பேச்சு, கருத்தரங்கு நாள் 1, ஷூடி முகாம், யுகே, கருத்தரங்கு நாள் 1. உள்ளாய்வு மற்றும் தியானம் Shudy Camps Park, Shudy Camps (England)

இந்த ஆண்டு நாங்கள் இங்கிலாந்தில் பொது நிகழ்ச்சிகளைக் கொண்டிருக்க மாட்டோம், ஏனெனில் சில சூழ்நிலைகளும் உள்ளன. ஆனால், ஏதோ ஒரு வகையில் அல்லது வேறு விதமாகவோ, நமது திட்டங்களை மாற்றும் சூழ்நிலை ஏற்படும் போதெல்லாம், அந்த மாற்றத்திற்குப் பின்னால் ஒரு நோக்கம் இருக்கிறது என்பதை நாம் உடனடியாக அறிந்து கொள்ள வேண்டும், அதை நாம் உடனடியாக திறந்த இதயத்துடன் ஏற்றுக்கொள்ள வேண்டும் – தெய்வீகம் நாம் மாற வேண்டும் என்று விரும்புகிறது. நான் ஒரு சாலையில் செல்கிறேன் என்று வைத்துக் கொண்டால், மக்கள், ”நீங்கள் வழியை தவறவிட்டீர்கள் அன்னையே” என்று கூறுவார்கள். அது பரவாயில்லை. நான் ஒருபோதும் தொலைவதில்லை, ஏனென்றால் நான் என்னுடன் இருக்கிறேன்! ஆனால் நான் அந்த குறிப்பிட்ட சாலையில் செல்ல வேண்டியிருந்தது. அதுதான் விஷயம். நான் அதைச் செய்ய வேண்டியிருந்தது, அதனால்தான் நான் அந்த சாலையில் இருக்கவில்லை, நான் என் வழியை தவறவிட்டேன். அத்தகைய புரிதல் உங்களிடம் இருந்தால், உங்கள் இதயத்தில் அந்த திருப்தி இருந்தால், நீங்கள் நினைப்பதை விட வாழ்க்கை மிகவும் மதிப்பு வாய்ந்தது என்பதை நீங்கள் காண்பீர்கள். இந்த ஆண்டு கண்டிப்பாக பொது நிகழ்ச்சிகளை நடத்த முடிவு செய்தோம், மேலும் நம்மால் பொது நிகழ்ச்சிகளை நடத்த முடியவில்லை.இதன் காரணம் என்ன? என்று நான் யோசித்தேன். எனவே நாம் ஒருங்கிணைக்க வேண்டும் என்பதே காரணம் ஆகும். உயிருள்ள மரமான ஒரு மரத்தின் வளர்ச்சியில், அது ஒரு குறிப்பிட்ட திசையில் ஒரு புள்ளி வரை நகர்கிறது, ஒரு மாற்றம் ஏற்படும் வரை. ஏனென்றால் அந்தப் பக்கம் சூரியன் வராமல் இருக்கலாம், ஒருவேளை நீர் நிலைகள் வராமல் இருக்கலாம், அதனால் அவை மாறத் தொடங்குகின்றன. அதே போல, நாம் இறைவனின் கைகளில் இருக்கிறோம் என்பதை ஒருவர் புரிந்து கொள்ள வேண்டும், மேலும் சில திட்டங்கள் மாற்றப்பட்டால், அது நம்மீது மீண்டும் பிரதிபலிக்கிறது என்றால், ஏன் என்று நாம் பார்க்க வேண்டும். அது ஏன் என்பதை தெரிந்துகொள்ள நாம் ஒருங்கிணைக்க வேண்டும். சஹஜ யோகிகளின் ஒருங்கிணைப்பு மிகவும் முக்கியமானது. முதலில் உங்களை ஒருங்கிணைக்க, நீங்கள் தன்னாய்வு செய்து கொள்ள வேண்டும். நீங்கள் உங்களுக்குள் உள்ள ஒளியை பிரதிபலிக்கவும் மற்றும் நீங்களே உங்களை பார்த்துக்கொள்ளவும் நீங்கள் தன்னாய்வு செய்து கொள்ள வேண்டும்: சஹஜ யோகாவில் இதுவரை என்ன செய்துள்ளீர்கள்? நீங்கள் எங்கே இருந்தீர்கள், எவ்வளவு தூரம் சென்றிருக்கிறீர்கள் , மேலும் நீங்கள் எவ்வளவு தூரம் செல்ல வேண்டும்? Read More …

Guru Puja: Cosmic Consciousness Gmunden (ஆஸ்திரியா)

உங்கள் அன்பின் இந்த அழகிய வெளிப்பாட்டைக் கண்டு பிரமிக்கிறேன். அத்தகைய கவனமும் படைப்பாற்றலும். வெளிப்புற இயற்கையை இங்கு மிகவும் அழகாக உருவாக்கபட்டதற்கு நான் மிக அதிர்ஷ்டசாலியான குருவாக இருக்க வேண்டும். இதைப் பார்த்த பிறகு, எந்த குருவும் தனது இதயம் முழுமையாக உருகுவதில் இருந்து தப்ப முடியாது. உண்மையில், என் சீடர்கள் மிகவும் புத்திசாலி மக்கள். அவர்களால் எந்த குருவையும் நடுநிலையாக்க முடியும். இதனால், சீடரை ஒழுங்குபடுத்துவதற்கு பயன்படுத்தப்படும் குருவின் கோல், தாமரையாக உரு மாறும். ஒவ்வொரு முறையும் சஹஜ யோகிகள் தெய்வீகத்துடன் ஒன்றாவதைப் பார்ப்பது ஒரு அழகான ஆச்சரியம். அவர்களின் மகிழ்ச்சியின் வெளிப்பாடு மற்றும் தெய்வீகத்தின் கருத்தாக்கத்தை நீங்கள் மிக தெளிவாகக் காணலாம். இன்று நான் அமர்ந்திருப்பது போல தான், நீங்கள் அனைவரும் தேவனுடைய ராஜ்யத்தில் அமர வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நாம் இப்போது பிரம்மா எனும் அந்த அண்ட விழிப்புணர்வின் ஒரு அங்கமாக இருப்பதை உணர வேண்டும் உருவாக்கி, ஒருங்கிணைத்து, அனைத்து விவரங்களையும் திட்டமிட்டு, அதன் வெளிப்பாட்டின் மூலம் அதன் படைப்பை நேசிப்பது அந்த அண்ட விழிப்புணர்வு ஆகும். நாம் அதில் இருப்பது மட்டுமின்றி, அதைக் கையாளவும் முடியும். நாம் அதை ஒழுங்குபடுத்தலாம், அதைப் பயன்படுத்தலாம், அதைச் செயல் படுத்தலாம். இந்த நிலையில் நாம் இருந்தால் தான் நாம் குரு ஆவோம். குரு என்றால் பூமியின் ஈர்ப்பு விசையை விட உயர்ந்தது, அல்லது பூமியின் ஈர்ப்பை விட வலிமையானது. பூமியின் ஈர்ப்பு என்றால் என்ன? மேலோட்டமாக பார்த்தால், நம்மை தரையில் வைத்திருக்க நம் உடலில் செயல்படும் ஒரு விஷயமாக புரிந்துகொள்கிறோம் பல யானைகள் நம் தலையில் நிற்ககும் ஒரு பெரிய வளிமண்டலம் உள்ளது மேலும் பூமிஅன்னை நம்மை தன்னை நோக்கி இழுக்கும் ஈர்ப்பு உள்ளது. மேலோட்டத்தில் நாம் ஈர்ப்பு விசையை இவ்வாறுப் புரிந்துகொள்கிறோம் மேலோட்டத்தில் சில சமயங்களில் குரு தத்துவத்தையும் புரிந்துகொள்கிறோம் மேலோட்டமாக பார்த்ததால், ஒரு நல்ல குரு என்பவர், உங்களை அவரை நோக்கி ஈர்க்கும் நபர் என்று நினைக்கிறோம். உடல் ஈர்ப்பு, அல்லது மேலோட்டமான மற்ற ஈர்ப்புகளாக இருக்கலாம். அதனால்தான் மக்கள் எப்போதும் தவறான, மேலோட்டமான குருக்களிடம் செல்கிறார்கள். ஆனால் பூமி அன்னையின் ஈர்ப்புக்கு மேலே இருப்பவர், வெளிப்புற, நுட்பமான, மிக நுட்பமான, மற்றும் மிக மிக நுட்பமானவற்றிக்கும் – இந்த எல்லா ஈர்ப்புகளுக்கும் அப்பால் இருப்பவர் – அவர் தான் குரு. பொதுவாக மக்கள் உடல் உறுப்பு, உடல் Read More …