பேச்சு, கருத்தரங்கு நாள் 1, ஷூடி முகாம், யுகே, கருத்தரங்கு நாள் 1. உள்ளாய்வு மற்றும் தியானம் Shudy Camps Park, Shudy Camps (England)

இந்த ஆண்டு நாங்கள் இங்கிலாந்தில் பொது நிகழ்ச்சிகளைக் கொண்டிருக்க மாட்டோம், ஏனெனில் சில சூழ்நிலைகளும் உள்ளன. ஆனால், ஏதோ ஒரு வகையில் அல்லது வேறு விதமாகவோ, நமது திட்டங்களை மாற்றும் சூழ்நிலை ஏற்படும் போதெல்லாம், அந்த மாற்றத்திற்குப் பின்னால் ஒரு நோக்கம் இருக்கிறது என்பதை நாம் உடனடியாக அறிந்து கொள்ள வேண்டும், அதை நாம் உடனடியாக திறந்த இதயத்துடன் ஏற்றுக்கொள்ள வேண்டும் – தெய்வீகம் நாம் மாற வேண்டும் என்று விரும்புகிறது. நான் ஒரு சாலையில் செல்கிறேன் என்று வைத்துக் கொண்டால், மக்கள், ”நீங்கள் வழியை தவறவிட்டீர்கள் அன்னையே” என்று கூறுவார்கள். அது பரவாயில்லை. நான் ஒருபோதும் தொலைவதில்லை, ஏனென்றால் நான் என்னுடன் இருக்கிறேன்! ஆனால் நான் அந்த குறிப்பிட்ட சாலையில் செல்ல வேண்டியிருந்தது. அதுதான் விஷயம். நான் அதைச் செய்ய வேண்டியிருந்தது, அதனால்தான் நான் அந்த சாலையில் இருக்கவில்லை, நான் என் வழியை தவறவிட்டேன். அத்தகைய புரிதல் உங்களிடம் இருந்தால், உங்கள் இதயத்தில் அந்த திருப்தி இருந்தால், நீங்கள் நினைப்பதை விட வாழ்க்கை மிகவும் மதிப்பு வாய்ந்தது என்பதை நீங்கள் காண்பீர்கள். இந்த ஆண்டு கண்டிப்பாக பொது நிகழ்ச்சிகளை நடத்த முடிவு செய்தோம், மேலும் நம்மால் பொது நிகழ்ச்சிகளை நடத்த முடியவில்லை.இதன் காரணம் என்ன? என்று நான் யோசித்தேன். எனவே நாம் ஒருங்கிணைக்க வேண்டும் என்பதே காரணம் ஆகும். உயிருள்ள மரமான ஒரு மரத்தின் வளர்ச்சியில், அது ஒரு குறிப்பிட்ட திசையில் ஒரு புள்ளி வரை நகர்கிறது, ஒரு மாற்றம் ஏற்படும் வரை. ஏனென்றால் அந்தப் பக்கம் சூரியன் வராமல் இருக்கலாம், ஒருவேளை நீர் நிலைகள் வராமல் இருக்கலாம், அதனால் அவை மாறத் தொடங்குகின்றன. அதே போல, நாம் இறைவனின் கைகளில் இருக்கிறோம் என்பதை ஒருவர் புரிந்து கொள்ள வேண்டும், மேலும் சில திட்டங்கள் மாற்றப்பட்டால், அது நம்மீது மீண்டும் பிரதிபலிக்கிறது என்றால், ஏன் என்று நாம் பார்க்க வேண்டும். அது ஏன் என்பதை தெரிந்துகொள்ள நாம் ஒருங்கிணைக்க வேண்டும். சஹஜ யோகிகளின் ஒருங்கிணைப்பு மிகவும் முக்கியமானது. முதலில் உங்களை ஒருங்கிணைக்க, நீங்கள் தன்னாய்வு செய்து கொள்ள வேண்டும். நீங்கள் உங்களுக்குள் உள்ள ஒளியை பிரதிபலிக்கவும் மற்றும் நீங்களே உங்களை பார்த்துக்கொள்ளவும் நீங்கள் தன்னாய்வு செய்து கொள்ள வேண்டும்: சஹஜ யோகாவில் இதுவரை என்ன செய்துள்ளீர்கள்? நீங்கள் எங்கே இருந்தீர்கள், எவ்வளவு தூரம் சென்றிருக்கிறீர்கள் , மேலும் நீங்கள் எவ்வளவு தூரம் செல்ல வேண்டும்? Read More …