேறு எதுவும் அதை கட்டுப்படுத்த முடியாது எனவே, நீங்கள் உங்கள் குண்டலினிக்கு பொறுப்பாக ஆனவுடன் நீங்கள், ஈர்ப்பு விசை என்று சக்தியை கடந்து ஒரு படி மேலே செல்கிறீர்கள். பின்னர் ஐந்து கனிமங்களின் சுழற்சி ஒன்றாக பிணைக்கப்பட்டுகிறது. ஐந்து கனிமங்களும் ஒன்றும் வீணாக்காமல், கெடாமல், அனைத்தும் ஒழுங்காக இருக்கும் வகையில், சுழற்சியில் செல்ல வேண்டும். ஆனால் இந்த சுழற்சி குண்டலினியின் விழிப்புணர்வால் மட்டுமே உடைக்கப்படுகிறது. ஏனெனில், நீங்கள் மிக உயர்ந்த நிலையான அண்ட விழிப்புணர்வுக்குள் நுழைகிறீர்கள் அதை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்று உங்களுக்குத் தெரியும்.

அந்த அண்ட உணர்வு பரம தத்துவம் ஆகும். இது, கோட்பாடுகளின் கோட்பாடு. அனைத்து கோட்பாடுகளையும் கட்டுப்படுத்தும். எனவே இது, இந்த ஐந்து கூறுகளின் கொள்கைகளையும் கட்டுப்படுத்துகிறது. அது மன சக்தியைக் கட்டுப்படுத்துகிறது. பரிணாமத்தை இது கட்டுப்படுத்துகிறது. மற்றும் பிறரை பரிணாம வளர்ச்சியடைய செய்யும் சக்தியை உங்களுக்கு வழங்குகிறது. எனவே, இந்த பெரிய பிரம்ம சக்தி உங்கள் தாமரை பாதங்களில் உள்ளது. ஒருவேளை சஹஜ யோகிகள் தாங்கள் என்ன சாதித்திருக்கிறார்கள் என்பதை உணராமல் இருக்கலாம். ஒரு ஆதி குருவுக்கும் மற்றும் ஒரு குருவுக்கும், சத்குரு என்று நான் சொல்வேன், அவருக்கும் இடையே உள்ள ஒரே வித்தியாசம், ஆதி குருவுக்கு தான் கட்டுப்படுத்தும் சக்தி என்று அவருக்குத் தெரியும்.

அவர் பிரம்ம தத்துவத்துடன் முழுமையாக ஒன்றியிருப்பதை அவர் அறிவார். அவர் அதிகாரமாக பேசும் முறையில், அவர் முழு நம்பிக்கையுடன் அவர் பேசும் முறை..அவரது மனதில் எந்த சந்தேகமும் இல்லை. அவருடைய போதனைகளில் அவர் சொல்வார், “நான் நிச்சயமாக முழு நம்பிக்கையுடன் பிரம்மா தத்துவத்துடன் உள்ளேன்” நான் பிரம்மா என்று நான் கூறுவேன். நான் அந்த தத்துவம் அனைத்தையும் கட்டுப்படுத்துகிறேன், ” அவரை ஒரு தீர்க்கதரிசி ஆக்குகிறது. ஏனென்றால், அவர் என்ன சொன்னாலும், தீர்க்கதரிசனம் கூறினாலும் கடந்த காலத்தைப் பற்றி அவர் என்ன சொன்னாலும் அது உண்மை. அவர் அதை அறிவார்; அவருக்கு எந்த சந்தேகமும் இல்லை. மோஸஸ் அதிகாரத்துடன் பேசிய விதம், அதிகாரத்துடன் சாக்ரடீஸ் பேசியது, அதிகாரத்துடன் லாவோத்ஸே பேசியது – இந்த மாபெரும் ஆதி குருக்கள் அனைவரும் ஆதி நாத் முதல் சாய் நாத் வரை, “நீங்கள் இப்படிச் செய்தால் நல்லது, இப்படிச் செய்தால் நல்லது” என்று கூறவில்லை இல்லை! “இதுதான் முறை. இவ்வாறு செய்யுங்கள்” என்றனர். ஆனால் நவீன காலங்களில் அந்த குருக்கள் செயல் புரியாமல் போகலாம் அதனால்தான் ஒரு தாய் வர வேண்டியிருந்தது.

முதலில் உங்களுக்கு ஆன்ம விழிப்புணர்வு கொடுக்க. ஏனெனில் இந்த குருக்கள் இன்னொரு விஷயத்தை உணரவில்லை – அவர்களின் சீடர்களுக்கு ஒன்றும் புரியவில்லை என்று. அவர்கள் என்ன செய்தாலும், அது ஒரு பிரமிப்பில் செய்கிறார்கள். ஆனால் பிரமிப்பில் புரிதல் இல்லை முந்தையவர்களுக்கு கூட இருந்திருக்கலாம். ஆனால் பின்னர் வந்த தலைமுறைக்கு இல்லை. எனவே அவர்கள் குருக்களை ஒரு முகப்பாக மாற்றினர் அந்த முழு கட்டிடத்தையும் சொந்தம் கொண்டாடினர். அனைத்து வகையான பிரச்சினைகளையும் உருவாக்கி, உலகளாவிய உணர்வையும் கூட்டுத்திறனையும் கொலை செய்தனர். ஏனெனில் பிரம்ம தத்துவம் என்பது கூட்டுத்தன்மையின் சக்தி. அது எல்லாவற்றிலும் உள்ளது – அணுவில், மூலக்கூறில், மனித இதயத்தில். எல்லா இடங்களிலும் இது பிரதிபலிக்கிறது, பிரதிபலிப்பாளரைப் பொறுத்து.

மேலும் அது கட்டுப்படுத்துகிறது. இந்த புரிதல் அவர்களுக்கு இருந்தது ஆனால் மனித புரிதல் ஒருவேளை அவர்களிடம் இல்லை. நீங்கள் அவர்களிடம் இன்று ஒரு விஷயத்தை கூறினால் நாளை அவர்கள் அதை மறந்து விடுவார்கள். எனவே, உங்கள் அனைவருக்கும் ஆத்ம விழிப்புணர்வு இருக்க வேண்டியது அவசியம் ஆனது. இல்லையென்றாலும் ஆத்ம விழிப்புணர்வு இல்லாமல் என்ன பயன்? கண்கள் இல்லாத மக்களிடம் வண்ணங்களைப் பற்றி பேசி என்ன பயன்? எனவே ஆத்ம விழிப்புணர்வு கொடுக்கப்பட வேண்டும். ஆனால் அதை உறுதியற்ற தன்மையுடன் செய்யக்கூடாது. ஒரு குரு நுண்ணதிர்வுகளை சரியாக உணராதபோது அவர் ஆத்ம விழிப்புணர்வு கொடுக்கும் போது, உறுதியற்று இருக்கிறார். ஆனால் அவர் தெளிவாக உணரும்போது கூட அவர் அதிகாரத்துடன் விஷயங்களைச் சொல்ல மாட்டார்.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அதிகாரம் என்பது ஆக்கிரமிப்பு என்று அர்த்தமல்ல. அதிகாரம் என்பது உங்களிடம் இருப்பதால், நீங்கள் அதை வெளிப்படுத்துகிறீர்கள். இப்போது இந்த ஒளி என் முகத்தில் பிரகாசிக்கிறது. அது பிரகாசிக்கிறது; இது ஆக்கிரமிப்பு அல்ல. ஏனெனில் அது அதனுடைய குணம். அது பிரகாசிக்க வேண்டும், எனவே அது பிரகாசிக்கிறது அதேபோல் ஒரு குரு சீடர்களுக்கு முன்பாக பிரகாசிக்கிறார். “பிரகாசித்தல்” என்ற இந்த வார்த்தையை புரிந்துகொள்வது மிகவும் எளிதானது. உங்களிடம் ஏதேனும் அழுக்கு இருக்கும்போது, ​​பிரகாசிப்பதில்லை. எப்போதும் பிரகாசிக்கும் தங்கம் கூட, நீங்கள் அதை மண்ணின் கீழ் வைத்தால், அது பிரகாசிக்காது. எனவே நீங்கள் கழுவ வேண்டும் அதை சுத்தம் செய்து, அதை நன்றாக தேய்க்க வேண்டும்.

பின்னர் பிரகாசிக்கிறது. ஆனால் குரு தத்துவத்தில் நீங்கள் அடிப்படைகளிலிருந்து தொடங்க வேண்டும். தங்கம் தன் சொந்த நிலைக்கு வருவதற்கு முன்பு பல விஷயங்களுடன் அது கலந்திருந்தது. எனவே அதை சூடாக்கி, உருக்கி சல்லடையில் சலித்து, பல முறைகளை செயலாக்கி தங்கமாக மாற வேண்டியிருந்தது. எனவே நீங்கள் சஹஜ யோகிகளாகியவுடன், நீங்கள் தங்கமாகிவிட்டீர்கள். இப்போது, ​​இரண்டாவது பணி, இந்த தங்கத்தை பிரகாசித்திக் கொண்டே இருக்க வைப்பது. மூன்றாவது, நீங்கள் ஒருபோதும் களங்கப்படாமல் இருக்க, உங்கள் தாயின் கிரீடத்தில் ஒரு இடத்தை பிடிப்பது. இந்த மூன்று நிலைகளுக்குள் ஒருவர் வர வேண்டும். முதலில் நீங்கள் ஒரு குரு என்று உங்களை நீங்களே தீர்மானிக்க, பூமிதாயின் ஈர்ப்புக்கு கட்டுப்படாத உங்கள் சொந்த ஈர்ப்பு உங்களுக்கு இருக்க வேண்டும், இது குறைந்தபட்சமாகும். இதற்கு நீங்கள் வெளியே காவி அணிய வேண்டும் என்று அர்த்தமல்ல நீங்கள் ஒரு சன்யாசி என்று கூறும் ஆடை.

ஆனால் உள்ளே இருந்து நீங்கள் ஒரு சன்யாசியாக இருக்க வேண்டும். இப்போது, உள்ளே ஒரு சன்யாசியாக இருப்பவருக்கு ஒரு பெரிய வங்கி இருப்பு ஒருவேளை இருக்கலாம். ஆனால் அதைப்பற்றி உங்களுக்கு எதுவும் தெரியாது மிகவும் பற்றின்றி இருப்பீர்கள். அதிலிருந்து என்றைக்கும் பிரிய தயாராக இருப்பீர்கள். ஒரு சன்யாசி காமத்திற்கு மேலே இருக்க வேண்டும். காமம் என்றால் என்ன, இந்த காம ஈர்ப்பு என்ன என்று தெரியாக் கூடாது. அவரது குண்டலினி மூலமும் மூலதாரா மூலமும் அவரால் இதனை அடைய முடியும். ஏனென்றால் இப்போது ஈர்ப்புக்கு மேலே உயர உங்களுக்கு திறன் உள்ளது. நீங்கள் இப்போது அந்த சக்தியைப் பெற்றுள்ளீர்கள் உங்கள் கவனத்தை ஈர்த்து முற்றிலும் பாழடைய செய்யும் இந்த காமத்திற்கு மேலே உயரும் சக்தியை. ஆனால் சஹஜ யோகாவில் நம்மிடம் அனைத்தும் இருக்கிறது.

இந்திய வீதிகளைப் போல – நீங்கள் அதில் நவீன கார்கள், ரோல்ஸ் ராய்ஸ், மெர்சிடிஸ் போன்றவற்றையும் காணலாம். மாட்டுவண்டியையும் காணலாம் பசுக்கள் மற்றும் எருமைகள் எல்லாவற்றையும் காணலாம். அதே போல், சஹஜ யோகாவில் நம்மிடம் அனைத்து வகையினரும் உள்ளனர். மிகச் சிறந்தவர்கள் மற்றும் மாசற்ற நிலையை அடைய முயற்சித்து, அதில் கவனத்தை செலுத்தி, செயல் புரிபவர்கள். ஆனால் முற்றிலும் பயனற்றவர்களும் உள்ளனர். சஹஜ யோகத்தில் தொங்கிக் கொண்டு சஹஜ யோகத்தை தங்கள் சொந்த புகழுக்காகவும், சொந்த லாபங்களுக்காகவும் பயன்படுத்துபவர்கள். எதற்காக என்று எனக்குத் தெரியவில்லை! சஹஜ யோகா பெயரில் விரிவுரைகளை வழங்கி மோசமாகப் பிடிப்படுபவர்களை நான் பார்த்திருக்கிறேன். அந்த ஈர்ப்பு உங்களில் செயல்படுகிறது, நினைவில் கொள்ளுங்கள். அந்த பூமி தாயின் ஈர்ப்பு.

அவ்வகையான ஒரு ஈர்ப்பு அமைந்திருக்க வேண்டும். ஆனால் அவற்றில் சிலர் புழுக்களைத் தவிர வேறில்லை அவர்களால் உயர்ந்த நிலைக்கு செல்ல முடியாது. மேலும் வெளியாட்கள் அந்த புழுக்களை மட்டுமே பார்த்து சஹஜ யோகா நல்லது இல்லை என்று சொல்ல முயற்சிக்கின்றனர். உங்கள் குண்டலினிக்கு சக்தி இருக்கிறது, உங்களை மிக உயர்ந்தவர்களாக மாற்றும் சக்திகள் அது அனைத்தையும் கொண்டுள்ளது. ஒரு சாதாரண புல் கேதுரு மரம் ஆகலாம். அதற்கு வரம்புகள் இல்லை. ஆனால் உங்களுக்கு உங்கள் மீதும் சஹஜ யோகா மீதும் நம்பிக்கை இருக்க வேண்டும் உங்களுக்கு உங்கள் மீதோ சஹஜ யோகா மீதோ நம்பிக்கை இல்லையென்றால், எதையும் செய்ய முடியாது. ஆனால் எல்லாவற்றிலும் மிக உயர்ந்தது நேர்மை ஆகும். இதனை யாரும் உங்களுக்குள் விதைக்க முடியாது. ஒரு குருவின் விளக்கங்கள் பல உள்ளன.

ஒரு சத்குரு எப்படி இருக்க வேண்டும் என்று. மேற்கில் இல்லை, நான் பார்தத்தில்லை ஏனென்றால் அவர்கள் ஒருபோதும் குருக்களை நம்பவில்லை என்று நான் நினைக்கிறேன், ஆனால் அவர்களுக்கு நிறைய குருக்கள் உள்ளனர் உதாரணமாக போப் என்ற மற்றொரு பயங்கரமான, போலி குரு இங்கே அமர்ந்திருக்கிறார். பின்னர் இன்னொருவர், கேன்டர்பரி பாதிரி அங்கே அமர்ந்திருக்கிறார். அவர்கள் அனைவரும் தவறான குருக்கள், குண்டலினியைப் பற்றி எதுவும் தெரியாது அவர்களுக்கு பிரம்மாவை பற்றி எதுவும் தெரியாது. அவர்கள் இந்திய கருத்துக்களை கண்டிக்க விரும்புகிறார்கள் அவை இந்தியாவை சேர்ந்தவை என்பதால் அல்ல, ஆனால் சஹஜ யோகா நிறுவப்பட்டால், அவர்களின் வருவாய் அனைத்தும் இழக்க நேரிடும் என்பதால். பணம் மற்றும் கிரீடங்களை எங்கிருந்து பெறுவார்கள்? எனவே அவர்கள் தாங்கள் தான் தீர்வு என்று கோரா விரும்புகிறார்கள் – ஒன்றும் சாதிக்காமல், கிறிஸ்துவின் பெயரைக் கெடுத்து, அவருக்கு எதிரான அனைத்து வகையான விஷயங்களும், முட்டாள்தனமாக, தெய்வீகத்தை அறியாமல் கூறுகிறார்கள். இஸ்லாமியத்தில் பலர், பயங்கரமான மனிதர்கள் உள்ளனர். முகமது சாஹிப்பிற்கு எதிர்மறையாக செய்கிறார்கள் முகமது சாஹிப்பின் பெயரில் அனைத்து தவறான விஷயங்களையும் செய்கின்றனர். ஒருவர் அதைப் புரிந்துகொள்வதற்கு : ஒரு திருடன் தான் ஒரு திருடன் அல்ல என்று ஏமாற்ற ஒரு ராஜாவைப் போல மாறுவது போல ஆகும்.

பின்னர் திருட்டை செய்வது. இப்படித்தான் அவர்கள் அனைவரும் உள்ளனர். இந்தியாவில் இவ்வகையைச் சேர்ந்த பல பிராமணர்கள் உள்ளனர். இந்த ஆசாரியத்துவம் செல்ல வேண்டும். பூசாரி எங்கிருந்தாலும், அது ஒரு குற்றமிழைக்கும் கூட்டம் என்று தெரிந்துக் கொள்ளுங்கள். இது ஒரு அதிநவீன குற்றமிழைக்கும் கூட்டம். எந்த சஹஜ யோக குருவும் எந்த பணத்தையும் எடுத்துக்கொள்ளப் போவதில்லை, யாரும் அவர்களை வணங்கப்போவதில்லை. அவர்கள் எந்த விதமான சிறப்பு கவனத்தையும் எடுத்துக்கொள்ள போவதும் இல்லை. அதாவது, ஒரு இடத்தில் ஒரு ஆசிரமம் இருந்தது குருவும் குருணியும் மிகவும் முக்கியமானவர்கள் ஆனார்கள் மற்றும் குருவி தனது தேநீரை ஒரு சரியான மேசையுடன் அவள் படுக்கைக்கு அனுப்பப்பட வேண்டும் என்று விரும்பினாள், அவர் ஒரு சிறு-மாதாஜி ஆனார் – அல்லது ஒரு பெரிய மாதாஜி எனலாம். ஏனென்றால் நான் எதையும் கோருவதில்லை அவள் கோரினாள்.

நான் ஒருபோதும் எதையும் கோருவதில்லை நீங்கள் எதைச் செய்தாலும் அது எனக்கு மிகவும் பெரியது. அவர்கள் இவ்வாறு தாங்கள் பெரிய குருக்கள் என்று நினைத்தார்கள் இந்த சலுகையையும் அந்த சலுகையையும் கேட்டு…ஒரு குரு மிகவும் கஷ்டப்பட வேண்டும் அவர் எவ்வாறு கட்டளையிட முடியும்! அவர் எளிமைக்கும் பற்றின்மைக்கும் முன்மாதிரியாக இருக்க வேண்டும் அவ்வாறே அவர் மரியாதை பெறப் போகிறார். சஹஜ யோகாவில், யாரும் ஒரு குருவை, சஹஜ யோகிகள் மூலம் இவ்வளவு பணம் சம்பாதித்துள்ளார் என்ற காரணத்திற்காக அவரை மதிக்கப் போவதில்லை. ஆனால் சஹஜ யோகிகளுக்கு பணத்தின் மீது கவனம் இருந்தாலே, அவர்கள் சஹஜ யோகிகள் இல்லை என்று பரிந்துரைக்கிறது. உதாரணமாக, நீங்கள் பணம் வசூலிக்க விரும்பியபோது – அதாவது, நான் ஒருபோதும் வீட்டையோ எதையோ கேட்கவில்லை எனக்காக ஒரு வீடு இருக்க வேண்டும் என்ற யோசனை சில சஹஜ யோகிகளிடம் இருந்து வந்தது என்னை யார் வீட்டுக்கு கொண்டு வர முடியும்? சற்று யோசித்துப் பாருங்கள். இது முடியுமா? என்னை வீட்டுக்குள் அடக்க முடியுமா? சாத்தியம் இல்லை.

எனவே, ஒரு நோக்கத்துடனும் மற்றும் எனது பெயரிலும் நாம் ஏதாவது செய்திருக்க முடியும் இந்த பிரபஞ்சத்தின் இதயத்தில்(இங்கிலாந்தில்) ஒவ்வொருவரும் நடைமுறையில் தூங்கி கொண்டிருக்கிறார்கள். நாம் அங்கே சக்திவாய்ந்த ஒன்றைச் செய்ய வேண்டியிருந்தது. சில முட்டாள்த்தன மக்கள் வாதிடத் தொடங்கினர் என்று நான் கேள்விப்பட்டேன். அது மீண்டும் புரிதல் இல்லை என்பதற்கான அடையாளம். அன்னை “ஆம்” என்று சொல்லியிருந்தால், அவர் காரணம் இல்லாமல் செய்திருக்க மாட்டார். எனவே, புரிந்துகொள்ளும் சக்தி எப்போது வரும் என்றால், நாம் அண்ட விழிப்புணர்வின் சக்தியாக மாறும் போது. ஏனென்றால் அண்ட உணர்வு ஒவ்வொன்றையும் புரிந்துகொள்கிறது; இங்கே உட்கார்ந்து எல்லாவற்றையும் புரிந்து கொள்ள உங்களால் முடியும் நீங்கள் அங்கே செல்ல வேண்டியதில்லை. எல்லாவற்றையும். உங்கள் அன்னை ஒரு மஹாமாயா என்பதால் அது வெளியே தெரியாமல் இருக்கலாம். ஆனால் ஒரு நாள் வெளிப்படும்.

எனவே நீங்கள் அது ஒரு மஹாமாயாவின் வேலை என்ற சஹஜ யோகாவின் அந்த பகுதியை சார்ந்து இருக்க வேண்டும். . எனவே நாம் வருத்தப்படவோ கவலைப்படவோ கூடாது, அது வெளிப்படும். எனவே, நீங்கள் இரட்டிப்பாக ஆசீர்வதிக்கப்படுகிறீர்கள். முதலில் நீங்கள் உங்கள் ஆத்ம விழிப்புணர்வை பெற்றீர்கள். இதை பெறுவது கடினம் என்பார்கள். ஈர்ப்பு விசையை கடந்துவிட்டீர்கள். இரண்டாவதாக, உங்கள் தாய் அனைத்து ஆதி குருக்களின் தாய் ஆவார். அவர் தான் அனைத்து ஆதி குருக்களுக்கும் கற்பித்தவர். அவர் ஆதி குருக்களை உருவாக்கியவர், உங்களை ஆதிகுருக்களாக உருவாக்குவார்.

ஆனால் தரம் தங்கத்தை போல் இருக்க வேண்டும். குரு, எல்லா சவால்களையும் தானே ஏற்றுக்கொள்ள வேண்டும், அனைத்தையும் அனுபவிக்க வேண்டும். அதைச் செய்ய, தன்னைத் தூய்மைப்படுத்த, இதுவரை என்ன அடைந்தோம் என்று தன்னையேப் பார்க்க. உங்கள் சான்றிதழ்களை சார்ந்து இருக்க கூடாது. அது செயற்கைத்தன்மை அல்ல; அது பொய்மை அல்ல. இது மெய்மை. நீங்கள் மெய்மைக்கு வரும்போது நீங்கள் உங்கள் மீதே திருப்தி கொள்ள வேண்டும் என்பதை அறிந்திருக்க வேண்டும் பின்னர் நம்பிக்கை வருகிறது. அவ்வாறு தான் அதிகாரம் வருகிறது நீங்கள் செய்வது மெய்மை என்று நீங்களே உறுதியாக இருக்கிறீர்கள். மெய்மையை தவிர வேறு எதுவும் இல்லை. இந்த சக்தி உங்களுக்குள் இருக்கிறது.

குண்டலினி உங்களுக்குள் இருக்கிறது; அவள் உங்கள் சொந்த தாய். உங்கள் வாழ்க்கை முழுவதையும் எல்லா வகையான செயல்களையும் செய்து வீணாக்கிவிட்டீர்கள். மக்கள் நிறைய தவங்கள் செய்துள்ளனர் கலாச்சாரத்திற்கு எதிராக செயல்பட்டு, தங்களையே ஒழித்து அழித்துக்கொள்கிறார்கள். அவர்கள் என்ன பெற்றார்கள்? பின்னர் வேறொரு வகையைத் தொடங்கினர். அவர்கள் இப்போது வேறொரு பயணத்தில் மும்மரமாக இருக்கிறார்கள் நாளை வேறொரு பயணத்தில் மும்மரமாக இருப்பார்கள். முட்டாள்தனமான விஷயம் எதுவானாலும் அதை மிக தீவிரமாக செய்கிறார்கள். இது மிகவும் ஆச்சரியமான விஷயம். மற்றும் எல்லா விவரங்களுக்கும், எதுவும் விடுபடாமல் செய்கிறார்கள். முழுமையான முட்டாள்தனத்தை முழு நேர்மையுடன் அடைய நினைக்கிறார்கள்.

அது எனக்கு ஆச்சரியம் அளிக்கிறது. பின்னர் – என்ன நம்பிக்கை! “ஏன் செய்தீர்கள்?” என்று கேட்டால், அவர் “என்ன தவறு?” என்று கேட்டார். நீங்கள் ஆச்சரியப்படுகிறீர்கள். இதற்கு முட்டாள்தனத்தை விட புதிய சொல் இருக்க வேண்டும் நீங்கள் உங்கள் மூக்கை வெட்டுகிறீர்கள், மருத்துவர் “ஏன் அதை வெட்டினீர்கள்?” என்று கேட்டால், “என்ன தவறு? நான் அதை நன்றாக உங்களைவிட சிறப்பாக செய்துள்ளேன்” என்பார்! மனித இயல்பு இப்படித்தான் உள்ளது – அந்த அளவிற்கு முட்டாள்தனம். ஆனால் அது உண்மைக்கு வரும்போது, ​​நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? உங்கள் அழிவை பேரழிவுகரமாகச் செய்கிறீர்கள்.

உங்கள் நலனை நோக்கி மற்றும் ஆன்மீக ஏற்றத்தை நோக்கி – இவ்வளவு விடாமுயற்சியுடன், எச்சரிக்கையுடன் அவ்வளவு கவனத்துடன், அவ்வளவு விரிவான புரிதலுடன் இருக்கின்றோமா? மற்றும், அதன் சிறப்பு அம்சம் – நீங்கள் செய்யும் போது அது உங்களுக்கு ஆனந்தம் அளிக்கிறது – உடனடியாக வெகுமதி கிடைக்கும். உதாரணமாக, இதையெல்லாம் செய்யும் போது நீங்கள் ஆனந்தம் அடைந்திருப்பீர்கள். சந்தேகமில்லை. கடவுளின் பெயரில் நீங்கள் செய்யும் எதற்கும் உங்களுக்கு உடனடியாக வெகுமதி அளிக்கப்படுகிறது – நுட்பத்திலும் நுட்பமாக ஆனந்தத்தின் வடிவத்தில் மற்றும் வெளிப்படையான வடிவத்தில் அனைத்து வகையான விஷயங்களும். எனவே முழுமையான புரிதலுடன் அதை ஏன் செய்யக்கூடாது? மிக உன்னிப்பாக, கவனமாக. ஏன் செய்யக்கூடாது? முழு கவனம் மற்றும் செறிவுடன். ஏனெனில் வெகுமதி மகிழ்ச்சி ஆகும்.

இறுதியில் நாம் தேடுவது ஆனந்தத்தை தவிர வேறு ஒன்றும் இல்லை. பகுத்தறிவு ரீதியாக நாம் புரிந்துகொள்கிறோம், ஆனால் இதயத்திலிருந்து அல்ல. இது இதயத்தில் எளிதில் செல்லாது. இப்போது மக்கள், “அம்மா, என் இதயத்தை திறங்கள்” என்கிறார்கள். அதை எவ்வாறு திறப்பது? சொல்லுங்கள்! ஒருவர் திறந்த இதய அறுவை சிகிச்சைக்கு தான் செல்ல வேண்டும் உங்கள் இதயத்தைத் திறக்க, குரு தாராளமாக இருக்க வேண்டும். மற்ற அகுருக்கள் அதற்கு நேர்மாறாக செய்கிறார்கள். நீங்கள் என்ன கொடுத்தீர்கள்? எடுத்துக்காட்டாக, நீங்கள் உங்கள் வீட்டில் சிலருடன் இருக்கிறீர்கள்.

நீங்கள் தான் குரு. நீங்கள் அவர்களுக்கு என்ன கொடுத்தீர்கள்?பொருள் மட்டத்தில், பார்க்கலாம்.பின்னர் உடல் அளவில், அவர்களின் தலையை எப்போதாவது மசாஜ் செய்தீர்களா? நான் பலரின் தலைக்கு மசாஜ் செய்துள்ளேன். உங்களில் குறைந்தது ஐம்பது சதவீதம் பேருக்கு செய்துள்ளேன். உடல்ரீதியான ஆறுதல் அந்த நபருக்கு கொடுத்திருக்கிறீர்களா? நீங்கள் குரு என்றால் உணர்ச்சிரீதியான நம்பிக்கை என்ன நீங்கள் அந்த நபருக்குக் கொடுத்தீர்கள்? அந்த நபரிடம், “நீங்கள் அதை ஏன் அங்கே ஏன் வைத்திருந்தீர்கள்? இதை ஏன் இங்கே வைக்கவில்லை? ” என்று கூச்சலிடுகிறீர்கள்! மேலும் இது மனிதர்களிடையே நேர்மாறாகவும் உள்ளது.

நீங்கள் அந்த நபரிடம் நன்றாக இருக்க முயற்சித்தால் அது அவருக்கு அகங்காரமாக மாறுகிறது – ஆபத்தான விஷயங்கள். நீங்கள் ஒருவரிடம் நன்றாக, கனிவாக இருந்தால் அந்த நபருக்கு, நீங்கள் பணமோ அல்லது வேறு ஏதாவது கொடுத்தால், பின்னர் அவர்கள், “அகங்காரம் அவனுக்குள் வந்துவிடுகிறது” என்பர்.எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. சில நேரங்களில், அது எப்படி இருக்க முடியும்? ஆனால் அது நடக்கிறது. அதாவது, நான் அத்தகைய முட்டாள்தனத்திற்கு பலியாகியுள்ளேன். மக்கள் என்னிடம் சொல்ல வேண்டியிருந்தது, “அன்னையே, நீங்கள் அந்த நபரைக் கெடுக்கிறீர்கள்.” என்று. ஆனால் எனக்கு புரியவில்லை! நான் எப்படி கெடுக்க முடியும்? அது ஏன் நடக்கிறது?

ஏனென்றால் மனிதர்களுக்கு புரிந்து கொள்ள முடியாத மற்றொரு சிறந்த குணம் உள்ளது – அவர்களை யாராவது கவனித்துக் கொள்ள முடியும் என்று..ஏனென்றால் அவர்களால் யாரையும் கவனிக்க முடியாது. யாரும் அக்கறை காட்டினால் அவர்கள் அகங்காரமாகின்றனர். வெளிநாட்டுக்கு சென்ற சில இந்தியர்களைப் பற்றி எனக்குத் தெரியும் இந்தியர்கள் வந்ததும், ஆதி குருக்கள் வந்திருக்கிறார்கள் என்று மக்கள் நினைத்தார்கள். அவர்களால் உங்களை விட மோசமாக இருக்க முடியும் அதில் சந்தேகமில்லை. பின்னர் நீங்கள் அவர்களை இந்தியர்களாக வணங்கத் தொடங்குவீர்கள். பின்னர் இது, இந்தியாவில் இருந்து நீங்கள் கொண்டு வந்த ஒரு கழுதை என்பதை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள் உங்களை எப்போதும் அது உதைக்கிறது. பின்னர் அந்த இந்திய நற்குணத்தின் பண்பு இல்லை. இந்த பிரச்சனையினால் குருவுக்கு சீடர்களை எவ்வாறு கையாள்வது என்பது சாத்தியமற்றது ஆகிறது. ஆனால் ஒரு தீர்வு இருக்கிறது: அதை உங்கள் அன்னையிடம் விட்டு விடுங்கள். நான் அவற்றைச் சரி செய்வேன்.

அத்தகைய அனைத்து பிரச்சினைகளையும் நீங்கள் என்னிடம் விட்டுவிடலாம். மக்கள் உங்களைப் பயன்படுத்த முயற்சி செய்யும் போதும் அல்லது ஆணவமாகும் போதும் அவர்களிடம் சொல்லுங்கள், “இப்போது நான் அன்னையிடம் விட்டுவிடப் போகிறேன், நான் இனி உன்னை கவனிக்கப் போவதில்லை” அது அவர்களை சரி செய்யும். இந்த அண்ட விழிப்புணர்வு மிகவும் குறும்புதனமானது என்று அவர்களுக்குத் தெரியாது இது நிறைய குறும்புகளைக் கொண்டுள்ளது. இது போன்ற குறும்புகளில் அது செயல்பட கூடும், மக்களே திகைத்து ஆச்சரியப்படும் வகையில். எனவே, உங்களால் சமாளிக்க முடியாத இதுபோன்ற பிரச்சினைகள் அனைத்தையும் என்னிடம் விட்டு விடுங்கள். மற்றொன்று அவர்களுடைய குண்டலினி, அவர்களுக்கு இங்கே பிடிக்கிறது, அங்கே பிடிக்கிறது என்று கூறுவது. இது உங்கள் கடமை “நீங்கள் அகங்காரத்தில் பிடிக்கிறீர்கள்” என்று அவர்களிடம் சொல்லுவது. “உங்கள் அகங்காரத்தை. திருத்துவது நல்லது. ” என்று.

இப்போது, ​​நீங்கள் அனைவரும் குருக்களாக மாறலாம்.உங்களில் ஒவ்வொருவரும் குருக்களாக மாறலாம், அந்த அண்ட விழிப்புணர்வுடன் ஒன்றாக இருக்கும் பெரும் திறனை உருவாக்க முடியும் முற்றிலும் பூமியின் பொருள்முதல்வாதம் என்ற ஈர்ப்பின் பிடியிலிருந்து விடுபடலாம். அதை அடையாமல், உங்களுக்கு யாரிடமும் என்ன செய்வது என்று கூற உங்களுக்கு உரிமை இல்லை. முதலில் அது உங்கள் நடைமுறை மற்றும் கட்டளையில் உங்கள் சொந்த வாழ்க்கையில் இருக்க வேண்டும். உங்கள் சொந்த உதாரணத்தில். மற்றும் உங்கள் உதாரணம் பிறரை உறுதியூட்ட போதுமானது. இன்று, இந்த புரிதலின் மூலம் நீங்கள், பொருள்முதல்வாதத்தின் ஈர்ப்பு விசைக்கு மேலே உயர வேண்டும் இது இன்றைய மதமாக எல்லா இடங்களிலும் உள்ளது. அது கம்யூனிசம் அல்லது முதலாளித்துவம் அல்லது ஜனநாயகம் அல்லது பேய் பிடித்தல் எதுவாக இருந்தாலும். அது கிறிஸ்தவ மதமாக இருந்தாலும் சரி, இந்து மதம், இஸ்லாம் அல்லது வேறு எந்த முட்டாள்தனமாகவும் இருக்கட்டும். அனைத்தும் அபத்த வடிவங்களில் பொருள்முதல்வாதத்தைத் தவிர வேறில்லை. குண்டலினி மட்டுமே உங்களை தாமரையின் தண்டு போல பொருள்முதல்வாதத்தின் இந்த சேற்றில் இருந்து அழைத்துச் செல்லும்.

அதையே ஒருவர் அடைய வேண்டும்,குறிப்பாக மேற்கில். இது நுட்பமான மற்றும் மிக நுட்பமானதாக செல்கிறது. எனவே கவனமாக இருங்கள். இறுதியில் அது தன்னை ஆணவமாக வெளிப்படுத்துகிறது. அனைத்து பொருள்முதல்வாதிகளும் அகங்காரவாதிகள், இனவாதிகள் அவர்கள் கொள்ளையர்கள். அவர்கள் தென்னாப்பிரிக்கா போன்ற மற்ற நாடுகளுக்கு சென்று நன்றாக குடியேருக்கிறார்கள் கொள்ளையர்கள், திருடர்கள். மற்றும் மற்றொருவரின் செல்வத்தை கொள்ளையடிக்கிறார்கள். இவை அனைத்தும் மிகவும் அதிநவீனமான அழகுபடுத்தப்பட்டவை – நாம் அதை எதிர்த்துப் போராட வேண்டும். ஆனால் நாம் போராட, அதிலிருந்து முழுமையாக வெளியேற வேண்டும். இல்லையெனில் நாம் அதனுள் இருக்கும்போது அதை எதிர்த்துப் போராட முடியாது எனவே நாம் அனைவரும் முழுமையாக வெளியேற முயற்சிக்க வேண்டும்.

அதற்காக, நீங்கள் உங்கள் ஆடைகளை அகற்ற வேண்டும் என்று அர்த்தமல்ல. அகற்றிவிட்டு “நாங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டோம்.” அது மற்றொரு பாணி இப்போது தொடங்கியுள்ளது. நீங்கள் அழகான அனைத்தையும், நல்லவை அனைத்தையும் மதிக்கிறீர்கள் என்று பொருள். ஆனால் நீங்கள் எதனாலும் ஆதிக்கம் செய்யப்பட மாட்டீர்கள்.நீங்கள் எதன் பிடியிலும் இல்லை. நான் விரும்பினால் தங்கச் சங்கிலியை அணியலாம், இல்லையெனில் எதுவும் இல்லை, அதற்காக கவலைப்படுவதில்லை, எனக்கு கவலையில்லை. அதுதான் அணுகுமுறையாக இருக்க வேண்டும்: என்னிடம் இருந்தால், அல்லது எனக்கு வேண்டும் என்றால், நான் செய்வேன். எதுவும் என்னை ஆதிக்கம் செலுத்த முடியாது. எதுவும் எனக்கு தகுதியை கொடுக்க முடியாது. நான் என் சொந்த அந்தஸ்தில், நிலைப்பாட்டில் மற்றும் எனது அதிகாரத்தில் நிற்கிறேன்.

ஏனென்றால் நான் அந்த தூய விழிப்புணர்வு. என்னை எதுவும் கெடுக்க முடியாது. எதுவும் என்னை வீழ்த்த முடியாது, எதுவும் என்னை அடி பணிய வைக்க இயலாது. நான் எவர் ஒருவர் மீதும் ஆதிக்கம் செலுத்த மாட்டேன் இவ்வாறுத்தான் நாம் சிறந்த குருக்களாக மாறப்போகிறோம். கற்பனை செய்து பாருங்கள் – அறுநூற்று இருபது பேர் இங்கே இருக்கிறார்கள் உலகம் முழுவதையும் மாற்ற ஒரு குரு போதுமானது. அறுநூற்று இருபது குருக்களுடன், கடவுளே இப்போது உலகைக் காப்பாற்றுங்கள். ஆதிசங்கராச்சார்யாவின் அழகான பழமொழி உள்ளது. தத் நிஷ்கலா, பிரம்ம தத்துவத்தை பற்றி. நான் தான் பிரம்மா. உங்களிடம் இருக்கிறதா?

நான் பார்க்கிறேன். நீங்கள் என்னவென்று புரிந்துகொள்ள இதுவே சிறந்த வழியாகும் இருக்கிறதா? அதை கொண்டு வாருங்கள். இது மிகவும் பிரபலமானது.இருக்கிறதா? இல்லை, அது இல்லை, இன்னொன்று. கொண்டு வாருங்கள். உங்களிடம் புத்தகம் கிடைத்ததா? இதுதான். இதுதான். அதை ஆங்கில மொழியில் படியுங்கள்.

உங்கள் நிர்வாணம் கிடைத்ததும், என்ன நடக்கும் என்று அது கூறுகிறது. ஓம், நான் மனம் இல்லை, நுண்ணறிவு இல்லை, அகங்காரம் அல்லது சித்தம் இல்லை. காதுகள் அல்லது நாக்கு இல்லை, வாசனை மற்றும் பார்வையின் புலன்களும் இல்லை ஆகாயம், காற்று, நெருப்பு, நீர் அல்லது பூமியும் இல்லை, நான் நித்திய பேரின்பம் மற்றும் விழிப்புணர்வு ஆகும். நான் சிவன்! நான் சிவன்! நான் பிராணம் அல்ல, ஐந்து முக்கிய சுவாசமும் இல்லை உடலின் ஏழு கூறுகள் இல்லை. அல்லது அதன் ஐந்து உறைகள், கைகள் இல்லை பாதமோ அல்லது நாக்கோ இல்லை, அல்லது பிற செயல்பாட்டு உறுப்புகளும் இல்லை. நான் நித்திய பேரின்பம் மற்றும் விழிப்புணர்வு. நான் சிவன்! நான் சிவன்!

பயம், பேராசை அல்லது மாயை இல்லை. வெறுப்பும் விருப்பும் எனக்கு இல்லை, தர்மம் அல்லது விடுதலையின் பெருமை அல்லது அகங்காரம் எதுவும் இல்லை, மனதின் ஆசை இல்லை அல்லது அது விரும்பும் பொருள் இல்லை. நான் நித்திய பேரின்பம் மற்றும் விழிப்புணர்வு. நான் சிவன்! நான் சிவன்! இன்பம் மற்றும் வலி எதுவும் இல்லை, நல்லொழுக்கம் மற்றும் தீயொழுக்கம் எனக்குத் தெரியுமா, அல்லது மந்திரம், அல்லது புனித இடம், அல்லது வேதங்கள் அல்லது தியாகம் அறியேன். நான் உண்பவன் அல்ல,உணவு அல்லது சாப்பிடும் செயல் இல்லை. நான் நித்திய பேரின்பம் மற்றும் விழிப்புணர்வு. நான் சிவன்! நான் சிவன்!

மரணம் அல்லது பயம் – எனக்கு எதுவும் இல்லை, சாதி வேறுபாடும் இல்லை. தந்தை அல்லது தாய், அல்லது பிறப்பு கூட எனக்கு இல்லை, நண்பனும் இல்லை, தோழனும் இல்லை. சீடரோ, குருவோ இல்லை. நான் நித்திய பேரின்பம் மற்றும் விழிப்புணர்வு. நான் சிவன்! நான் சிவன்! எனக்கு எந்த வடிவமும் ஆடம்பரமும் இல்லை, எங்கும் நிறைந்திருப்பவன் நான் எல்லா இடங்களிலும் இருக்கிறேன், ஆனாலும் புலன்களுக்கு அப்பால் இருக்கிறேன். நான் இரட்சிப்பும் இல்லை,அறியப்பட வேண்டிய ஒன்றும் இல்லை. நான் நித்திய பேரின்பம் மற்றும் விழிப்புணர்வு. நான் சிவன்!

நான் சிவன்! அதுதான் நீங்கள். நீங்கள் நித்திய பேரின்பம் மற்றும் விழிப்புணர்வு. விழிப்புணர்வு.தூய விழிப்புணர்வு. இதனை எல்லோரும் மனப்பாடமாக நினைவில் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறன். மேலும் அனைத்து ஆசிரமங்களிலும் சொல்ல வேண்டும். இது, நீங்கள் என்னவென்று நினைவில் கொள்வதற்கான மிகச் சிறந்த வழியாகும். கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும்!