பிறந்தநாள் பூஜை உரை, டெல்லி, இந்தியா பிறந்தநாள் பூஜை: நீங்கள் உண்மையிலேயே உங்கள் நாட்டை நேசித்தால், நீங்கள் ஒருபோதும் நேர்மையற்றவராக இருக்க முடியாது New Delhi (India)

இன்று, எனது எழுபத்தி எட்டாவது பிறந்தநாளைக் கொண்டாட நீங்கள் அனைவரும் முடிவு செய்துள்ளீர்கள். குழந்தைகளின் பிறந்த நாளுக்கு அன்பான கரங்களுடன் பலூன்கள் கட்டுவது போல் கட்டியிருக்கிறீர்கள். நேற்று, நான் சொன்னது போல், உங்களைப் பற்றி நீங்கள் கண்டறிய வேண்டும். நீங்கள் என்னை நேசிப்பது போல், மற்றவர்களை எவ்வளவு நேசிக்க முடியும் என்பதை அறிய முயற்சி செய்யுங்கள். சுயபரிசோதனை மூலம் நீங்கள் மற்றவர்களை எவ்வளவு நேசிக்கிறீர்கள், மற்றவர்களிடம் எவ்வளவு அக்கறை காட்டுகிறீர்கள் என்பதை கண்டுபிடிக்க மிகவும் எளிதாக இருக்கும். அப்படி நடந்தால், சகஜ யோகாவில் கூட பல பிரச்சனைகள் விரைவில் தீர்க்கப்படும். சஹஜ யோகாவில் இருக்கும் மக்கள் பணத்தின் மீது இன்னும் பெரியதாக விருப்பம் கொண்டிருக்கிறார்கள் என்று எனக்குச் சொல்லப்படுகிறது. கொஞ்சம் பணம் சம்பாதிக்கும் இடம் என்று நினைக்கிறார்கள். எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. நீங்கள் உண்மையில் வேலை செய்யக்கூடிய பகுதி இதுவல்ல. நீங்கள் எந்த நேரத்திலும் வெளிப்படுவீர்கள். மாறாக சகஜ யோகாவில் உங்கள் சக்திகளைப் பற்றி நீங்கள் கவலைப்படுகிறீர்கள் என்றால் தலைவர்கள் மற்றும் துணைத் தலைவர்கள் என்னவென்று எனக்கு தெரியாது, பின்னர் நீங்கள் துரதிர்ஷ்டவசமாக தவறாக நினைக்கிறீர்கள். அந்த இடம் இது இல்லை. அதற்காக நீங்கள் அரசியலில் சேரலாம். அல்லது பணம் சம்பாதிப்பதற்காக நீங்கள் ரேஸ் கோர்ஸ் அல்லது சில இடங்களுக்கு செல்லலாம். நீங்கள் சகஜ யோகத்திற்கு வருகிறீர்கள் என்றால், நீங்கள் பெற வேண்டியது அன்பின் கடல் உங்கள் இதயத்தில் மற்றும் மற்றவர்களிடமும் அதைத் தேடுங்கள். எல்லாவற்றையும் மிகவும் சீராக, அழகாகச் செய்ய உதவும் அன்பு இது. நான் எப்போதும் சொல்வது போல், நீங்கள் உங்கள் நாட்டை உண்மையாக நேசிக்கிறீர்கள் என்றால், நீங்கள் ஒருபோதும் நேர்மையற்றவராக இருக்க முடியாது. உங்களுக்கு வேறு எந்த விருப்பமும் இருக்காது நீங்கள் சுதந்திரமாக மற்றும் உங்கள் நாட்டுக்காக நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்கள் என்பதை தவிர. இந்த நாட்டில் மாபெரும் தியாகிகளை பெற்றுள்ளோம். ஒருவேளை உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம், உங்களில் சிலருக்கு. சித்திரவதையான வாழ்க்கையை அவர்கள் வாழ்ந்த விதமானது, அவர்கள் தங்கள் நாட்டை நேசித்ததால் தான் நடந்தது . உங்கள் நாடு ஆன்மீக நாடாகும். இது நீங்கள் முழுமையாக அனுபவிக்கும் நாடு. அமைதியைத் தவிர வேறெந்த தொந்தரவும் இல்லாத நாடு அது. மேலும், நீங்கள் அந்த நாட்டை நேசிக்கும்போது, எப்படி இந்த மாதிரியான முட்டாள்தனமான யோசனைகளை நீங்கள் செய்து கொண்டிருக்க முடியும் பணத்திற்காகவும் அதிகாரத்திற்காகவும் அதற்கெல்லாமா? என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. Read More …

The Role of Tongue, Sight and Feet in Spiritual Evolution New Delhi (India)

ஒரு தாயாகவும் குருவாகவும் இருப்பது எவ்வளவு கடினம் என்பதைப் பற்றி நான் சொல்லிக் கொண்டிருந்தேன். ஏனென்றால் இரண்டும் மிகவும் முரண்பாடான செயல்பாடுகள். உங்கள் இரட்சிப்பின் பொறுப்பாளராக இருக்க விரும்பும் ஒரு நபருக்கு, விசேஷமான , மோட் க்ஷ தாயினியாக [விடுதலை வழங்குபவர்], இருப்பது மிகவும் கடினம். பாதையானது மிகவும் மென்மையாகவும், ஏமாற்றும் விதமாகவும் இருப்பதால் நீங்கள் அனைவரும் தாங்களாகவே வந்து கடந்து செல்ல வேண்டும். நீங்கள் இந்த பக்கமாகவோ அல்லது அந்த பக்கமாகவோ விழுந்தால் உங்களுக்கு பேரழிவு ஏற்படும். உங்கள் ஏறுதலை நான் கவனித்து வருகிறேன் ஒரு தாயின் இதயபூர்வமான அன்புடனும் குருவின் வழிகாட்டுதலிலும் நீங்கள் மேலே வருவதை நான் காண்கிறேன். பின்னர் மக்கள் கீழே விழும் காட்சிகளைப் பார்க்கிறேன் . நான் அவர்களிடம், “மேலே வா” என்று சொல்ல முயற்சிக்கிறேன். சில நேரங்களில் நான் கத்துகிறேன், சில நேரங்களில் நான் அவர்களை இழுக்கிறேன், சில நேரங்களில் நான் அவர்களை நேசிக்கிறேன், அவர்களை அரவணைப்பேன். உனக்குள்ளேயே நீயே தீர்மானிக்க முடியும், நான் உன்னிடம் எவ்வளவு உழைத்தேன், உன்னை எவ்வளவு நேசித்தேன் என்று. ஆனால் நீங்கள் உங்களை எவ்வளவு நேசிக்கிறீர்கள் என்பதுதான் முக்கியம். ஒரு சஹஜ யோகியைப் பொறுத்தவரை, முழு விஷயத்தையும் சாட்சி பாவனையுடன் சக்தியால் தீர்மானிக்க வேண்டும் என்று நான் உங்களுக்குச் சொல்லியிருக்கிறேன். இப்போது சாட்சிபாவனை சக்தியானது அது பேசாமல் அமைதியாக இருக்கிறது . நீங்கள் மிகவும் பேசக்கூடிய நபராக இருந்தால், அது உங்களுக்கு அதிகம் உதவப்போவதில்லை. நீங்கள் சமநிலையில் இருக்க வேண்டும். இந்த அவதாரத்தில் முதன்முறையாக நான் பேசத் தொடங்கினேன், இந்த வகையான பேச எனக்குப் பழக்கமில்லை என்பதால் நான் மிகவும் கஷ்டப்படுகிறேன். எனவே, உங்களைப் பொறுத்தவரை, நீங்கள் அதிகம் பேசாமல் இருப்பது அவசியம், நீங்கள் பேச விரும்பும் வரை பேசாமல் இருப்பது அவசியம். மேலும் பேசும் மிகச் சில வாக்கியங்கள், தீர்க்கமானவையாக இருக்க வேண்டும் . நான் முன்பு சொன்னது போல, கவனச்சிதறல்களின் அனைத்து உறுப்புகளுக்கும் நாக்கு தான் தலைவன். உங்கள் நாக்கை நீங்கள் கட்டுப்படுத்த முடிந்தால், நீங்கள் மற்ற அனைத்திலும் தேர்ச்சி பெற்று விடுவீர்கள். ஏனென்றால் நாவுக்கினியவையாக இருக்கும். உதாரணமாக, நீங்கள் ஒரு பெண்ணைப் பார்க்கிறீர்கள்: ஆனால் அவளின் பேச்சு இனிமையாக இல்லையென்றால், அவள் அழகாக இருக்கலாம், ஆனால் நீங்கள் அவளைப் பார்க்க விரும்பவில்லை. அவள் ஒரு நபரைப் பற்றி, தீர்மானிக்கிறாள், அவளுடைய நாக்கு தீர்மானிக்கிறது. நீங்கள் சிறிது உணவை சாப்பிட Read More …