மஹாமாயா பூஜை உரை, நியூசிலாந்து. ஸ்ரீ மஹாமாயா பூஜை: நாம் அனைவரும் அவரது உடலில் இருக்கிறோம்

Auckland (New Zealand)

Feedback
Share
Upload transcript or translation for this talk

எனது முன்னோர்களான ஷாலிவாஹனர்களின் நாட்காட்டியின்படி புத்தாண்டு தினத்தின் முதல் நாள் இன்று.

மேலும் மகாராஷ்டிரா முழுவதும், இதை புத்தாண்டு தினமாகவும், எதையும் தொடங்குவதற்கான சிறந்த நாளாகவும் கருதப்படுகிறது. எனவேதான் இன்று நான் மஹாமாயா பூஜை செய்ய முடிவு செய்துள்ளேன். மஹாமாயாவைப் பற்றி நான் ஒருபோதும் பேசியதில்லை, ஏனெனில் அது பேசப்படவோ அல்லது சொல்லப்படவோ கூடாது – எல்லோரும் சொல்வது போல் இது ஒரு ரகசியம். இது சஹஜ யோகத்தின் அடிப்படை என்பதை நான் சொல்ல வேண்டும், ஏனெனில் இது விவரிக்கப்பட்டுள்ளது, தேவி சஹஸ்ராரத்தில் வரும்போது, அவரே சக்தி, அவரே மஹாமாயா – “சஹஸ்ராரத்தின் மஹாமாயா,” என்று ஏற்கனவே விவரிக்கப்பட்டுள்ளது. அவரே மஹாமாயாவாக இருக்க வேண்டும், அதாவது, அவர் தன்னை முழுமையாக மறைத்துக் கொள்ள வேண்டும். ஆரம்பத்தில் யாராலும் அவரை தேவியாக அறிய முடியாது; அவர்கள் விழிப்புணர்வு பெற்றாலும், அதுவே அவர்களின் முடிவாக இருக்கக்கூடாது. அதற்குப் பல காரணங்கள் உள்ளன. முதல் விஷயம் அவர் செய்ய வேண்டிய பணி. மஹாமாயாவின் பணி விழிப்புணர்வை வழங்குவதாகும். இப்போது நான் புலியின் மீது கையில் வாளுடன் வந்திருந்தால் யாரும் என் அருகில் நின்றிருக்கக்கூட மாட்டார்கள்.

நீங்கள் அனைவரும் என்னை விட்டு விலகி ஓடியிருப்பீர்கள். வேறு எந்த வடிவத்தில் தேவி வந்திருந்தாலும், அவர் செய்ய வேண்டியதை அவரால் செய்திருக்க முடியாது. மேலும், அவர் கிறிஸ்துவின் தாயாகவோ அல்லது ஸ்ரீ சீதாஜியாகவோ வந்திருந்தால் அல்லது நீங்கள் பாத்திமாபீபியைச் சொல்லலாம் – அவர்கள் அனைவரும் தங்கள் வாழ்க்கையை முடித்துக் கொண்டனர். நான் சொல்வது, அவர்கள் அவ்வளவு சீக்கிரம் இந்த உலகத்தை விட்டு வெளியேற வேண்டியிருந்தது. அவர்களால் எந்த வேலையும் செய்ய முடியவில்லை. இப்போது இந்த வேலை, மற்றவர்களுக்கு விழிப்புணர்வு கொடுப்பது என்பது ஒரு கடினமான வேலை, மிகவும் சிக்கலானது. இது ஏதோ ஒரு பெரிய ஆளுமையால் செய்யப்பட வேண்டியது என்று யாரும் உணராத வகையிலும் அல்லது அதில் மிகுந்த பிரமிப்போ அல்லது பயமோ ஏற்படாதவாறும் செய்யப்பட வேண்டும். எனவே மக்கள் நெருங்கி வருவதற்காக மஹாமாயா அவதாரமாக வர வேண்டியிருந்தது. மேலும், இது ஒரு நன்மையைக் கொண்டுள்ளது, மிகச் சிறந்த நன்மை என்னவென்றால், ஒரு எளிய நபராக, ஒரு இல்லத்தரசியாக, விழிப்புணர்வு கொடுக்கத் தொடங்கும் போது, மக்கள் திகைத்துப் போகின்றனர். மேலும் அவர்கள் நினைப்பார்கள், “அவராலேயே அதைச் செய்ய முடிந்தால், நாம் ஏன் அதைச் செய்யக் கூடாது?

என்று. எல்லாவற்றிற்கும் மேலாக, அவர் ஒரு சாதாரண இல்லத்தரசிதானே. எனவே, எல்லாம் சரிதான். அவரால் ஏதாவது செய்ய முடியும்போது, நாமும் அதைச் செய்ய முடியும்.” பாருங்கள், அதனால் அவர்களுக்கு தன்னம்பிக்கை வருகிறது. மேலும், ஒரு தாயாக இருந்து, அவர் தன் அன்பு செலுத்தும் பங்கை ஆற்றுகிறாள், அவருடைய இரக்கத்தைக் காட்டுகிறாள், ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக பொறுமையைக் காட்டுகிறார். பாருங்கள், இங்கு அவதரித்த இந்த அவதாரங்களில் யாருக்கும் அவ்வளவு பொறுமை இல்லை. பாருங்கள், இந்த தாய் பூமியிலிருந்து அவர்கள் எப்படி விரைவாக காணாமல் போனார்கள் என்பதை நீங்கள் பார்க்கிறீர்கள், ஏதோ ஒரு காரணத்திற்காக அல்லது வேறு எதற்காகவோ என்று சொல்லலாம். ஆனால் நான் சில காலம் தங்க வேண்டியிருந்தது, எவ்வளவு காலம் என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் அதை ஒரு கட்டம் வரை செய்ய வேண்டும், இந்த விழிப்புணர்வு கொடுக்கும் வேலையைச் செய்வதற்காக. மூன்றாவது விஷயம் என்னவென்றால், நீங்கள் என் உடலுக்குள், என் உடலின் என் உயிரணுக்களுக்குள் அடையாளம் காணப்பட வேண்டும், ஆனால் இது மிகவும் கடினமான பணியாகும், ஏனென்றால் உங்களில் ஒருவர் மதி கெட்டவராக, முட்டாளாக, சண்டைக்காரராக மாறும்போது அது கடினமாகிறது.

நீங்கள் எதைச் செய்தாலும், எந்தச் சிறிய காரியம் செய்தாலும், அது என்னைக் காயப்படுத்துகிறது. அது காயப்படுத்தும், ஆனால் நான் என்னைப் பற்றி நினைப்பதில்லை. நான் எப்பொழுதும் உங்களைப் பற்றியே நினைக்கிறேன். ஆகவே, எங்கோ ஏதோ தவறு நடக்கிறபோது எனக்கு அறிகுறி வருகிறது: யாரோ ஒருவர் சிலருக்கு ஏதாவது தவறினைச் செய்கிறார்கள், சில சஹஜ யோகிகள் சித்திரவதை செய்யப்படுகிறார்கள், சிலர் நோய்வாய்ப்பட்டிருக்கிறார்கள். அது போன்ற ஒவ்வொன்றிற்காகவும், நான் மிகவும் தீவிரமாகவும் நட்புடனுவும் வேலை செய்ய வேண்டும். சமீபத்தில், இன்றுதான், ஆஸ்திரேலியாவில் ஒருவருக்கு மூளைக்காய்ச்சல் இருப்பதாக என்னிடம் சொன்னார்கள். உடனே, நான் பந்தன் கொடுத்தேன். அவள் என் மீது நம்பிக்கை வைத்திருந்தால், அவள் என் ஜீவனில் இருந்தால், அத்தகைய நபர் குணப்படுத்தப்பட வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். அல்லது யாராவது எங்காவது நோய்வாய்ப்பட்டிருக்கிறார்கள், என்று அவர்கள் என்னிடம் சொல்கிறார்கள், அத்தகைய நபர் காப்பாற்றப்படுகிறார். அவர்கள் அதை ஒரு அதிசயம் என்று கூறுகிறார்கள்.

இது ஒரு அதிசயம் அல்ல. இது ஒரு அதிசயம் அல்ல. மீண்டும் மஹாமாயாவின் ஆசிகள் இப்படித்தான் இருக்கும். என்னுள் நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்பதை உங்களால் பார்க்க முடியாது. என்னுள் உங்களது பிரதிபலிப்பைக் காண முடியாது. நீங்கள் பார்க்க முடியாது. அதுவே மஹாமாயா. அதன் ரகசியப் பகுதி இது, உங்களால் அறிய முடியாது; பின்னர் நான் வலியை உணரும்போது, நான் அதைப் பார்க்க முயற்சி செய்தால், அதனால் நீங்கள் குணமடைவீர்கள், ஏனென்றால் குணப்படுத்தும் சக்தி என்னிடம் உள்ளது. அது எப்படி நடக்கிறது என்பதை உங்களால் அறிய முடியாது. கூட்டாக, நீங்கள் எதையெல்லாம் உணர்கிறீர்களோ, அதை நான் என் உடலில் பெறுகிறேன்.

உதாரணமாக, கூட்டாக, உங்களுக்கு இடது விஷுத்தி பிரச்சினை இருந்தால், எனக்கு அந்த பிரச்சினை வரும். உங்களுக்கு வலது விசுத்தி பிரச்சினை இருக்கிறது என்று சொன்னால், எனக்கும் பிரச்சினை வரும். கூட்டாக உங்களுக்கு எந்தச் சக்கரத்திலாவது பிடிப்பு ஏற்பட்டால், எனக்கும் அந்தப் பிரச்சினை வருகிறது, நான் அதற்குத் தீர்வு காண வேண்டும், ஏனென்றால் அது என்னைத் தொந்தரவு செய்கிறது, அதனால் நான் அதைச் சரி செய்கிறேன். நான் அதற்குத் தீர்வு காண வேண்டியது கட்டாயம். இப்போது அவ்வாறு செய்யும்போது, “அம்மா, நாங்கள் உங்களைத் தொந்திரவு செய்கிறோம்” என்று நீங்கள் நினைக்கலாம். நீங்கள் தொந்திரவு செய்யவில்லை. அது என்னுடைய செயல்பாடு. நான் உங்களை எனக்குள் எடுத்துக்கொண்டேன். நீங்கள் இல்லை. எனவே நீங்கள் என்னை தொந்திரவு செய்வதாக கவலைப்பட வேண்டியதில்லை.

அது எனது சொந்த செயல்பாடு, அது எனது சொந்த வேலை, அது எனது சொந்த பொறுப்பு. நான் அதைச் செய்யும்பொழுது, அது செயல்படுகிறது, ஏனென்றால் நான்தான் அதைச் செய்ய வேண்டும். நான் செய்ய வேண்டிய வேலை அது. அதற்காக நீங்கள் வருத்தமாக உணர்வதற்கு ஒன்றுமில்லை. ஆனால் இப்போது, நோக்கம் என்ன? நான் உங்களிடம் சொன்னது போல், நான் உங்களிடத்தில் நெருங்கி வர வேண்டும் மற்றும் நான் உங்களிடத்தில் எந்த வகையான பயத்தையோ அல்லது பிரமிப்பையோ ஏற்படுத்திவிடக் கூடாது அல்லது நான் ஒரு மனிதப் பிறவி இல்லை என்ற ஒரு உணர்வினைக்கூட உங்களிடத்தில் ஏற்படுத்திவிடக் கூடாது. நான் மனிதர்களைப் போலவே நடந்துகொள்கிறேன், நான் மனிதர்களைப் போலவே எதிர் வினையாற்றுகிறேன், இந்த சக்திகள் அனைத்தும் எனக்குள் மறைந்துள்ளன. நீங்கள் விழிப்புணர்வு பெற்ற ஆத்மாவாக ஆகும் வரை, உங்களால் புரிந்து கொள்ள முடியாது. நீங்கள் என்ன செய்தாலும், உங்களால் புரிந்து கொள்ள முடியாது. அல்லது முந்தைய ஜென்மத்தில் நீங்கள் விழிப்புணர்வு பெற்றவராக இருக்கலாம் அல்லது நீங்கள் மகத்தான புண்ணியங்களைச் செய்திருக்கலாம், அப்போது உங்களால் அடையாளம் காண முடியும்.

அப்படி செய்தவர்களும் இங்கே இருக்கிறார்கள். ஆனால் மேலும் சொல்வதானால், ஒரு வகையில், உங்களிடத்தில் இணக்கமாக இருப்பதற்கு முற்றிலும் மனிதப் பிறவியாக மாறுவதுதான் சரியானது. அதனால் நான் திருமணம் செய்து கொண்டேன், எனக்கு குழந்தைகள் உள்ளனர், எனக்கு பேரக்குழந்தைகள் உள்ளனர், பாருங்கள் நானும் ஷாப்பிங் செய்கிறேன். நான் கோகோ கோலாவை எப்படி அருந்துகிறேன் என்று மக்கள் ஆச்சரியப்படுகிறார்கள். நான் கோகோ கோலாவை எடுத்துக்கொள்ளக் கூடாதுதான்! அல்லது நான் பாப்கார்ன் சாப்பிடுவது. அவர்கள் ஆச்சரியப்படுகிறார்கள். ஆனால் நான் உங்களைப் போலவே இருக்க வேண்டியுள்ளது. ஆனால் உள்ளுக்குள் நான் அப்படி இல்லை. வெளிப்புறத்தில்தான் நான் அப்படி இருக்கிறேன்.

பாருங்கள், என் கவனம் எல்லாவற்றிலும் ஊடுருவும் வகையில் இருக்கிறது, மேலும் ஒவ்வொரு விஷயத்தையும் நான் நன்றாக நினைவில் வைத்திருக்கிறேன். இந்த வயதிலும் என் நினைவாற்றல் நன்றாகவே இருக்கிறது. எனவே, பாருங்கள், இந்த கவனம் மிகவும் ஊடுருவக்கூடியது, மேலும் அது ஊடுருவிச் செல்லும்போது தேவையான அனைத்து சக்திகளையும் தன்னுடன் எடுத்துச் செல்கிறது மற்றும் அது செயல்படுகிறது. இது ஒரு மிகப்பெரிய இயந்திரம், என்று நான் சொல்ல வேண்டும், இது மிகவும் நுட்பமானது மற்றும் அற்புதங்களைச் செய்கிறது. எனவே நீங்கள் என்னிடம் ஒரு அற்புதம் நடந்தது, நடந்தது ஒரு அற்புதமான விஷயம் என்று சொல்லத் தொடங்குகிறீர்கள். அற்புதம் எதுவும் இல்லை, ஏனென்றால் நீங்கள் அனைவரும் என் உடலில் இருக்கும்போது, என் உடல் தெய்வீகமாக இருந்தால், பின்னர் அதில் அற்புதம் என்ன இருக்கிறது? இது அனைத்தும் ஒரு தகவல் தொடர்பே, இந்த கை இந்த கையுடன் தொடர்பு கொள்ள முடியும் என்பது போல, நான் உங்களுடன் தொடர்பு கொள்கிறேன். ஆனால் ஒன்று நிச்சயம், இந்த மஹாமாயாவின் ரூபத்தில் நீங்கள் தொலைந்து போகக்கூடாது. இது மிகவும் ஆபத்தான விஷயம், ஏனென்றால் நீங்கள் தொலைந்துவிட்டால், “ஓ, அம்மா! என்ன இருந்தாலும்” – என்று சொல்வது போல் இருந்தால் – அது செயல்படாது, அது வேலை செய்யாது.

இது ஒரு சாதாரண விஷயம் அல்ல, ஆனால் நான் சாதாரணமாக இருக்கிறேன் என்பதைக் காட்டுவதற்காக நானே மிகவும் சாதாரணமாக வாழ விரும்புகிறேன், ஆனால் நான் அப்படி இல்லை. இருந்தாலும் நீங்கள் உங்கள் கவனத்தை சாதாரணமாக செலுத்தக்கூடாது, அது செயல்படாது, ஏனென்றால் நீங்கள் என் உடலில் இருப்பதால். சொல்லப் போனால், என் உடலில் உள்ள ஒவ்வொரு செல்லுக்கும் தெரியும், மேலும் ஒவ்வொரு செல்லுக்கும் ஒரு பிரதிபலிப்பான் உள்ளது. இதைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் ஒரு பிரதிபலிப்பான் நம்மிடம் உள்ளது, அது ரிமோட் கண்ட்ரோலில்(தொலையியக்கி) வேலை செய்யும். எனவே இது உங்கள் கவனத்திலும் ரிமோட் கண்ட்ரோலில் வேலை செய்யும். உங்கள் கவனம் சரியாக இல்லை என்றால், அது திருத்தும். அது உங்களை திருந்த வைக்கிறது… அதுதான் நாம் மனிதர்களாக பரிணாமம் பெறுவதற்கான சிறந்த வழியாகும். வேறு வழியில்லை, தெரிந்து கொள்ளுங்கள். ஏனென்றால், மொத்தத்தில், முழு உலகிலும் மக்களின் கவனம் இன்னும் ஆத்மாவின் மீது இல்லை. ஆனால் திடீரென்று, எல்லாவற்றுக்கும் அப்பால் ஏதோ ஒன்று இருக்க வேண்டும் என்று அவர்களுக்கு ஒரு கணநேர பார்வை கிடைக்கிறது.

எத்தனையோ மதங்கள் வந்துவிட்டன, இதைப் பற்றிப் பலர் பேசியிருக்கலாம். எனவே, அவர்கள் அதைப் பற்றிச் சொல்லியிருக்கலாம், பேசியிருக்கலாம், ஆனால் இன்னும் நாம் ஆத்மாவாக இருக்க வேண்டும் என்ற உணர்வு வெகு சிலரிடமே உள்ளது, அவர்கள்தான் சத்தியத்தைத் தேடுபவர்கள் என்று அழைக்கப்படுபவர்கள், அதே நேரத்தில் மீதி உள்ள மக்கள் அப்படி இல்லை. இதிலும் அதிலும் பரபரப்பாக இருக்கிறார்கள். “ஓ, நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நான் என்னளவில் மிகவும் மகிழ்ச்சியாகவே இருக்கிறேன், நீங்கள் உங்கள் விடுமுறையை அனுபவியுங்கள். நான் எனது விடுமுறையை அனுபவிக்கிறேன். அது போன்றுதான் பேசுகிறார்கள். எனவே, இப்படிபட்ட சூழ்நிலையில், ஒருவர் மறைமுகமாக வர வேண்டியிருந்தது, எதிரிகளைப் போன்று அவர்கள் நுழைய வேண்டியுள்ளது – என்று நான் சொல்ல வேண்டும், அவர்கள் கடவுளுடைய அன்பின் எதிரிகள். எனவே நீங்கள் ஒரு உளவாளியைப் போல அவர்களுக்குள் நுழைய வேண்டும், பாருங்கள், உங்களை மறைத்துக்கொண்டு, அவர்களை இங்கே நடனமாடச் செய்ய வேண்டும், இங்கேயும் மற்றும் அங்கேயும். அவர்கள் அங்கும் இங்கும் கொஞ்சம் கொஞ்சமாக தொலைந்து போகட்டும்.

அவர்கள் தங்களுக்குள் பார்க்கட்டும், ஏனென்றால் பாருங்கள், மஹாமாயா உங்களை அனுமதிக்கிறாள். இப்போது, சில சஹஜ யோகிகள் சஹஜ யோகத்தை விட்டு, வெளியேறி இருக்கிறார்கள். நான் சொன்னேன், “சரி, அவர்கள் சென்றுவிட்டால், மிகவும் நல்லதுதான். கெட்ட குப்பைகளை அகற்றுவது நல்லதே, அது ஒரு பொருட்டல்ல. பின்னர் அவர்கள் மீண்டும் திரும்பி வருகிறார்கள். “அம்மா, எங்களுக்கு இது நடந்துவிட்டது, எங்களுக்கு அது நடந்துவிட்டது, சிலருக்கு இது வந்துவிட்டது, சிலருக்கு அது வந்துவிட்டது, நாங்கள் ஒரு விபத்தை சந்தித்தோம், பிறகு சிலருக்கு நோய் வந்துவிட்டது, சிலர் மிகவும் கவலையுடன் இருக்கிறார்கள், எங்களில் சிலர் திருமணத்தை முறித்துக் கொண்டோம்.” அனைத்து வகையான விஷயங்களும். அவர்கள் இப்படிச் சொல்லும்போது, அதாவது, அவர்கள் இப்படிச் செய்யும்போது, எனக்கு சிரிப்புதான் வருகிறது. எனவே இது நாணயத்தின் ஒரு மோசமான பக்கம். சரி, அதனால் பரவாயில்லை.

மீண்டும் அவர்கள் சஹஜ யோகாவிற்கு திரும்பி வருகிறார்கள், ஆனால் அவர்கள் மற்றவர்களை விட பின்தங்கியுள்ளனர். அவர்கள் மேலே வருவார்கள், ஆனால் மெதுவாக, அவர்கள் கஷ்டப்பட்டதால், அவர்கள் மீண்டும் வந்திருக்கிறார்கள். ஒரு வகையில், நாம் இனியும் துன்பப்பட விரும்பவில்லை என்பதற்கு மற்றவர்களுக்கு இது ஒரு நல்ல உதாரணமாக இருக்கும். எந்த சந்தர்ப்பத்திலும் துன்பங்கள் மஹாமாயாவிடமிருந்து வருவதில்லை. மாறாக, நீங்கள் என்னை அம்மா என்று அழைத்தவுடன், ஒரு பாதுகாப்பு கவனம் உங்கள் மீது இருக்கிறது. நீங்கள் தவறாக நடந்து கொள்ளும்போது, நீங்கள் எல்லா வரம்புகளையும் விஷயங்களையும் மீறும்போது, அது உங்கள் மீது செயல்படுகிறது. இந்த நடவடிக்கை பல சந்தர்ப்பங்களில் நடந்துள்ளது. அவர்களில் சிலர் திரும்பி வந்துவிட்டார்கள், சிலர் இன்னும் சுற்றித் திரிகிறார்கள் மற்றும் தவறான செயல்களைச் செய்கிறார்கள், ஏனென்றால் அவர்கள் மோசமான விஷயங்களைச் செய்திருக்கிறார்கள், மேலும் அவர்கள் கண்டுபிடிக்கப்படுவார்கள் என்று அவர்களுக்குத் தெரியும். இப்போது சஹஜ யோகாவில் நடக்கும் மிக மோசமான விஷயம் என்னவென்றால், மக்கள் என்னை வைத்து பணம் சம்பாதிக்க முயற்சி செய்கிறார்கள், ஏனென்றால் எனக்கு பணம் பற்றி புரியாது என்று அவர்களுக்குத் தெரியும், எனக்கு வங்கி பரிவர்த்தனை பற்றி புரியாது மற்றும் அதில் நான் மிகவும் மோசம்; ஆனால் நான் அப்படி இல்லை. எனக்கு எல்லாம் தெரியும்.

எல்லவற்றையும் பற்றி எனக்கு எல்லாம் தெரியும். அவர்கள் என்னிடம் பொய் சொல்கிறார்கள், அவர்கள் என்னிடம் பொய் சொல்கிறார்கள் என்று எனக்குத் தெரியும், ஆனால் அது அனுமதிக்கப்படுகிறது. சஹஜ யோகாவில் நீங்கள் விரும்பியதைச் செய்யுங்கள். அதற்கு நீங்கள்தான் பொறுப்பாக வேண்டும். மஹாமாயா ரூபத்தில் இது மிகவும் பெரிய விஷயம், அதை நேரடியாக, நான் எதுவும் சொல்ல வேண்டியதில்லை. அது நடந்துவிட்டது என்பது கூட உங்களுக்குத் தெரியாது. அது நடந்தவுடன், அவர்கள் என்னிடம் விரைந்து வந்து, “அம்மா, இது நடந்துவிட்டது.” என்பார்கள். இப்போது, நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நான் எதையும் செய்யவில்லை, ஆனால் நீங்கள் உங்கள் தாயின் பாதுகாப்பை விட்டு வெளியேறியவுடன், உங்களால் பார்க்க முடியவில்லை. அங்கே உங்களைச் சுற்றி உள்ள, உங்களால் காண முடியாத எல்லா எதிர்மறை சக்திகளும் அதை நடத்துகின்றன, ஏனெனில் நீங்கள் பகுதி பார்வையற்றவராக இருக்கிறீர்கள்.

உங்களால் உங்கள் தாயை பார்க்க முடியவில்லை, இந்த எதிர்மறை சக்திகளையும் உங்களால் பார்க்க முடியவில்லை. பின்னர் நீங்கள் அவர்களின் பேச்சுக்கு இரையாகிவிடுவீர்கள், அது போன்ற விஷயங்கள், அது எதுவாக இருந்தாலும், அல்லது நீங்கள் இங்கே இருப்பதைப் போல ஏதேனும் முரண்பாடான கலாச்சாரத்திற்கு நீங்கள் இரையாகலாம். எனக்குத் தெரியும், சஹஜ யோகாவில் இருந்து போய்விட்ட ஒருவர் இப்போது, அவர் இப்போது நிறைய குடித்து வருகிறார், அவர் எல்லா வகையான தவறான விஷயங்களையும் செய்கிறார்.. எனவே அத்தகைய நபர் தனது செயல்களால் தொலைந்து போகிறார். அவருக்கு நான் எதுவும் செய்யவில்லை. நீங்கள் என்னுடன் இருந்தால், நீங்கள் சஹஜ யோகத்தில் இருந்தால், நீங்கள் பாதுகாக்கப்படுவீர்கள், நீங்கள் கவனித்துக் கொள்ளப்படுவீர்கள். ஆனால் நீங்கள் உறுதியாக இருக்க வேண்டும், உங்களுக்கு நம்பிக்கை இருக்க வேண்டும், ஏதேனும் பிரச்சனை இருந்தாலும், அது தீர்க்கப்படும். ஆனால் அதை விட்டு வெளியேறியவர்கள், என் எல்லைக்கு அப்பாற்பட்டவர்கள், அவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். எனவே, மறைமுகமாக கூட, நான் சொல்ல வேண்டும் நான் அவர்களுக்கு எந்த வகையிலும் தீங்கு செய்வதில்லை, ஏனென்றால் நான் எவருக்கும் தீங்கு செய்யக்கூடாது என்று முடிவு செய்துள்ளேன். நான் முடிவு செய்துவிட்டேன். குறிப்பாக என்னை “அம்மா” என்று யார் அழைக்கிறார்களோ, அவர்களுக்கு தீங்கு செய்ய நான் விரும்பவில்லை.

ஆனால் அவர்கள் பாதிக்கப்படுகிறார்கள், சந்தேகமில்லை, அவர்கள் மிகவும் மோசமாக பாதிக்கப்படுகிறார்கள். எனவே, அது நடந்திருந்தால், அதை இப்படி எடுத்துக் கொள்ளுங்கள், “சரி, பரவாயில்லை. அம்மா ஒவ்வொருவரையும் மன்னிக்கிறாள். அது நடந்தது, நடந்ததுதான். இது எனக்கு ஒரு பாடம். ஏதோ ஒன்று நடந்துவிட்டதாலேயே, இப்போது நான் திரும்பி வந்துவிட்டேன்”. பின்னர் நீங்கள் சில சமயங்களில் அவர்களில் பலரை விட சிறந்த சஹஜ யோகியாக ஆகிவிடுவீர்கள். ஒவ்வொரு நாட்டிலும் இதுபோன்ற நிகழ்வுகள் மிகவும் பொதுவாக நடக்கின்றன. ஆனால் பாருங்கள், இந்த முழு கலாச்சாரமும் மிகவும் முரண்பாடானது என்று நான் உணர்கிறேன். முழு கலாச்சாரமும் மிகவும் முரண்பாடாக இருக்கிறது.

மேலும், பணம் செலுத்தப்பட்டவை மிகவும் அருவருப்பாக இருக்கிறது. பணம் செலுத்தப்பட்டவை மிகவும் பாவம் நிறைந்ததாக இருக்கிறது. இழிவான மற்றும் கண்ணியமற்றவைப் பணம் செலுத்தப்பட்டு ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. இது மிகவும் முரண்பாடானது, ஏனெனில் இது ஆன்மீக வளர்ச்சிக்கு எதிராக செல்கிறது. ஒரு பக்கம், நீங்கள் ஆன்மீகவாதி, நீங்கள் ஆன்மீகமாக இருக்க விரும்புகிறீர்கள். இன்னொரு பக்கம் உங்களிடம் இந்த முரண்பாடான கலாச்சாரம் உள்ளது, இது உங்களை நரகத்திற்கு அழைத்துச் செல்லும். இது ஒருமுறை பாபா மாமா என்னிடம் சொன்ன கதை போல் இருக்கிறது, இது மிகவும் சுவாரஸ்யமான கதை. சிலர் நிறைய புண்ணியங்களைச் செய்தார்கள், அதனால் அவர்கள் சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர், ஆனால் அங்குள்ள ஒவ்வொருவரும் தியானத்தில் இருப்பதையும் அருமையாக மகிழ்ந்திருப்பதையும் கண்டார்கள். அவர்கள் சொன்னார்கள், “என்ன இது? இதைத்தானே சஹஜ யோகா மூலமும் செய்தோம்.

மீண்டும் இங்கே அது போன்று செய்வதால் என்ன பயன்? எங்களுக்கு வேறு ஏதாவது வேண்டும், எனவே நரகத்தைப் பார்ப்போம்” என்றார்கள். எனவே அவர்கள் நரகத்தைப் பார்க்க இறங்கி வந்தனர், நரகத்தின் வெளியே முரண்பாடான கலாச்சாரத்தை அவர்கள் செய்து கொண்டிருந்தனர். அதாவது நிர்வாண பெண்கள் மற்றும் நிர்வாண ஆண்கள் நடனமாடுவது, கூச்சலிடுவது, அலறுவது போன்று. கண்ணியமற்ற, அருவருப்பான காரியங்கள் அங்கே நடந்து கொண்டிருந்தன. எனவே அவர்கள், “இது வித்தியாசமாக இருக்கிறது, தெரியுமா.” என்றார்கள். இந்தச் செயல்களையெல்லாம் செய்து கொண்டிருந்த அவர்கள் இவர்களைப் பார்த்து, “ஏன் இங்கே வந்து இருக்கிறீர்கள்?” என்று கேட்டார்கள். “நரகத்தைப் பார்ப்பதற்காகத்தான் நாங்கள் இங்கு வந்துள்ளோம்” என்று இவர்கள் சொன்னார்கள். “ஓ, சரி.

இங்கே கதவில் துவாரங்கள் உள்ளன. நீங்கள் அவற்றின் மூலம் பாருங்கள்”. அதில் பெரிய, பெரிய துவாரங்கள் இருந்தன, அதன் மூலம் அவர்கள் பார்க்க ஆரம்பித்தார்கள். ஒரு துவாரத்தில் பார்க்கும்போது மக்கள் ஒருவித அருவருப்பானதில், சீழ்பிடித்ததில் மற்றும் இதிலும் அதிலும் போடப்படுவதைக் கண்டார்கள். மற்றொரு துவாரம் வழியாக பார்க்கும்போது மலத்திற்குள், இதிலும் அதிலும் போடப்படுவதைக் கண்டார்கள். இன்னொன்றில் சிலர் ஒருவித சேற்றில் போடப்பட்டு, அதிலிருந்து வெளியே வர முடியாமல் கூச்சலிட்டுக் கொண்டிருந்தார்கள். பின்னர் இன்னொன்றில். சிலர் கொதிக்கும் எண்ணெயில் கொதிக்கவைக்கப்பட்டுக் கொண்டிருந்தார்கள், மற்றும் சிலர் அடித்து நொறுக்கப்பட்டனர். அங்கு பாம்பும் தேளும் இதுவும் அதுவும் இருந்தன. இவர்கள், “இதெல்லாம் என்ன?” என்று கேட்டார்கள்.

“நீங்கள் பார்க்க விரும்பிய நரகம் இதுதான். இதுதான் நரகம். நீங்கள் செல்ல விரும்புகிறீர்கள் என்றால், நீங்கள் அங்கு செல்லலாம். எனவே இவர்கள் கேட்டார்கள், “நீங்கள் இங்கே என்ன செய்கிறீர்கள்?” என்று. “இதுதான் விளம்பரத் துறை. நரகத்திற்கு செல்வதற்கு.” அவர்கள் திரும்பி மீண்டும் சொர்க்கத்திற்கு ஓடி, மன்னிப்பு கேட்டார்கள் “எங்களுக்கு அது வேண்டாம், எங்களுக்கு அந்த நரகம் வேண்டாம், எங்களுக்கு இது போதும்” என்று. பாருங்கள், அது போல், முழு உலகமும் ஒரு ஏமாற்று வித்தைதான். பார்க்கப் போனால் இது மஹாமாயாவுக்கு எதிரானது.

எனவே இந்த மாயை இறைவனால் படைக்கப்பட்டது என்கிறார்கள். இல்லை. மாயை என்பது கடவுள் படைத்த இந்த உலகமும், இந்த முழு பிரபஞ்சமும் மற்றும் அனைத்தும். ஆனால் இந்த மாயையான வாழ்க்கை மனிதர்களால்தான் உருவாக்கப்பட்டது. நிச்சயமாக, அவர்களின் மூளை மற்றும் மனத்திறன்களின் கணிப்புகள் மூலம், பணம் தான் எல்லாமே என்பதாக, அவர்கள் உத்தேசித்துவிட்டனர். பணம் தான் எல்லாமே என்பதால், சாத்தியப்படக்கூடிய எந்த வகையிலாவது, உங்களால் பணம் சம்பாதிக்க முந்தால், பின்னர் நீங்கள் விரும்பியது எதையும் செய்யலாம். ஒவ்வொரு நாளும் நீங்கள் செய்தித்தாளில் படிக்கிறீர்கள், நான் குறிப்பிடுவது மோசமான கதைகளை, அதாவது மக்கள் எப்படியெல்லாம் பணம் சம்பாதிக்க விரும்புகிறார்கள், அவர்கள் தங்கள் மகள்களை எப்படி விற்க விரும்புகிறார்கள், எப்படி தங்கள் மனைவிகளை விற்க விரும்புகிறார்கள் என்பது பற்றிய செய்திகளை. பணம் உங்களிடம் இருக்கும் வரை எல்லாமே சரிதான். நீங்கள் பணம் சம்பாதிக்க முடியும் என்றால், மற்ற எதுவும் ஒரு பொருட்டே இல்லை. ஆகவே, மனிதர்கள் உருவாக்கிய மாயைகளில் இதுவும் ஒன்று, நீங்கள் அதனை “பண மாயை” என்று சொல்லலாம், அதில் செல்வம், உடைமைகள், பொருளாசை ஆகியவையும் வருகின்றன.

ஒவ்வொன்றும் மனிதர்களால் உருவாக்கப்பட்டதுதான், மேலும் பொருள்முதல்வாதத்தின் இந்த உருவாக்கம் அனைத்து பாவச் செயல்களிலும் ஈடுபடும் ஒரு ஆளுமையாக உங்களைக் கீழிறங்க வைக்கிறது. எல்லாம் சரிதான், ஏனென்றால் பணம் சரிதான் என்றால், பொருளாசையும் சரிதான். உதாரணமாக, மக்கள் அமெரிக்காவிற்கு சென்று – ஸ்பானிஷ் மக்கள்- அங்கு பல பழங்குடியினரை கொன்ற விதத்தைச் சொல்லலாம். அங்குள்ளவர்களை. பிறகு, ஆங்கிலேயர்கள் மற்றும் எல்லா வகையான மக்களும் அமெரிக்காவிற்குச் சென்றனர். அங்கு அவர்களை சித்திரவதை செய்த விதம், மனிதர்கள் எப்படி இப்படி நடந்து கொண்டார்கள் என்று உங்களால் நினைத்துப் பார்க்கக்கூட முடியாது. காட்டில் வாழும் எளிய மனிதர்களிடம். இப்படிப்பட்ட ஒரு காரியத்தை நீங்கள் எப்படி அவர்களுக்குச் செய்ய முடியும், இவ்வளவு கொடூரமான, அதனை இனப்படுகொலை என்றே சொல்லலாம்? அவர்கள் செய்தது உண்மையில் ஒரு பயங்கரமான காரியம். இந்த ஜெர்மானியர்களைப் பற்றி நாம் அதிகம் அறிந்திருக்கிறோம், அவர்கள் சமீபத்தில் நடந்துகொண்ட விதத்தை, ஆனால் அந்த நாட்களில் கூட அவர்கள் எல்லா வகையான விஷயங்களையும் செய்திருக்கிறார்கள்.

மற்றும் இயற்கை, இது கடவுளின் மாயை, அது எப்படி ஓய்வு எடுக்கும். அமெரிக்கா, மத்திய அமெரிக்கா, மிசோரியில் உள்ள மிசிசிப்பி நதிக்கு அருகில் மக்கள் பலர் இருந்தனர். அவர்கள் நீண்ட காலமாகவே ரெட்னெக்ஸ்-படிப்பறிவு இல்லாத ஏழை வெள்ளையர்கள் என்று அழைக்கப்பட்டவர்கள். இதை அவர்கள் நினைவில் வைத்திருக்க வேண்டும். மேலும் அவர்கள் கருப்பர்களால் செங்குட்டுவர்கள் என்று அழைக்கப்பட்ட, அவர்கள் பல கறுப்பர்களைக் கொன்றனர், அவர்களின் குழந்தைகளை மரத்தில் தொங்கவிட்டனர், அவர்களின் உடலை ஆற்றில் வீசினர், சில சமயங்களில் நீரில் மூழ்கடிக்கப்பட்டனர்;கறுப்பின மக்களுக்கு எல்லா வகையான விஷயங்களையும் செய்தார்கள், அவர்கள் தாங்கள் வெள்ளையர்கள் என்றும் தாங்களே உயர்ந்தவர்கள் என்றும் அது போன்றெல்லாம் எண்ணிக் கொண்டு மோசமாக நடந்து கொண்டார்கள். விலங்குகளை விட மோசமாக. இப்போது உங்களுக்குத் தெரியும், அங்கு வெள்ளம் வந்தது, பயங்கர வெள்ளம் வந்தது, அந்த வெள்ளம் இந்த செங்குட்டுவர்களை அவர்களின் கழுத்துக்கு மேல் மூழ்கடித்தது, பலர் இறந்தனர். “அது எப்படி நடக்க முடியும்?” என்று ஒருவர் கூறலாம். அது அப்படித்தான் நடக்கும்.

நான் உங்களுக்குத் தருகின்ற மற்றொரு உதாரணம் என்னவெனில், அமெரிக்கர்கள் நடந்து கொண்ட விதம் இந்த பொலிவியர்கள் மற்றும் கொலம்பியர்கள் ஆகியோரிடம் மற்றும் அவர்களிடமிருந்து எல்லாவற்றையும் மிகவும் மலிவாக, கோதுமை மற்றும் எல்லாவற்றையும் மிகவும் மலிவாக வாங்குவார்கள். அவர்களுக்கு குறைந்த பட்ச லாபம்தான் கிடைக்கும், அதை இவர்கள் இரட்டிப்பு விலைக்கு விற்று பணம் சம்பாதிப்பார்கள். இது போன்ற அனைத்தையும் செய்வது என்பது எந்தக் கண்ணோட்டத்திலிருந்து பார்த்தாலும் உண்மையில் அது குற்றம்தான், ஆனால் அவர்கள் அதைச் செய்து கொண்டிருந்தனர். நான் அங்கு சென்றேன் – அது எந்த ஆண்டு, 1978 அல்லது அதற்கு மேல் இருக்கலாம் – கொலம்பியாவிற்குச் சென்றேன், அங்கு விருந்துக்கு ஒருவர் வந்திருந்தார். நான் என் கணவருடன் இருந்தேன். அவர் கூறினார், “நீங்கள் இந்தியாவில் இருந்து வந்த ஒரு சிறந்த, புனிதமான நபர் என்று கேள்விப்பட்டேன். அமெரிக்கர்களை நாங்கள் நன்றாக தாக்கி அவர்களை விரட்டியடிக்க நீங்கள் எங்களுக்கு சில ஆசீர்வாதங்களை வழங்க முடியுமா?. ஏனென்றால் அவர்கள் எங்களை வறுமை மற்றும் விஷயங்களில் சிரமப்பட வைத்த விதம் பயங்கரமானது” என்று கூறினார். நான் கேட்டேன், “ஏன் அவர்களை தாக்க விரும்புகிறீர்கள்?” என்று.

“இல்லை, அவர்களுக்கு அது தேவை, இல்லையெனில் அவர்கள் சரிப்பட மாட்டார்கள்.” நான் விருந்தில் இருந்தேன், அதனால் அதைப் பற்றி விவாதிக்க விரும்பவில்லை. “எல்லாம் சரி.” உங்களுக்கு தெரியும், இந்த கொகைன்-போதை வஸ்து அங்கு வந்தது. நீங்கள் இப்போது அந்த இடத்தைப் போய்ப் பார்த்தால் – நான் என் கணவருடன் பொகோட்டாவுக்குச் சென்றிருக்கிறேன் – அது ஒரு குடிசை நகரம் போல இருந்தது, முற்றிலும் ஒரு குடிசை நகரம் போல, அது தகரத்தால் ஆக்கப்பட்டது. இப்போது, பெரிய, பெரிய கட்டிடங்கள் உள்ளன, எஸ்கலேட்டர்கள் மற்றும் அனைத்தும் உள்ளன. கழுதை வண்டியில் பெட்ரோலியம் கொண்டு வருவார்கள். உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? இவ்வளவு குறுகிய காலத்தில் இவ்வளவு பெரிய நாடாக மாறிவிட்டது, அதுமட்டுமல்ல, ஆனால் இப்போது மொத்த அமெரிக்காவும் அவர்களுக்கு பயப்படுகிறார்கள், ஆஸ்திரேலியாவும்கூட. போதை மருந்துகள் அமெரிக்கர்களாலும் எடுத்துக் கொள்ளப்படுகின்றன.

வாஷிங்டனில் என்ன செய்வது என்று தெரியாத அளவுக்கு போதை மருந்துகளை சேமித்து வைத்துள்ளனர். மற்றும் செனட்டர்கள் – அரசு பிரதிநிதிகள் கூட போதைப்பொருளை எடுத்துக்கொள்கிறார்கள். உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? ஒரு நாள் மிஸ்டர் கிளிண்டன் சில போதை மருந்துகளை உபயோகபடுத்தினால்கூட நான் ஆச்சரியப்பட மாட்டேன். அது ஒரு நாகரீகமாக, அது அவர்களுக்கு ஒரு அற்புதமான விஷயமாக மாறிவிட்டது. நீங்கள் உயரடுக்கு நபர்களின் எந்த விருந்துக்கும் செல்லுங்கள், அவர்களுக்கு சிறிது நேரம் இருந்தால், அவர்கள் போதைப்பொருள் பற்றி மட்டுமே பேசுவார்கள், பாருங்கள். “உங்களுக்கு வேண்டுமா? என்று என்னிடம் கேட்டார்கள். உங்களுக்கு எந்த போதை மருந்து பிடிக்கும்?” நான், “எனக்கு எந்த போதை மருந்தும் பிடிக்காது” என்றேன்.

இல்லை. வேண்டும் என்றால், இங்கு அது மலிவாகக் கிடைக்கும், நீங்கள் அங்கே போய்ப் பெற்றுக் கொள்ளலாம் தெரியுமா” என்றார்கள். உயர்தர விருந்துகளில் அதுபற்றி விவாதிக்கிறார்கள். மேலும் குருக்களைப் பற்றி, “உங்களுக்கு எந்த குரு வேண்டும்? அப்படிப்பட்ட ஒரு குரு விற்பனைக்கு இருக்கிறார். பேரம் பேசி கூட நீங்கள் அவரிடம் போகலாம்.” அது போல. உங்களுக்கு தெரியுமா, இதெல்லாம் மிகவும் முட்டாள்தனமானது, என்று நான் உங்களுக்கு சொல்கிறேன். நான் சொல்வது, “இவர்கள் மிகவும் முதிர்ச்சியற்றவர்கள், குழந்தைகளை விட மோசமானவர்கள்.” அவர்கள் இன்னும் வளரவில்லை, வயதால் மட்டுமே வளர்ந்துள்ளார்கள்.

அவர்கள் இயந்திர நுட்ப முறை போன்றவற்றிலும் மற்ற எல்லா விஷயங்களிலும் நல்லதைச் செய்திருக்கலாம், ஆனால் அதற்கும் உங்கள் ஆளுமை வளர்ச்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை, அதனால்தான் அவர்கள் விஷயங்களைப் பற்றிய அணுகுமுறையைக் குள்ளர்களைப் போல நான் காண்கிறேன். மேலும் ஒவ்வொருவரும் நடைமுறையில் போதை மருந்துகளை உட்கொண்டிருக்க வேண்டும், ஆசியர்களைத் தவிர மற்ற அனைவரும் போதை மருந்துகளை உட்கொண்டிருக்க வேண்டும், ஏனென்றால் ஆசியர்களைப் பாதுகாக்கக்கூடிய இரண்டு மரபணுக்கள் இருப்பதாக இப்போது நான் அறிந்தேன், ஆனால் வெள்ளைத் தோல்காரர்களிடத்தில் அவர்களை பாதுகாக்கும் மரபணுக்கள் இல்லை. ஒருநாள் விரிவுரையில் நான் அவர்களிடம் சொன்னேன், பாதுகாக்கும் இரண்டு மரபணுக்கள் இருக்கின்றன, அவை ஆசியர்களிடையே மட்டுமே காணப்படுகின்றன, அதாவது சீனர்கள் மற்றும் இந்தியர்களிடத்தில் மட்டுமே. மற்ற எல்லா மக்களிடமும் அவர்களைப் பாதுகாக்கும் அந்த மரபணுக்கள் இல்லை. அதனால் நடக்கும் இந்த முட்டாள்தனமான விஷயங்களால் அவர்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள், மேலும் அவர்கள் அதை மிக எளிதாக எடுத்துக்கொள்கிறார்கள். இந்த படித்த, நல்ல மனிதர்கள், அதாவது என் கணவரின் தரவரிசையில் உள்ளவர்களும் எப்படி முட்டாள்களாக இருக்கிறார்கள் என்று நான் ஆச்சரியப்பட்டேன். ஒவ்வொரு முறையும் புது மனைவியை அழைத்து வருவார்கள். ஒரு நாள் அவர்கள் அது போல் அழைத்து வந்திருந்தார்கள், அவர்களில் ஒருவர், தன் மனைவியை அழைத்து வந்தார் அவருக்கு இருபதே வயது. இந்த நபருக்கு குறைந்தது எழுபது வயது இருக்கும். எனக்கு அது பற்றித் தெரியாது.

என் கணவர் என்னைக் கிள்ளினார் அவர், “அது அவர் மனைவி. சரியா? அவளைப் பேத்தி என்று அழைத்து விடாதே” என்றார். நான் மிகவும் சங்கடமாக உணர்ந்தேன். இப்படி அபத்தமானவர்கள் வருகிறார்கள், எழுபது வயது முதியவர் இருபது வயதுப் பெண்ணுடன் வருகிறார். அதாவது, அவள் அவருடைய மனைவியாக இருக்கலாம் என்று நீங்கள் நினைக்கவே முடியாது. அதிகபட்சம் ஒரு கொழுந்தியாள், அதிகபட்சம், ஆனால் நான் அவளை பேத்தி என்று நினைத்தேன், அதனால் அவர் என்னை கிள்ளினார் மற்றும் “எதுவும் சொல்ல வேண்டாம்” என்றும் என்னிடம் கூறினார். அப்படித்தான் இருக்கிறது பாருங்கள். இது ஒரு முரண்பாடான உலகம், நீங்கள் சஹஜிலிருந்து இதற்கு வந்தால், என்ன நடக்கிறது? அவர்கள் என்ன செய்கிறார்கள்?

“என்ன அவர்களுக்கு என்ன பிரச்சனை?” என எண்ணுவீர்கள். இப்போது, ஆடைகளை கழற்றுவது – ஆடைகளை கழற்றுவது சிறப்பானதா, பாருங்கள்? குளிர் நாடான சுவிட்சர்லாந்தில் – நான் என் ஸ்வெட்டர், என் கோட், தலையை மூடி, சூடான சாக்ஸ் அணிந்திருந்தேன், ஏனென்றால் அவர்கள் “நாம் வெளியே செல்வோம், ஒரு சிறு கார் பயணமாக” என்று சொன்னதால். எனவே, அங்கு சென்றடைந்தோம். லாஸன்னி – மேற்கு சுவிட்ஸர்லாந்தில் உள்ள ஒரு நகரம் – அங்கு ஒரு மிகப் பெரிய ஏரி இருக்கிறது. எனவே, வழக்கம் போல், கிரிகோயர் அங்கு நிலைமை எப்படி இருக்கிறது என்பதைப் பார்க்க ஓடினார். இரட்டிப்பு வேகத்தில் திரும்பி வந்தார். அவர், “இல்லை, இல்லை, அம்மா, நீங்கள் அங்கு செல்லக் கூடாது.” என்று சொன்னார்.

நான், “ஏன்?” என்றேன். “இல்லை. நீங்கள் போகக் கூடாது. என்னை மன்னிக்கவும். நீங்கள் போகக் கூடாது. வாருங்கள் போகலாம்.” என்றார். அங்கே பெண்கள் அனைவரும் மேலாடையின்றி அமர்ந்திருந்திருந்தார்கள். உங்களுக்குத் தெரியும், – இந்த ஆஸ்திரேலியாவில், நியூசிலாந்திலும் கூட, அவர்களுக்கு கிரிக்கெட் போட்டி இருந்தது. அவர்கள் சிறந்த கிரிக்கெட் வீரர்களாக இருக்க வேண்டும்.

மேலும் டிவியை திறந்து பார்த்தபோது பெண்கள் மேலாடையின்றி அமர்ந்திருந்தனர். நாங்கள் அதை மூடிவிட்டோம். எங்களால் அதைப் பார்க்க முடியவில்லை, ஆனால் இப்போது அவர்கள் கிரிக்கெட்டில் தோற்றுவிட்டார்கள் என்று என்னிடம் கூறப்பட்டது. அவர்கள், நிச்சயமாக, இந்திய சுழற்பந்து வீச்சாளர்களுடன் ஒப்பிடும்போது, இளம் அப்பாவி சிறுவர்கள், தெரிந்து கொள்ளுங்கள்- மிகவும் இளம் வயது, இருபது, இருபத்தி ஒன்று வயதிருக்கலாம். அப்பாவித்தனம் இல்லை, கற்பு இல்லை, மரியாதை இல்லை என்பதால் அவர்கள் அப்படி இருக்க வேண்டும். பெண்கள் மேலாடையின்றி அமர்ந்திருக்கிறார்கள். அவர்கள் எப்படி வெற்றி பெற முடியும்? அங்கே தேவியை அவமதிக்கிறார்கள். அவர்கள் எப்படி வெற்றி பெற முடியும்? அவர்களால் வெல்ல முடியாது, கிரிக்கெட் போன்ற ஒரு விளையாட்டு என்பது விவேகமான ஒன்று.

எந்த விளையாட்டிலும் அவர்களால் வெற்றி பெற முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை, ஏனென்றால் இது கவனத்தை திசை திருப்பும் முற்றிலுமாக. ஆனால் ஏன் இப்படி இருக்கிறார்கள்? எல்லா பெண்களும் விபச்சாரிகளாக மாற முயற்சிக்கிறார்களா? இதில் உள்ள அர்த்தம் என்ன? என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. மேலும் இது அவர்களுக்குப் புரியாத ஒன்று. நீங்கள் அதை அவர்களிடம் சொன்னால், “திருமதி தாட்சர் வெளிப்படையாகவே சொன்னதாக என்னிடம் கூறப்பட்டது அதாவது இந்த கலாச்சாரத்தில் பெண்கள் தங்கள் உடலை வெளிகா காட்ட வேண்டும் என்று சொன்னதாக . இன்னும் அத்தகைய முரண்பாடு இருக்கிறது, என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவர்கள் இங்கு அன்னை மரியாவை உன்னத ஆளுமையாகக் காட்டுகிறார்கள், மேலும் இங்குள்ள பெண்களை நிர்வாணமான பெண்களாகக் காட்டுகிறார்கள். அவர்கள் அன்னை மேரி ஆக விரும்புகிறார்களா அல்லது அவர்கள் என்னவாக விரும்புகிறார்கள்?

மேலும் இது போன்றவர்கள், இந்த மைக்கேல் ஜாக்சன் போன்ற கொடூரமான மனிதர்கள் – அவர் தான் பணம் சம்பாதிப்பதில் மிகவும் பிரபலமானவர். அதாவது, முரண்பாட்டைப் பாருங்கள். எண்ணங்கள் மிகவும் தாழ்வாக இருக்கும் போது இதை முன்னேறிய நாடு என்று சொல்ல முடியுமா? அது எப்படி சொல்ல முடியும்? சஹஜ யோகாவிற்கு வந்த பிறகு, உங்களை நீங்களே பார்க்க முடியும், ஆனால் அது உங்களுள், இந்த பாதுகாப்பு மரபணுக்கள் உங்களுக்குள் நிலைநிறுத்தப்படுகிறது. இது சஹஜ யோகாவில் உள்ள விஷயம். திடீரென்று, நீங்கள் முட்டாள்தனமான இந்த அனைத்தையும் விட்டுவிடுவீர்கள், இப்போது நீங்கள் அதையெல்லாம் விரும்ப மாட்டீர்கள். உண்மையில், இப்போது நீங்கள் எந்த தர்க்கரீதியான பார்வையில் இருந்தும் சரியாகப் பார்த்தால், இந்த முட்டாள்தனத்தின் மாயை இல்லாமல் நீங்கள் பார்க்கும்பொழுது – பாருங்கள், அது தவறு என்று நீங்கள் தர்க்கரீதியாக புரிந்து கொள்ளலாம். பாருங்கள், நீங்கள் ஏன் மற்றொரு ஆண் அல்லது பெண் மீது பொறாமைப்படுகிறீர்கள்? நீங்கள் பொறாமையாக உணர்கிறீர்கள்.

அதாவது நீங்கள் அந்த வாழ்க்கையை விரும்புகிறீர்கள், இல்லையா? மக்கள் கொலை செய்கின்றனர், பெண்கள் ஆண்களை அல்லது பெண்களைக் கொன்றுள்ளனர் ஏனென்றால் அவர்கள் பொறாமை கொண்டிருக்கிறார்கள். அது இயற்கையானதாகவும், இயல்பானதாகவும், மகிழ்ச்சியைத் தருவதாகவும் இருந்தால், அதைப் பற்றி நீங்கள் தவறாக நினைத்திருக்கக் கூடாது. இந்த விஷயங்கள் அனைத்தும் தர்க்கரீதியாக புரிந்து கொள்ளப்பட வேண்டும், இது போல் நடப்பதை நாம் ஏன் விரும்புவதில்லை என்று. அல்லது இது உங்கள் சொந்த மகளுக்கு நடக்கிறது என்றால், நீங்கள் விரும்பாமல் இருக்கலாம். இப்போதெல்லாம், மகள்களுக்கும் அது நடப்பதை விரும்புபவர்கள் இருக்கிறார்கள். ஆனால் – இப்போது அந்த எல்லைக்குச் சென்றால், உதாரணமாக ஒரு நபர், அவருக்குத் தன் மகளுடன் ஏதோ தவறான தொடர்பு இருக்கிறது என்று சொன்னால், இன்று ஒட்டுமொத்த சமூகமும் அதற்கு எதிராக இருக்கிறது. ஆனால் நாளை, இந்த மாயையினால், இந்த மாயாபிசாசுவுக்கு எதிரான இந்த பயங்கரமான பிசாசு-மாயா வேலை செய்யும்போது, யாரும் அதைப் பொருட்படுத்தாமல் போகலாம். அப்படியும் நடக்கலாம். சஹஜின் கலாச்சாரப் பகுதியான அதை நீங்கள் உங்கள் கைகளில் எடுத்துக் கொள்ளவில்லை என்றால், என்ன நடக்குப் போகிறது என்று எனக்குத் தெரியவில்லை.

நீங்கள் தினமும் செய்தித்தாளைப் படித்தால், உங்களுக்கு உண்மையில் மயக்கம் ஏற்படும், இந்த மக்கள் என்ன மாயையில் தொலைந்து போகிறார்கள் என்பது உங்களுக்கு புரியாது. எனவே இது ஒரு மாயை எதிர்ப்பு. ஏனென்றால் மஹாமாயா வந்ததால் மாயா எதிர்ப்பும் வந்துவிட்டது. ஐம்பது வருடங்களுக்கு முன் அல்லது அறுபது ஆண்டுகளுக்கு முன், அது அவ்வளவு மோசமாக இல்லை, என்று நான் உங்களுக்கு சொல்வேன். ஒரு காலத்தில் மக்கள் முட்டாள்தனமாக எதையாவது செய்து கொண்டிருந்தார்கள், ஆனால் இப்போது அது பரவலாகிவிட்டது. ஆனால் இப்போது அதுவே நாகரீகம் ஆகிவிட்டது. இது அதைவிட மோசமானது, அது ஒரு நாகரீகமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது, நீங்கள் அதில் இல்லை என்றால், நீங்கள் வெளியேறிவிடுவீர்கள். நீங்கள் பைத்தியக்கார வீட்டில்தான் இருக்க வேண்டும். இப்போது நீங்கள் கடவுளின் மாயைக்குள் வந்துவிட்டதால் அதை நீங்கள் தெளிவாகப் பார்க்க வேண்டும். “மாயை” என்றால் அன்பு, கடவுளின் அன்பு என்றும் பொருள்படும், அதில், உங்கள் கண்களைத் திறந்து, அவர்கள் என்ன மோசமானதைச் செய்கிறார்கள் என்பதைப் பார்க்க வேண்டும்.

இந்த டிஸ்கோ என்றால் என்ன? உங்களுக்குத் தெரியுமா, இந்தியாவில் அவர்கள் டிஸ்கோவைக் கொண்டு வந்தார்கள், நிச்சயமாக, முஸ்லிம்களான பையன்கள், உண்மையில் அவர்கள் பணக்கார பையன்கள், அவர்கள் இளம் வயது பெண்களை கூட்டிச் செல்கின்றனர், ஏனென்றால் டிஸ்கோவில் ஒரு சட்டம் உள்ளது அதாவது நீங்கள் கட்டாயம் உங்கள் துணையாக – வயது வந்த இளம் பெண்களை அழைத்து வர வேண்டும். அவர்கள் பெரியவர்களாகவும் இருக்கக்கூடாது, மேலும் அவர்களுக்கு மதுவினை கொடுத்து, அதனை குடித்துவிட்டு அவர்கள் தன்னிலை இழந்து போகிறார்கள். பெற்றோர்கள் அவர்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அவர்கள் விபச்சார விடுதிகளுக்குச் செல்ல வேண்டியிருந்தது அல்லது அவர்கள் விற்கப்பட்டனர் அல்லது அவர்களுக்கு என்ன நடக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் அந்த நாட்டில் அதுதான் எதிர்வினையாக இருக்கிறது. அவர்களும் ஒரு நாள் ஏற்றுக்கொள்ளப்படலாம். ஒரு நாள் நாமும் அதையே பெறுவோம், ஏனென்றால் அது மிகவும் சக்திவாய்ந்த விளைவைக் கொண்டிருப்பது, அதனால்தான் கடவுளின் மாயை அப்படிப்பட்டதாக இருக்கிறது. இது, இந்த அழகான விஷயங்கள் அனைத்தும் அதில் உள்ளன, எனவே நீங்கள் அதில் தொலைந்து போகலாம், நீங்கள் அதைப் பார்க்கலாம், நீங்கள் அதைப் படமாக வரையலாம், நீங்கள் அதை வண்ணம் தீட்டலாம். ஆனால் இல்லை, அவர்கள் அப்படி இல்லை – அவர்கள் ஆர்வம் காட்டுவதில்லை.

இதையும் அவர்கள் அசிங்கப்படுத்துவார்கள். ஒவ்வொரு படத்தையும் அசிங்கப்படுத்துவார்கள். ஒவ்வொரு முகத்தையும் அசிங்கப்படுத்துவார்கள். எனவே இதுவே அங்கே இருக்கும் மாயா எதிர்ப்பு, அதற்கு, அதைச் சரி செய்யவும், சிக்கலைத் தீர்க்கவும் ஒரு மஹாமாயா தேவைப்படுகிறது. நீங்கள் எங்கிருந்தாலும் தெய்வீகத்தின் முழுமையான செயல்பாடு உங்களைச் சார்ந்திருக்கிறது. நீங்கள் எத்தனை பேர் இருக்கிறீர்கள் என்பது முக்கியமல்ல – நீங்கள் எங்கிருந்தாலும், எவ்வளவு தீவிரமாக இருக்கிறீர்கள், அதை எப்படிச் செய்ய விரும்புகிறீர்கள், எப்படி உங்கள் கவனத்தை செலுத்த விரும்புகிறீர்கள். என்பது மிகவும் முக்கியமானது, ஏனென்றால் நீங்கள் உங்கள் பொறுப்பைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்த உலகம் மூழ்கிக் கொண்டிருக்கிறது, குறைந்தபட்சம் எண்பது சதவிகிதம் மக்கள் அழிந்துவிடுவார்கள் என்று நான் உணர்கிறேன். பத்து பேரின் ஆன்மா நடுவில் தொங்கிக்கொண்டிருக்கும் என்று நினைக்கிறேன். உண்மையில், மற்றும் பத்து சதவீதம் பேர் சஹஜ யோகிகளாக இருப்பார்கள், அது மேற்கில் பரவும் வகையைப் பொறுத்தது.

ஒருவேளை இந்தியாவில் அப்படி இல்லாமல் இருக்கலாம், என்னால் சொல்ல முடியவில்லை. இந்தியாவில் சஹஜ யோகா மிக வேகமாக பரவுகிறது. மேலும் ரஷ்யா மற்றும் இந்த கிழக்கு நாடுகளில் உள்ள மக்கள் அனைவரும் அதில் குதித்துவிட்டனர். எனக்குத் தெரியவில்லை, என்னை எப்படி அவ்வளவு எளிதாக கண்டுபிடித்தார்கள் என்று. என் முகம் தெளிவாகத் தெரிகிறது என்கிறார்கள். எது அப்படி அவர்களை நினைக்க வைத்தது என்று எனக்குத் தெரியவில்லை. மற்றொரு மாயை அதிகாரம் எனப்படுவது. பணத்தின் அதிகாரத்தை அவர்களால் தவிர்க்க முடிந்தால், அவர்கள் பிரதேசத்தின் மீதும், நிலத்தின் மீதும், இதன்மீதும் அதன்மீதும், என்று அதிகாரம் பெற முயற்சிப்பார்கள். அதுவும் இவை கடந்த காலத்தில் அவர்களை மிகவும் பைத்தியமாக்கியது, ஆனால் இப்போது அவர்கள் அனைவரும் சில முட்டாள்தனமான நிலத்திற்காக போராடுகிறார்கள், அது அவர்களுக்கு ஒருபோதும் சொந்தமில்லை. அது இங்கே நிரந்தரமாக, நித்தியமாக இருக்கும், ஆனால் சண்டைகள் நடந்துகொண்டே இருக்கின்றன.

பின்னர், மதத்தின் பெயரால், அவர்கள் இந்த பிரதேசத்திற்காகவும், அந்த பிரதேசத்திற்காகவும் போராடுகிறார்கள் அல்லது அவர்கள் தங்கள் மதத்திற்கு மாற்றுவதற்காக அல்லது அந்த மதத்தில் அதிகமானவர்களை சேர்ப்பதற்காக போராடுகிறார்கள். மதம் பற்றிய அவர்களின் கருத்து என்னவென்று எனக்குத் தெரியவில்லை. மதம் என்பது அதற்காகவா? சற்று சிந்தித்துப் பாருங்கள். அப்படி யாரும் நினைப்பதில்லை. அது எதைக் குறிக்கிறது? இங்கே, மீண்டும், மஹாமாயா வேலை செய்ய வேண்டியுள்ளது மற்றும் மஹாமாயா இந்த வகையில் செயல்படுகிறு, அதாவது அவர் எல்லா மதங்களையும் ஒருங்கிணைக்கிறாள். எல்லா மதங்களும் ஒன்றுதான், ஒரே ஆன்மீகத்தைத்தான் கொண்டிருக்கிறது என்று அவர் காட்டுகிறாள். ஆன்மீகத்தின் ஒரே மரத்தில் தான், எல்லா மதமும் வளர்ந்துள்ளது. மக்களை ஆன்மிகமாக ஆக்குவதற்குப் பதிலாக, அவர்களைப் பணம் சார்ந்தவர்களாக ஆக்கிவிட்டனர் அல்லது அவர்களை அதிகாரம் சார்ந்தவர்களாக ஆக்கிவிட்டனர்.

நான் சொல்வது இது தலைகீழாக உள்ளது. இது மரம் பூமிக்கு அடியில் வளர்வது போன்றது அல்லது உங்களால் விளக்க முடியாத அபத்தமானது மற்றும் அதுதான் மாயை என்பது. அந்த மாயையானதையே மாயா என அழைக்கப்படுகிறது. இந்த மாயை பலரை ஈர்க்கிறது, கவர்ச்சியூட்டுகிறது – அந்த விஷயம்தான் என்னை கவலைக்குள்ளாக்குகிறது. சில மாயை வருகிறது, ஒரு கானல் நீர் போல, பின்னர் அவர்கள் அதன் பின்னால் ஓடுகிறார்கள், இறுதியில் அவர்கள் அழிக்கப்படுகிறார்கள். எனவே, இப்போது நீங்கள் பார்ப்பது என்னவென்றால், குறைந்தபட்சம் பலபேர், பத்து சதவிகிதம் பேர் காப்பாற்றப்படுவார்கள் அதிக பட்சமாக. ஆனால் இது மிகவும் சோகமான விஷயம், ஏனென்றால் மனிதர்களை உருவாக்குவதற்கு அந்தளவு முயற்சி எடுக்கப்பட்டுள்ளது, அவர்கள் நன்றாக இருப்பதற்கும், அவர்களைப் புத்திசாலித்தனமாக்குவதற்கும். இப்போது நீங்கள் காண்பது என்னவென்றால், அவர்கள் அனைவரும் முடிந்துவிடப் போகிறார்கள்! இது தாங்க முடியாதது, நம்புவது மிக கடினம், ஆனால் அதுதான் நடக்கப்போகிறது, மக்களாகிய நீங்கள் இதைத் தீவிரமாக எடுத்துக் கொண்டு நடைமுறைப்படுத்தாவிட்டால். உங்களைப் பொறுத்தவரை, எந்த மாயைகளும் இருக்கக்கூடாது, ஏனென்றால் உங்களில் பலர் மற்ற விஷயங்களில் மிகவும் ஓய்வில்லாமல் ஈடுபட்டு இருக்கிறார்கள்.

உங்களுக்கு சஹஜ யோகாவை விட மற்ற விஷயங்கள் முக்கியமாக இருக்கிறது. ஆனால் நீங்கள் எதைச் செய்தாலும், அதில் சஹஜ யோகத்தைக் கொண்டு வரலாம். எதிலும் நீங்கள் சஹஜ யோகாவைக் கொண்டு வரலாம். நான் சொல்கிறேன், அரசியலில், விவசாயத்தில், சமூக வாழ்க்கையில், உங்கள் வேலைகளில், எல்லா இடங்களிலும் நீங்கள் சஹஜ யோகத்தைக் கொண்டு வரலாம். உங்கள் சொந்த நடத்தை மூலம், உங்கள் சொந்த புத்திசாலித்தனம் மூலம், நீங்கள் சஹஜ யோகாவை ஒவ்வொரு துறையிலும் கொண்டு வரலாம், “சஹஜ யோகாவை நாம் எங்கு கொண்டு வரலாம்? என்பதை நீங்கள் சிந்திக்க வேண்டும். நாம் அதை எங்கே செயல்படுத்த முடியும்?” கடவுளின் மாயைக்குள் நுழைவது இப்படித்தான், அதன் மூலம் அனைத்து மாயைகளிலிருந்தும் நீங்கள் விடுபடுவீர்கள், எது தவறானதோ, எது உங்களை சரியானதைப் பார்க்க அனுமதிக்கவில்லையோ போன்றவற்றிலிருந்து மற்றும் பின்னர் தீவிரமாக சஹஜ யோகத்தின் வளர்ச்சிப் பக்கத்தை அடைவீர்கள். உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா, இந்த சஹஜ யோகம் எவ்வளவு பயனுள்ளதாக இருக்கிறது, எப்படி அற்புதங்கள் நிகழ்கின்றன, தெய்வீக சக்தி எந்தளவு உங்களுக்கு உதவ ஆர்வமாக உள்ளது, எல்லாவற்றுக்கும் மேலாக இந்த மஹாமாயா மற்றும் எல்லாம் இருந்தும் கூட. எனது பேரனின் உதாரணத்தை நான் இப்போது உங்களுக்குக் கூறுகிறேன், ஏனென்றால் இந்த முறை அவனுக்கு ஒரு பெரிய மாயை இருந்ததை நாங்கள் பார்த்தோம்.

அவனிடம்… “நீ கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்திற்கு செல்லக்கூடாது, தெரிந்து கொள்” என்று நான் சொன்னேன். மேலும் நான் சொன்னேன், “அவர்கள் பொதுவாக சேர்ப்பது இல்லை, மேலும், இது ஒரு வகையான அதிகமான தத்துவார்த்த விஷயங்களாக இருக்கும், இது உண்மையில் உனக்கு நல்லதல்ல. உனக்கு அங்கே சலித்துவிடும். அதனால் போகாதே என்று. அவன் நான் சொன்னதைக் கேட்கவில்லை. பின்னர் அவன் ஒப்புக்கொண்டான், “சரி, எனக்கு இவற்றில் அனுமதி கிடைத்தால், அமெரிக்காவில் உள்ள இந்த பெரிய பல்கலைக்கழகங்களுக்கு என்றால் மட்டும் நான் செல்வேன்.” ஆனால் அவன் பின்னர் முயற்சிக்கவில்லை. அப்படி எதுவும் செய்யவில்லை. கடைசி நேரத்தில் நாங்கள் அவனுக்காக ஒரு விண்ணப்பத்தை அனுப்பினோம், கடைசி நேரத்தில். அவர்கள், “நீங்கள் வர முடியாது.

இது, அது. இந்த எக்ஸாம், எஸ்ஏடி எக்ஸாம், அந்த எக்ஸாமுக்கு நீங்கள் தயாராக வேண்டும்”, என்றதும் அவனுக்குள் ஒரு பயம் வந்துவிட்டது. அவன் பாடம் கற்றுக்கொண்டதைப் பாருங்கள். “கடவுளே, அமெரிக்கா செல்வது மிகவும் சுலபம் என்று நினைத்தேன். அது அப்படி அல்ல. நீங்கள் பணத்தை பிணையம் கொடுத்தாலும் அது எளிதானது அல்ல. பின்னர் அவன் சிந்திக்கத் தொடங்கினான், “நான் கேம்பிரிட்ஜ், கேம்பிரிட்ஜ் பற்றி இவ்வளவு யோசித்தேன்? இதுவும் அதே, போன்று கடினமான விஷயம்.” அதுவரை அவன் SAT க்கு செல்ல விரும்பினான், அங்கு ஒரு பரீட்சை எழுத ஆரம்பித்தான், ஆனால் உண்மையில் தேர்வில் கலந்து கொண்டது, பயிற்சி எடுத்த ஆறே நாட்களுக்குப் பிறகுதான், நான் நினைத்தேன், “அவன் எப்படி போக முடியும்? ஆறு நாட்களில் அவனால் தயார் செய்திருக்க முடியாது எனவே, “நீங்கள் இங்கு SAT தேர்வுக்கு வர முடியாது” என்றார்கள். இப்போது அவன் இந்தியாவில் செட்டில் ஆகிவிட்டான்.

அவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அப்போதும் அவன், “இந்த கேம்பிரிட்ஜுக்கு மீண்டும் முயற்சி செய்கிறேன்” என்று சொல்லிக் கொண்டிருந்தான். “இப்போது அதை மறந்துவிடு” என்று சொன்னேன். அவன் என் பேச்சைக் கேட்கவில்லை. அப்போது அவன் மிகுந்த ஏமாற்றம் அடைந்தான். அவன் என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, “நான் ஒரு நல்ல பல்கலைக்கழகத்திற்குச் செல்வதாக இருந்தால் மட்டுமே அமெரிக்காவிற்குச் செல்ல வேண்டும், என்று நான் நினைக்கிறேன், இல்லையெனில், தரமற்ற பல்கலைக்கழகத்திற்குச் செல்வதால் எந்தப் பயனும் இல்லை – நான் இந்தியாவிலேயே சிறந்த கல்வியைப் பெற முடியும்” என்று கூறினான். அதனால் நானும் “சரி” என்றேன். அப்போது அவன் வெளிநாடு சென்று ஏதாவது கற்றுக் கொள்ள வேண்டும் என்று விரும்பியதால் நான் ஒரு பந்தன் கொடுத்தேன். எல்லாம் சரியாகிவிட்டது. உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா, இது ஒரு உண்மையான அதிசயம் போல வேலை செய்தது.

அவன் நிபந்தனையின்றி அனுமதிக்கப்படுகிறான் என்று பல்கலைக்கழகம் அவனுக்கு கடிதம் எழுதியது. யாரும் எதுவும் செய்யவில்லை. யாரும் எதுவும் எழுதவில்லை, எதுவுமில்லை. அவர்களாகவே அழைத்திருந்தார்கள். என்ன நடந்தது என்று அவர்கள் யாருக்கும் புரியவில்லை, அவனுக்கு எப்படி நிபந்தனையற்ற சேர்க்கை கிடைத்தது? என்று. எனவே, பாருங்கள், இது ஒரு அதிசயம். ஆனால் அதற்கு முன் மாயையானது இந்த விளையாட்டை விளையாட வேண்டியிருந்தது, இல்லையெனில் அவன் அதன் முக்கியத்துவத்தை அறிந்திருக்க மாட்டான். எனவே, உங்கள் வாழ்க்கையிலும், அத்தகைய மாயை தன் விளையாட்டை நடத்தும். நீங்கள் சரியானதைச் செய்ய விரும்பாதபோது.

சரிதான், செய். நீ இதை செய். சரிதான், அதை செய், அதை செய். இறுதியில், நீங்கள் ஒரு பாடம் கற்றுக்கொள்கிறீர்கள். “அம்மா, நான் அதை செய்ய விரும்புகிறேன்” என்று நீங்கள் சொன்னால் நான் வேண்டாம் என்று சொல்லமாட்டேன். “சரி, செய்யுங்கள்.” “நான் அதை செய்ய விரும்புகிறேன்.” “ஓ, செய்யுங்கள், நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்களோ அதைச் செய்யுங்கள்.” நீங்கள் ஏற்றுக்கொள்வதாக இருப்பதாக நான் நினைத்தால், “அதனை செய்யாமல் இருப்பது நல்லது, அது உங்களுக்கு உதவப் போவதில்லை” என்று நான் உங்களுக்குச் சொல்லலாம். ஆனால் பின்னர் அவர்கள், முழுமையான ஏமாற்றத்தை அடையும்போது, அவர்கள் சரியான முடிவை எடுக்கிறார்கள், சரியான விஷயங்களுக்கு வருகிறார்கள்.

ஏனென்றால், அவர்கள் தங்கள் சொந்த சுதந்திரத்துடன் முயற்சி செய்யட்டும், ஆனால் பின்னர் அவர்கள் அதை புரிந்துகொள்கிறார்கள், “அம்மா சொன்னது சரிதான். நான் அதை செய்திருக்க வேண்டும். சரிதான்.” எனவே இதுதான் நடக்கிறது. மாயை அப்படித்தான், நீங்கள் விரும்பியதைச் செய்ய அது உங்களை அனுமதிக்கிறது. நீங்கள் உங்கள் சுதந்திரத்தைப் பயன்படுத்துங்கள். பல இடங்களுக்குச் செல்கிறீர்கள். நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்களோ, அதைச் செய்கிறீர்கள். எது சரி என்று நினைக்கிறீர்களோ, அதைச் செய்கிறீர்கள். சரி, இதில்தான் மாயையின் ஒரு பங்கு இருக்கிறது.

ஆனால் மஹாமாயா என்பது உங்களை மீண்டும் கொண்டு வந்து, இயல்பு நிலைக்கு கொண்டு வந்து, யதார்த்தத்திற்கு கொண்டு வந்து, புரிந்து கொள்ள வைக்கிறது. நீங்கள் மஹாமாயாவைப் புரிந்துகொள்ளும்போது, அந்த கட்டம் வருகிறது. ரஷ்யர்கள் செய்தது போல என்று நான் சொல்வேன். எப்படி நான் ஐன்ஸ்டீனை விட பெரிய வேலை செய்கிறேன் என்பதை அவர்கள் புரிந்து கொண்டார்கள்? “பாருங்கள், ஐன்ஸ்டீன் என்றால் என்ன? அவர் வெறும் பொருட்களைக் கொண்டு வேலை செய்கிறார். நீங்கள் மனிதர்களுடன் வேலை செய்கிறீர்கள் என்பதை நீங்கள் உணர்கிறீர்களா அம்மா?”. அவர்களைுக்கு நான் அவர்கள் அனைவரையும் விட உயர்ந்தவள், அனைவரையும் விட பெரியவள், அது உண்மைதான், என்பதை நான் சொல்ல வேண்டும். அது வேலை செய்யும் விதம் ஒரு வகையில் உண்மைதான், ஆனால் அதன் அர்த்தம், சில அஹங்காரத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்றல்ல, ஏனென்றால் நான் அது போன்று உருவாக்கப்பட்டுள்ளதால், நான் அதைச் செய்கிறேன். அதில் என்ன சிறப்பு இருக்கிறது?

நான் இப்படித்தான், அதனால் நான் அப்படித்தான் இருப்பேன். அதில் என்ன அவ்வளவு சிறப்பு இருக்கிறது? ஒருவர் பெருமையும் அகங்காரமும் கொள்வது என்பது, எப்போது நீங்கள் உங்களை மீறிய எதையாவது செய்கிறீர்கள் என்று நினைக்கும் போதுதான் வரும். பாருங்கள், எல்லாம் இருக்கிறது. எனக்கு ஏற்கனவே கிடைத்துவிட்டது. பாருங்கள் இப்போது, இந்த கூடாரம் நிழல் கொடுக்க வேண்டும். இப்போது அது நிழல் தருவதால் அதற்கு அஹங்காரம் இருக்க வேண்டுமா? சூரியன் என்பது உங்களுக்கு ஒளி தருவதாகும். எனவே அது ஒளியைக் கொடுப்பதற்காக உருவாக்கப்பட்டிருப்பதால், அது ஒளியைக் கொடுக்கிறது, ஏனென்றால் கடவுள் ஒளியைக் கொடுப்பதற்காக வேண்டி அதற்கு ஒளியைக் கொடுத்தார், எனவே அது உங்களுக்கு ஒளியைக் கொடுக்கிறது. அதற்கு அஹங்காரம் இருக்க வேண்டுமா?

ஆனால், நீங்கள் பாருங்கள், உங்களிடத்தில் ஏதாவது சிறப்பானதான ஒன்று இருப்பதாகக் வைத்துக் கொள்ளுங்கள், பிறகு நீங்கள் அதைச் செய்ய வேண்டும், உங்களிடம் என்ன சிறப்பு இருக்கிறதோ அதைச் செய்ய வேண்டும். இப்போது, பூக்கள் மிகவும் அழகாக இருக்கின்றன, அவை மிகவும் சிறப்பு வாய்ந்தவை, மிகவும் வசீகரமானவை. அதாவது, அவைகளிடமிருந்து என் கவனத்தை என்னால் எடுக்க முடியவில்லை, அந்தளவு அவை மிகவும் அழகாக இருக்கின்றன. சரி, ஆனால் அவை அப்படி இருப்பதால், அவை அப்படி இருக்கின்றன. அதில் என்ன இருக்கிறது? “நாங்கள் மிகவும் நன்றாக இருக்கிறோம், நாங்கள் மிகவும் அழகாக இருக்கிறோம்” என்று அவை அஹங்காரம் கொண்டிருக்கப் போவதில்லை. இல்லை, அவைகளில் யாருக்கும் இல்லை. எனவே இந்த அஹங்காரம் மீண்டும் மஹாமாயாவின் பங்கு இருக்கும்போது வருகிறது, அதாவது நீங்கள் உங்கள் சொந்த புரிதலின் காரணத்தால் மாயையில் இருக்கும்போது. இப்போது நீங்கள் சஹஜ யோகிகள். அதற்காக நீங்கள் மிகவும் பெருமைப்பட வேண்டும்.

எனக்குத் தெரியாது, நீங்கள் அப்படித்தான் இருக்க வேண்டும் -. இந்த கொடூரமான மனிதர்களைப் பாருங்கள், அவர்கள் எல்லோரும் எவ்விதத்திலும் கடவுளுடன் தொடர்பில்லாதவர்கள். அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது. நேற்று அந்தப் பெண்மணி, “நீங்கள் ஏன் இறைவனைத் துதிக்கக் கூடாது?” என்று எனக்கு ஒரு விரிவுரை வழங்குகிறார். பாருங்கள். அவர் எனக்கு ஒரு விரிவுரை வழங்குகிறாள். எனவே “நான் சில விதத்தில் பெரியவன்” என்பது ஒருவித அனுமானம்தான், அது உங்களிடத்தில் அஹங்காரத்தை உண்டாக்குகிறது, ஆனால் அதுவும் ஒரு மாயை, ஏனென்றால் நீங்கள் இன்னும் கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. இறுதியில், உங்கள் அஹங்காரம் நொறுங்கி, அது எப்படிப்பட்ட ஒரு ஏமாற்று என்பதை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். நீங்கள் அதைக் கண்டறிந்ததும், “நான் இனி அஹங்காரத்தைக் கொண்டிருக்க விரும்பவில்லை.”

என்பீர்கள். அதாவது சஹஜ யோகத்தின் எந்த வேலையையும் செய்ய மறுக்கும் சில சஹஜ யோகிகள் இருக்கிறார்கள். நான், “ஏன் அப்படி?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள் “அம்மா, நாங்கள் மிகவும் புத்திசாலிகள், எங்கள் புத்திசாலித்தனம் எங்களை ஏமாற்றுகிறது, மேலும் அதனால் நாங்கள் அஹங்காரத்தை வளர்த்துக் கொள்வோம்.” என்றார்கள். நான் சொன்னேன், “இப்போது இது ஒரு தப்பிக்கும் வேலை. அது அப்படித் தராது, சஹஜ யோகா உங்களுக்கு ஒருபோதும் அஹங்காரத்தைத் தராது, ஆனால் உங்களுக்கு மகிழ்ச்சியைத்தான் தரும். அது உங்களுக்கு அஹங்காரத்தைக் கொடுத்தால், அது சஹஜ் அல்ல. அது உங்களுக்கு மகிழ்ச்சியத்தான் கொடுக்க வேண்டும். யாருக்காவது விழிப்புணர்வு கொடுப்பது அல்லது நீங்கள் யாரையாவது குணப்படுத்துவது, யாரிடத்திலாவது அன்பாக இருப்பது, எல்லாம், உங்களுக்கு திருப்தியை மட்டும்தான் தரும் மற்றும் நீங்கள் ஆனந்தமடைவீர்கள்.

அதுதான் உண்மை. அதாவது, நீங்கள் இங்கு வந்துள்ளீர்கள், நீங்கள் இவ்வளவு நல்ல இசையை இசைக்கிறீர்கள், இதெல்லாம் செய்கிறீர்கள். இப்போது நீங்கள் இந்திய பாணியைக் கற்றுக்கொண்டீர்கள், எப்படி என்று எனக்குத் தெரியவில்லை. அதற்கு அவர்கள் ஒவ்வொருவரும் நிறைய அஹங்காரம் கொண்டிருக்க வேண்டும். ஆனால் அப்படி இல்லை, உங்கள் தாயின் மாயையில், நீங்கள் அனுபவிக்கிறீர்கள். மாயை உங்களுக்கு இன்பத்தைத் தர வேண்டும். இந்த மாயை கொடுக்கக்கூடிய சிறந்த விஷயம் அதுதான், நீங்கள் அதை மிகவும் நன்றாக அனுபவிக்க முடியும். இந்த மஹாமாயா உருவாக்கிய மிக அழகான சூழல் இது என்று நினைக்கிறேன். எனவே நீங்கள் ஒருவரையொருவர் சந்தோஷித்துக் கொள்ள முடியும், நீங்கள் என் தோழமையை சந்தோஷிக்க முடியும், நீங்கள் இயற்கையை சந்தோஷிக்க முடியும். எல்லாவற்றுக்கும் இடையே அவ்வளவு நல்லுறவு, அழகான புரிதல் அங்கே இருக்கிறது.

யார் உயர்ந்தவர், யார் தாழ்ந்தவர், என்ன பதவி, அவர் எவ்வளவு பணம் வைத்திருக்கிறார் அல்லது என்ன வைத்திருக்கிறார் என்று யாரும் கவலைப்படுவதில்லை, எதுவும் இல்லை, நீங்கள் அனைவரும் அனுபவிக்கிறீர்கள். ஒருவருக்குத் திறமை இருந்தால், அவர் அதனை அனுபவிக்கிறார், ஏனென்றால் அவரிடம் திறமை இருக்கிறது என்பதால், மற்றவர்களும் அவருடைய திறமையை அனுபவிக்கிறார்கள். ஏனென்றால் அவரிடம் திறமை இருக்கிறது. பொறாமைகள் இல்லை, போட்டிகள் இல்லை, எதுவும் இல்லை. யாரோ ஒருவர் நன்றாகப் பாடுகிறார், சரிதான். அவர்கள் என்னிடம் சொல்வார்கள், “அம்மா, உங்களுக்குத் தெரியுமா, அவர் நன்றாகப் பாடுகிறார்.” பாரிஸில் ஒரு நபர் இருக்கிறார், அவர் ஒரு கறுப்பர் என்று நான் நினைக்கிறேன், கருப்பர் இனத்திலிருந்து வந்தவர், ஏனென்றால் அவருக்கு மிகவும் சுருள் முடி உள்ளது, மிகவும் அருமையான பையன். எனவே, இத்தாலியில் இருந்து வந்த ஒருவர் திடீரென்று “அம்மா, அவர் நன்றாக நடனமாடுவார் தெரியுமா?” என்று சொன்னார். “உங்களுக்கு எப்படித் தெரியும்?”

“நான் அவர் நடனமாடுவதைப் பார்த்துள்ளேன்.” “அப்படியானால் அவர் நடனமாடுவதை எப்போது பார்த்தீர்கள்?” என்று நான் கேட்டேன். “உங்களுக்குத் தெரியும், நீங்கள் அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தீர்கள். அப்போது அதை நான் பார்த்தேன்.” ஒரு குழு நடனத்தில் அவர் அவரைப் பார்த்துள்ளார். அவரை அழைத்துக் கொண்டு வந்து, “அம்மாவுக்கு முன் நீ நடனமாடுவது நல்லது” என்று சொன்னார். பாருங்கள் இந்த மாதிரியான விஷயங்கள் அந்தளவு மிகவும் மகிழ்ச்சி தருவதாக இருக்கிறது. இவர் ஏதோ ஒரு நிகழ்ச்சியில் குறைந்தது இரண்டாயிரம் பேர் நடனமாடுவதைப் பார்த்துள்ளார், அதிலிருந்து இவர் அவரைத் தேர்ந்தெடுத்துள்ளார். இவர் பாரிஸைச் சேர்ந்தவர், அவர் இத்தாலியைச் சேர்ந்தவர், அவருடைய கண்கள் அவரை எப்படி தேர்ந்தெடுத்து, அவர் அவரை அழைத்து வந்திருக்கிறார்.

“அம்மா, நீங்கள் அம்மாவுக்கு முன் நடனமாடுவது நல்லது, அவசியம்! நீங்கள் மிகவும் நன்றாக ஆடுகிறீர்கள்.” மேலும் அவர் நடமாடினார். ஆனால் பாருங்கள் நான் அதை தவறவிட்டிருக்கலாம் அல்லது எதுவாகவும் இருக்கலாம். நான் பார்த்திருந்தாலும் கூட நான் அவரிடம் கேட்டிருக்க மாட்டேன். ஆனால் இந்த நபர் அங்கு சென்றார், இவர் அவரைப் பார்த்தார், இவர் அவரை இங்கே அழைத்து வந்தார். பாருங்கள் நான் சொல்வது, இந்த விஷயங்கள் மிகவும் மகிழ்ச்சியைத் தருவது என்கிறேன். அது இல்லாவிட்டால், சாதாரணமாக, ஒருவர் என்ன செய்வார், தெரிந்தோ தெரியாமலோ என் முன் வந்து நடனமாடத் தொடங்கி, தனக்குத் தெரிகிறதோ இல்லையோ தன்னைக் காட்டிக் கொள்ள முயல்வார் பொதுவாக. ஆனால் தெரிந்தவர் ஒருவர் அப்படி வரவே மாட்டார், “இப்போது ஆடலாம் வாருங்கள்” என்று தனி மனிதராக அவரைப் பார்த்து அழைத்து வந்தார். அவர்கள் ரஷ்யாவிலிருந்து வந்தவர்களா, அல்லது அமெரிக்காவிலிருந்து வந்தவர்களா, அல்லது இந்தியாவிலிருந்து வந்தவர்களா போன்ற எந்த வித்தியாசமும் இல்லை.

எனவே இந்த தோல் நிறத்தின் வேறுபாடுகள் அனைத்தும் முடிந்துவிட்டன. மேலும், நான் காண்பது ஒவ்வொருவரின் திறமையை எப்படி பாராட்டுகிறார்கள் பாருங்கள், ஒவ்வொருவரும், அவர் எப்படிப் பேசுகிறார் என்றும், திடீரென்று யாரோ ஒருவர், “ஓ, அவர் எப்படிப்பட்ட திறமையானவர்” என்றும் சொல்வதை நீங்கள் காணலாம். “நீங்கள் அவரை எப்போது சந்தித்தீர்கள்?” “இல்லை, நான் அவரைப் பற்றி கேள்விப்பட்டேன்.” பாருங்கள், இந்த பாராட்டு மற்றும் மற்றவர்களைப் பற்றிய இந்த அழகான உணர்வு அனைத்தும், சஹஜ் மூலம் மட்டுமே சாத்தியமாகும். பொறாமைகள் இல்லை, போட்டிகள் இல்லை, எதுவும் இல்லை. அவை அறியாமையால்தான் வருகிறது, இது உங்களைப் பற்றிய மாயையை உருவாக்குகிறது, மேலும்: ” இதுதான். நான், அதுதான் நான்.” என்பீர்கள். பின்னர் “நான்” என்பது அப்படியே கீழே இறங்கி விடுகிறது.

எனவே அனைத்து நிபந்தனைகளும் ஒரு மாயையை உருவாக்கலாம். பல நிபந்தனைகள் உள்ளன, “நான் இப்படிப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவன், நான் அப்படிப்பட்டவன்” என்று. அதெல்லாம் நிறுத்தப்பட வேண்டும். எனவே இன்றைய தினம் ஒரு விசேஷமான புத்தாண்டு தினம். இதுவே, “இப்போது, இன்றைய நாள் புதிதாக ஒன்றைத் தொடங்குவதற்கான மிகவும் அனுகூலமான நாள்” என்று சொல்கிறார்கள், மேலும் இந்த மஹாமாயா கரையத் தொடங்கப்பட வேண்டும். படிப்படியாக, நீங்கள் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். பலர் என்னிடம், “அம்மா, நீங்கள் அதை எப்படி செய்தீர்கள்?” என்பார்கள். அதை மறந்துவிடுங்கள். அதுதான் மகாமாயை, அதை மறந்துவிடுங்கள்.

நான் அதை எப்படி செய்தேன்? அதை மறந்துவிடுங்கள். அந்த பக்கம் நீங்கள் செல்லத் தேவையில்லை, மகிழுங்கள். நீங்கள் அந்த மாயையில் இருக்கிறீர்கள் என்பதை மட்டும் அனுபவியுங்கள் மற்றும் நீங்கள் அதனை அனுபவிக்கிறீர்கள். இந்த மஹாமாயாவை அனுபவிக்க இதுவே சிறந்த வழி. இன்று முதல் முறையாக இந்த மஹாமாயா பூஜை செய்யப்படுகிறது. குடி பத்வாவின் காரணமாக, சஹஜ யோகவிலுள்ள அனைத்தையும் உள்ளடக்கிய தனித்துவமான ஒன்றைச் செய்ய வேண்டும் என்று நினைத்தேன், சஹஜ யோகவிலுள்ள அனைத்தையும். இது ஒரு அவதாரம் அல்ல, இது ஒரு நாடி அல்ல, இது ஒரு தேவி அல்ல, ஆனால் அது அனைத்தையும் உள்ளடக்கியது. சில நேரங்களில் நான் சொல்வது போல் அது ஒரு ஒளிப்படமாக, அதில் ஒலி, காட்சி என எல்லாமே இருக்கிறது – நாடகம், இசை, மேலும் நடிப்பு எல்லாம். இப்போது ஒளிப்படத்தில் எல்லாம் இருக்கிறது.

அதாவது, அதற்காகவே இவை அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. அதே போல, மஹாமாயாவிடம் எல்லாம் இருக்கிறது என்று நினைக்கிறேன், நீங்கள் என்னிடம் சொல்லும் ஒவ்வொரு பகுதியும், நீங்கள் அனுபவிக்கும் ஒவ்வொன்றும், நீங்கள் கண்டுபிடிக்கும் ஒவ்வொன்றும், உங்களுக்காக உருவாக்கப்பட்ட மஹாமாயாவின் தரிசனத்தில் உள்ளது. கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக !