Talk about all Chakras Errol Douglas, London (England)

இத்தகைய ஒரு தனித்துவம் வாய்ந்த கூட்டத்திற்கு என்னை அழைத்ததற்காக திரு எம்ரோவுக்கு நன்றி. இந்த தலைப்பு மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது அதாவது, எப்படி சகஜ யோகா அழகுக்கு உதவும். இப்போது சகஜ யோகா, உங்களுக்குத் தெரிந்தபடி, இங்கே அது காட்டப்பட்டுள்ளது நீங்கள் பார்ப்பது போல், உங்கள் முக்கோண எலும்பில் ஒரு சக்தி இருக்கிறது. இது ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ளது – ஒவ்வொரு (மனிதனுக்கும்). மேலும் இந்த சக்தி எழுப்பப்பட வேண்டும். பின்னர் அது இந்த ஆறு மையங்கள் வழியாக செல்கிறது. ஏழாவது கீழே உள்ளது, எண் ஒன்று, மற்றும் உங்கள் உச்சிக்குழி எலும்பு பகுதி வழியாக துளைத்து உங்களை தெய்வீகத்துடன் இணைக்கிறது. அதன் விளைவாக, இந்த மையங்கள் அனைத்தும் – இவற்றின் பொறுப்பான நம் உடல், மன, உணர்ச்சி மேலும் ஆன்மீக இருப்பும் அவை அனைத்தும் அறிவொளி பெற்று ஒருங்கிணைகின்றன. இந்த சக்தி அனைவரிடமும் உள்ளது. ஆனால் அதைப் பற்றி பேசும் பொழுது, மக்கள் அதை நம்புவதில்லை. உங்களுக்கு அதன் அனுபவம் கிடைக்க வேண்டும். உங்களுக்கு அந்த அனுபவம் கிடைத்தவுடன், நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள், நீங்கள் கற்பனை கூட செய்ய முடியாத பல விஷயங்கள் உங்களுக்கு எப்படி நடக்கிறது என்று! அந்த வகையில், அவர் என்னை இங்கே அழைத்தது மிகவும் கனிவானது அந்த வகையினர் பலரை நான் சந்தித்திருக்கிறேன் ஆனால் இந்த அனுபவத்தை பகிர்ந்து கொள்ள கூடியவர்களை அழைக்க யாரும் முயற்சித்ததில்லை இப்போது அழகுக்கு வருகிறேன், தெய்வீகம் தான் மிக அழகான விஷயம் என்று நான் உங்களுக்கு கூற வேண்டும் ஏனென்றால் அது எல்லா அழகிய பொருட்களையும் உருவாக்குகிறது. இயற்கையை நீங்கள் பார்த்தால், ஒவ்வொரு இலையும் மற்றொன்றிலிருந்து வேறுபட்டது. அவ்வளவு வகைகள்! மேலும், நீங்கள் பார்த்தால், அனைத்து இலைகளும் சூரிய ஒளியைப் பெறும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும். அத்தகைய கருதுதல்! அத்தகைய புரிதல்! அதேபோல், தெய்வீகம் உங்களுள் வேலை செய்யும் போது, உங்களுக்கும் அந்த திறன் உள்ளது மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும், மற்றவர்களுடன் புரிந்து கொள்ளவும் மற்றும் முழுமையின் ஒரு அங்கமாகவும் இருக்கவும். நீங்கள் மட்டுமல்ல, தனி நபர் (எல்லாம்). இப்போது, ​​ஒரு விஷயம் உள்ளது. அதாவது, மக்கள் இப்போது தங்கள் அழகின் மீது நினைப்பாயிருக்கிறார்கள். ஆனால் ஒருவேளை நாம் எப்படி நம் அழகைக் கெடுக்கிறோம் என்றுத் தெரியாமால் இருக்கலாம். முதலில், நம் அழகு எப்படி கெடுகிறது என்று பார்ப்போம். இது சில நேரங்களில் முகத்தில் நிறைய சுருக்கங்களைக் Read More …

Advice for Effortless Meditation London (England)

வாழ்க்கையில் … அதுபோலவே நுண்ணதிர்வுகள் பாய்ந்து கதிர்வீச்சாகப் பரவுகின்றன. நீங்கள் செய்யவேண்டியது, அதன் தாக்கத்திற்கு உங்களை உட்படுத்த வேண்டும். எந்த முயற்சியும் செய்யாமல் இருப்பதே சிறந்தவழி. எங்கு உபாதையெனக் கவலைப்பட வேண்டாம். தியானத்தின் போது , பலரை நான் பார்த்திருக்கிறேன். எங்காவது உபாதையிருந்தால் அதிலேயே கவனம் செலுத்துகின்றனர் நீங்கள் கவலைப்பட வேண்டாம். அதை விட்டு விடுங்கள். அது தானாகவே சரிசெய்யப்படும். இது எளிதானது. ஆக நீங்கள் எந்த முயற்சியும் செய்ய வேண்டியதில்லை. இதுதான் தியானமாகும். தியானம் என்பது கடவுளின் அருளுக்கு உங்களை உட்படுத்துவதாகும். அந்தக் கருணைக்கே உங்களை எப்படி குணப்படுத்துவது என்று தெரியும். உங்களை குணப்படுத்தி, உங்களுக்குள் எப்படி தன்னை தக்க வைத்துக் கொள்வது என்று தெரியும். உங்கள் ஆத்மாவைப் பிரகாசிக்கச் செய்யும். அதற்கு அனைத்தும் தெரியும். எனவே நீங்கள் என்ன செய்ய வேண்டும், அல்லது என்ன நாமம் கூற வேண்டும், என்ன மந்திரங்களை உச்சரிக்க வேண்டும் என்று கவலைப்பட வேண்டியதில்லை. தியானத்தில் நீங்கள் முற்றிலும் முயற்சியின்றி இருக்க வேண்டும். நீங்கள் முழுமையாக உங்களை உட்படுத்த வேண்டும். அச்சமயம் நீங்கள் முற்றிலும் எண்ணங்களற்று இருக்க வேண்டும். ஒரு வேளை, உங்களால் எண்ணங்களற்று இருக்க இயலாத நிலையில் அந்த நேரத்தில் நீங்கள் உங்கள் எண்ணங்களைக் கவனியுங்கள். ஆனால், அதில் ஈடுபாடு கொள்ள வேண்டாம். சூரியன் மெல்ல உதிக்கும்போது,இருள் நீங்கி சூரியக் கதிர்கள் ஒவ்வொரு மூளை முடுக்குகளில் சென்று அந்த இடத்தை முழுவதுமாக ஒளிபெற செய்வதைக் காண்கிறீர்கள். அது போன்று, உங்கள் தேகம் முற்றிலும் ஒளிபெறும். ஆனால் அச் சமயம் , முயற்சித்தாலோ அல்லது உங்களுக்குள் நடக்கும் ஒன்றை தடுக்க நினைத்தாலோ, அல்லது பந்தன் கொடுக்க முயற்சித்தாலோ அதற்குத் தெரியும். தியானத்திற்கு முயற்சியின்றி இருப்பதுதான் ஒரே வழி. ஆனால், நீங்கள் சோம்பலாக இருத்தல் கூடாது. நீங்கள் உன்னிப்பாக அதைக் கவனிக்க வேண்டும். மற்றொருபுறம், மனிதர்கள் உறங்கி விடுகின்றனர். அப்படியல்ல , நீங்கள் கவனத்துடன் இருக்க வேண்டும். நீங்கள் உறங்கினால் ஒன்றும் நடக்காது. மறுபுறம் நீங்கள் சோம்பலுடன் இருந்தால் ஒன்றும் நடக்காது. நீங்கள் கவனமாக, ஏற்பதற்குத் தயாராக, முழு விழிப்புடன் இருக்க வேண்டும். முயற்சியே இல்லாது – முற்றிலும் முயற்சியில்லாது. நீங்கள் முற்றிலும் முயற்சியற்று இருந்தால் தியானம் சிறப்பாக அமையும். உங்கள் பிரச்சனைகளைப் பற்றியே சிந்திக்காதீர்கள். எந்த சக்கரம் குறையுடன் இருந்தாலும், எதுவாக இருந்தாலும், உங்களை அதற்கு உட்படுத்தினால் போதும். சூரியன் ஒளி பிரகாசிக்கும் போது, சூரியனுக்கு இயற்கை தன்னை Read More …