Christmas Puja Ganapatipule (India)

கிறிஸ்துமஸ் பூஜை டிசம்பர் 25, 2002 கணபதிபுலே, இந்தியா உங்கள் அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!
சகஜ யோகாவின் படி, கிறிஸ்து உங்கள் ஆக்ஞா சக்கரத்தில் நிலைத்துள்ளார். அவரது முழு வாழ்க்கையும் ஒரு விழிப்புணர்வு பெற்ற ஆத்மாவாக இருக்கும் ஒரு நபரின் குணங்களை சித்தரிக்கிறது. மற்றும் அவர் பரிந்துரைத்தது என்னவென்றால் தனது சொந்த வாழ்க்கையில் உங்களிடம் பேராசை அல்லது மோகம் இருக்கக்கூடாது. இந்த நாட்களில் மக்கள் உலகம் முழுவதும் பேராசை கொண்டுள்ள விதம் உண்மையில் அதிர்ச்சியளிக்கிறது. குழந்தை பருவத்திலிருந்தே, நம்முடைய குழந்தைகள் இதைக் கேட்பது அல்லது அதைக் கேட்பது என்று கற்றுக் கொண்டனர். வாழ்க்கையில் முழுமையான திருப்தி மட்டுமே உங்களுக்கு அந்த சமநிலையை, அந்த சமநிலையை கொடுக்க முடியும், […]

Talk about all Chakras Errol Douglas, London (England)

இத்தகைய ஒரு தனித்துவம் வாய்ந்த கூட்டத்திற்கு என்னை அழைத்ததற்காக திரு எம்ரோவுக்கு நன்றி.

இந்த தலைப்பு மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது அதாவது, எப்படி சகஜ யோகா அழகுக்கு உதவும். இப்போது சகஜ யோகா, உங்களுக்குத் தெரிந்தபடி, இங்கே அது காட்டப்பட்டுள்ளது நீங்கள் பார்ப்பது போல், உங்கள் முக்கோண எலும்பில் ஒரு சக்தி இருக்கிறது. இது ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ளது – ஒவ்வொரு (மனிதனுக்கும்). மேலும் இந்த சக்தி எழுப்பப்பட வேண்டும். பின்னர் அது இந்த ஆறு மையங்கள் வழியாக செல்கிறது. ஏழாவது கீழே உள்ளது, எண் ஒன்று, மற்றும் உங்கள் உச்சிக்குழி எலும்பு பகுதி வழியாக துளைத்து உங்களை தெய்வீகத்துடன் இணைக்கிறது. அதன் விளைவாக, இந்த மையங்கள் அனைத்தும் – […]

Guru Puja: Cosmic Consciousness Gmunden (ஆஸ்திரியா)

உங்கள் அன்பின் இந்த அழகிய வெளிப்பாட்டைக் கண்டு பிரமிக்கிறேன். அத்தகைய கவனமும் படைப்பாற்றலும். வெளிப்புற இயற்கையை இங்கு மிகவும் அழகாக உருவாக்கபட்டதற்கு நான் மிக அதிர்ஷ்டசாலியான குருவாக இருக்க வேண்டும். இதைப் பார்த்த பிறகு, எந்த குருவும் தனது இதயம் முழுமையாக உருகுவதில் இருந்து தப்ப முடியாது. உண்மையில், என் சீடர்கள் மிகவும் புத்திசாலி மக்கள். அவர்களால் எந்த குருவையும் நடுநிலையாக்க முடியும். இதனால், சீடரை ஒழுங்குபடுத்துவதற்கு பயன்படுத்தப்படும் குருவின் கோல், தாமரையாக உரு மாறும். ஒவ்வொரு முறையும் சஹஜ யோகிகள் தெய்வீகத்துடன் ஒன்றாவதைப் பார்ப்பது ஒரு அழகான ஆச்சரியம். அவர்களின் மகிழ்ச்சியின் வெளிப்பாடு மற்றும் தெய்வீகத்தின் கருத்தாக்கத்தை நீங்கள் மிக தெளிவாகக் காணலாம். இன்று நான் அமர்ந்திருப்பது போல தான், […]

Advice for Effortless Meditation London (England)

வாழ்க்கையில் … அதுபோலவே நுண்ணதிர்வுகள் பாய்ந்து கதிர்வீச்சாகப் பரவுகின்றன.

நீங்கள் செய்யவேண்டியது, அதன் தாக்கத்திற்கு உங்களை உட்படுத்த வேண்டும். எந்த முயற்சியும் செய்யாமல் இருப்பதே சிறந்தவழி. எங்கு உபாதையெனக் கவலைப்பட வேண்டாம். தியானத்தின் போது , பலரை நான் பார்த்திருக்கிறேன். எங்காவது உபாதையிருந்தால் அதிலேயே கவனம் செலுத்துகின்றனர் நீங்கள் கவலைப்பட வேண்டாம். அதை விட்டு விடுங்கள். அது தானாகவே சரிசெய்யப்படும். இது எளிதானது. ஆக நீங்கள் எந்த முயற்சியும் செய்ய வேண்டியதில்லை. இதுதான் தியானமாகும்.

தியானம் என்பது கடவுளின் அருளுக்கு உங்களை உட்படுத்துவதாகும். அந்தக் கருணைக்கே உங்களை எப்படி குணப்படுத்துவது என்று தெரியும். உங்களை குணப்படுத்தி, உங்களுக்குள் எப்படி தன்னை தக்க வைத்துக் கொள்வது என்று தெரியும். […]

The Role of Tongue, Sight and Feet in Spiritual Evolution New Delhi (India)

ஒரு தாயாகவும் குருவாகவும் இருப்பது எவ்வளவு கடினம் என்பதைப் பற்றி நான் சொல்லிக் கொண்டிருந்தேன்.

ஏனென்றால் இரண்டும் மிகவும் முரண்பாடான செயல்பாடுகள். உங்கள் இரட்சிப்பின் பொறுப்பாளராக இருக்க விரும்பும் ஒரு நபருக்கு, விசேஷமான , மோட் க்ஷ தாயினியாக [விடுதலை வழங்குபவர்], இருப்பது மிகவும் கடினம். பாதையானது மிகவும் மென்மையாகவும், ஏமாற்றும் விதமாகவும் இருப்பதால் நீங்கள் அனைவரும் தாங்களாகவே வந்து கடந்து செல்ல வேண்டும். நீங்கள் இந்த பக்கமாகவோ அல்லது அந்த பக்கமாகவோ விழுந்தால் உங்களுக்கு பேரழிவு ஏற்படும். உங்கள் ஏறுதலை நான் கவனித்து வருகிறேன் ஒரு தாயின் இதயபூர்வமான அன்புடனும் குருவின் வழிகாட்டுதலிலும் நீங்கள் மேலே வருவதை நான் காண்கிறேன். பின்னர் மக்கள் கீழே விழும் காட்சிகளைப் பார்க்கிறேன் . […]