மஹாமாயா பூஜை உரை, நியூசிலாந்து. ஸ்ரீ மஹாமாயா பூஜை: நாம் அனைவரும் அவரது உடலில் இருக்கிறோம் Auckland (New Zealand)

எனது முன்னோர்களான ஷாலிவாஹனர்களின் நாட்காட்டியின்படி புத்தாண்டு தினத்தின் முதல் நாள் இன்று. மேலும் மகாராஷ்டிரா முழுவதும், இதை புத்தாண்டு தினமாகவும், எதையும் தொடங்குவதற்கான சிறந்த நாளாகவும் கருதப்படுகிறது. எனவேதான் இன்று நான் மஹாமாயா பூஜை செய்ய முடிவு செய்துள்ளேன். மஹாமாயாவைப் பற்றி நான் ஒருபோதும் பேசியதில்லை, ஏனெனில் அது பேசப்படவோ அல்லது சொல்லப்படவோ கூடாது – எல்லோரும் சொல்வது போல் இது ஒரு ரகசியம். இது சஹஜ யோகத்தின் அடிப்படை என்பதை நான் சொல்ல வேண்டும், ஏனெனில் இது விவரிக்கப்பட்டுள்ளது, தேவி சஹஸ்ராரத்தில் வரும்போது, அவரே சக்தி, அவரே மஹாமாயா – “சஹஸ்ராரத்தின் மஹாமாயா,” என்று ஏற்கனவே விவரிக்கப்பட்டுள்ளது. அவரே மஹாமாயாவாக இருக்க வேண்டும், அதாவது, அவர் தன்னை முழுமையாக மறைத்துக் கொள்ள வேண்டும். ஆரம்பத்தில் யாராலும் அவரை தேவியாக அறிய முடியாது; அவர்கள் விழிப்புணர்வு பெற்றாலும், அதுவே அவர்களின் முடிவாக இருக்கக்கூடாது. அதற்குப் பல காரணங்கள் உள்ளன. முதல் விஷயம் அவர் செய்ய வேண்டிய பணி. மஹாமாயாவின் பணி விழிப்புணர்வை வழங்குவதாகும். இப்போது நான் புலியின் மீது கையில் வாளுடன் வந்திருந்தால் யாரும் என் அருகில் நின்றிருக்கக்கூட மாட்டார்கள். நீங்கள் அனைவரும் என்னை விட்டு விலகி ஓடியிருப்பீர்கள். வேறு எந்த வடிவத்தில் தேவி வந்திருந்தாலும், அவர் செய்ய வேண்டியதை அவரால் செய்திருக்க முடியாது. மேலும், அவர் கிறிஸ்துவின் தாயாகவோ அல்லது ஸ்ரீ சீதாஜியாகவோ வந்திருந்தால் அல்லது நீங்கள் பாத்திமாபீபியைச் சொல்லலாம் – அவர்கள் அனைவரும் தங்கள் வாழ்க்கையை முடித்துக் கொண்டனர். நான் சொல்வது, அவர்கள் அவ்வளவு சீக்கிரம் இந்த உலகத்தை விட்டு வெளியேற வேண்டியிருந்தது. அவர்களால் எந்த வேலையும் செய்ய முடியவில்லை. இப்போது இந்த வேலை, மற்றவர்களுக்கு விழிப்புணர்வு கொடுப்பது என்பது ஒரு கடினமான வேலை, மிகவும் சிக்கலானது. இது ஏதோ ஒரு பெரிய ஆளுமையால் செய்யப்பட வேண்டியது என்று யாரும் உணராத வகையிலும் அல்லது அதில் மிகுந்த பிரமிப்போ அல்லது பயமோ ஏற்படாதவாறும் செய்யப்பட வேண்டும். எனவே மக்கள் நெருங்கி வருவதற்காக மஹாமாயா அவதாரமாக வர வேண்டியிருந்தது. மேலும், இது ஒரு நன்மையைக் கொண்டுள்ளது, மிகச் சிறந்த நன்மை என்னவென்றால், ஒரு எளிய நபராக, ஒரு இல்லத்தரசியாக, விழிப்புணர்வு கொடுக்கத் தொடங்கும் போது, மக்கள் திகைத்துப் போகின்றனர். மேலும் அவர்கள் நினைப்பார்கள், “அவராலேயே அதைச் செய்ய முடிந்தால், நாம் ஏன் அதைச் செய்யக் கூடாது? என்று. எல்லாவற்றிற்கும் மேலாக, அவர் ஒரு சாதாரண Read More …